Monday, 30 July 2012

அம்மா..!இரவோடு சன்டையிட்டது 
விழிகள் 
உறக்கத்திற்காக கெஞசியது 
வலிகள்
அடுத்த நாளின்
தொடக்கத்தில்
அவள் உளறினால்
அந்த அடுப்பில பால் இருக்கு குடிச்சிரென்று
குடித்துவிட்டு அவளருகில் 
தலைசாய்த்தேன் மீன்டும் மழலையாய் 
வலிகள் தொலைந்து
உறக்கத்திற்கான
நிம்மதி தொடங்கியது
தொட்டில் குழந்தையாய்
உறங்கி கிடந்தேன் நான்...!
பசியை தொடர்ந்து 
நினைவில் 
உணவுக்குமுன்
அவள் தெரிவாள் ஆறாம்அறிவில் அன்பாய்
அம்மா !


Saturday, 28 July 2012

"மழை"உதடுகளை குவிக்க தொடங்கி விட்டாய் முதல் முத்தம் எனக்கா                         
எனைத்தாங்கும் அவளுக்கா.... மழை!!!


இனி உன்னை 
வரவேற்பதாய்
இல்லை
ஒவ்வோரு முறையும்
உதடுகளை குவித்து ஏமாற்றுகிறாய்
மழலையைப்போல் காத்திருந்து
கடைசியில் ஏமாற்றமே மிச்சம்
சத்தங்களும் இல்லை உன் வாசமும் நூகர
முடியவில்லை
உயீர் குளிர்விப்பாய் 
என்றேன்னினேன்
நீ அனலில் தவிக்கவிடுகிறாய்
இனி உன்னை வரவேர்க்கபோவதில்லை
உன் பேச்சு கா...
"மழை"ஸ்ஸ்ஸ...் 
அமைதி 
அமைதி 
அவர்கள்
முத்தமிடப்போகிறார்கள்
"மழை"


துளி விடு தூது விடுகிறாய் 
நான் இன்னும்
ஒளிந்துகொண்டுதான் இருக்கிறேன்
நாம் பழம் விட்டு கொள்ள நீ இன்னும் பலமாக வா
தூளி முத்தம் போதாது எனக்கு கடலளவு காதலோடு காத்திருக்கிறேன் நான்...
"மழை"


கண்ணாமுச்சி ஆடிக்கொண்டிருந்தோம் சிறுபிள்ளைகளாய்
உன்னை 
விரலால்
தொட்டதற்கு மின்னலாய் சிரித்து கேளி
செய்தாய் 
செல்ல கோபங்கள்
கரைய தொடங்கின
இனி உச்சி முதல் 
பாதம் வரை உன் சொந்தம் உயிரோடு கலந்துவிடு....
"மழை"


போதும் என்றா இல்லை தீர்ந்து விட்டதா 
முத்தங்கள்
அமைதி காக்க தொடங்கினாய் நீ
வீடு செல்ல தொடங்குகிறேன் நான் 
அன்னையவள்
முந்தானையில் ஒற்றி எடுத்துக்கொள்வாள்
அவளுக்கு 
நான் கொடுக்க
மறந்த முத்தங்களேன....
"மழை".......joe.!

Tuesday, 17 July 2012

லூசு..!


டேய் ஏன்டா என்னை இந்த
மலை உச்சிக்கு
கூட்டிட்டு வந்த,


நீதான
காதலை நீருபின்னு சொன்ன
அதான் நீருபிக்கலாம்னு...


எப்படி நீருபிக்க போற
லூசு இங்க
இருந்து குதிக்க
போறியா....


ஆமா இதோ இத்தனை பெரி
  உலகம்

எனக்கு இருந்தும்
உன்னை மட்டுமே நேசிக்க
முடிந்தது என்னால் 


நீயும்
என் காதலை நம்ப
மறுக்கிறாய்... 

அட
லூசு இப்பதான்டா எனக்கு
சந்தேகமா இருக்கு இவ்ளோ பெரிய
உலகத்தை விட
என்னை நேசிப்பதாய்
சொல்லும் நீ உலகத்தின்
மடியில்தான் சாக
துணிகிறாய் ...

எனக்காக
வாழவும் என்னில்
சாகவும்
நினைக்கவில்லை...


அப்படின்னா எப்படி நீருபிப்பது.?
லூசா நீ ஆம்பிளைங்காள மட்டும்
எப்படி கடுகளவு வார்த்தையை கடலளவு கொண்டு போகமுடியுது,
ஏன்டா உன்னை நம்பாமலா இத்தனை உயரம்
வந்தேன்...


மன்னிப்பு கேட்க
மன்டியிடடேன்
கைகளை விரித்து ஐ லவ்
யூ என்றேன்,


காதலோடு முகத்தை நேருங்க
தொடங்கினாள் அவள்...joe!

தொலைந்து போன முத்தங்கள்....!


தொலைந்து போன முத்தங்கள்....

எனக்கான அவளும் அவனும்
என் வருகைக்காக விழித்திருந்ததும் காத்திருந்ததும் இப்போது கதையாய் சொல்ல கேட்டேன் ....

கொட்டும் மழை என்றும் பாராமல் எட்டி உதைத்தேனாம் அவளின் அடி வயிற்றை அந்த அர்த்த ராத்திரியில் எப்படியேல்லாம் தவித்தாயோ நீ ,

வலியால் அவள் துடிக்க எங்கே யாரை கூப்பிட்டாயன இன்றுவரை நான் கேட்டதே இல்லை
அவளின் வலி அலறல் சத்தம் கேட்டு உன் இதய துடிப்புகளின் அலறல் பெரும் சத்தமாய் என் காதுகளில் கேட்கிறது இப்போது...

உண்ட தாய்பாலும் வயித்தில நிக்காதாம் வாடி வதங்கி எலிகுட்டியாய் கிடப்பேனாம் உணவின்றி தவிக்கையில் பால் பவுடர் வாங்க பல மைல் அலைந்தாயாம்....
உருப்படியான உயீரான பின்பு உறங்கி கொண்டிருந்தாலும் உதட்டருகே உமிழ் நிரோட ஒட்டிருக்கும் எனக்கு என்று வாங்கிவந்த தின்பன்டம் விடிஞ்சதும் தெரியும் என்னதுன்னு...

எல்லாம் எனக்காக செய்த உன் உதடுகள் என்னை முத்தமிட்ட ஈரப்பதங்ளை இன்றுவரை காணவில்லை

உடல் எங்கும் தேடிப்பார்த்தேன் முத்தங்களின் அடையாளங்களை காலம் தின்றிருந்தது

நான் தொலைத்த முத்தங்களை எனக்கு நினைவு படுத்தவேனும் மின்டும் ஒருமுறை முத்தமிடு அப்படியாவது உன் குரலின் அழுத்தத்தை உணரட்டும் என் உயீர்...

இன்றும் அவளுக்கான முத்தங்கள் நானும் எனக்கான முத்தங்களை அவளும் ஆண்டுக்கு பலமுறை கிடைத்தாலும் பிறந்தநாள் பரிசாய் கொடுத்துவிடுகிறாள்

நீ மட்டும் தலையில் கைவைத்து கடவுளாகிறாய் உயிர் கொடுத்த கடவுள் நீயாகவே இரு தவறில்லை கடவுளிடம் குழந்தைகள் கேட்பது வரம் அல்ல
முத்தங்கள் மட்டுமே...! joe!
 

உன் பெயர் மட்டும் ஏனோ மழை...!சில நாட்களாய் நான் உறங்கிய பின் வருகிறாய் என் மீது உனக்கு என்ன கோபம்..


ஒவ்வோருமுறையும் உன் வருகையை கைகள் விரித்து உதடுகளால் முத்தமிட்டு வரவேற்கிறேன் என் உயிரால் கட்டி தழுவுகிறேன்...


நீயோ பகலில் வர மறுக்கிறாய் இரவிலும் வந்த வேகத்தில் வீடு திரும்பி இருக்கிறாய்....

நீ முத்தமிட்டு கோஞ்சி விளையாட பச்சை புள்வெளியும் இல்லை ஒட்டி உறவாட எந்த மரமும் இல்லை என்ற வருத்தமா...

இல்லை உலகம் உன்னை கண்டதும் ஒடி ஒழிவதால் உனக்கு கோபமா மன்னித்து விடு அந்த கற்சுவர் கைதிகளை அவர்கள் திருந்தா விட்டாலும் வருந்தி கொண்டுதான் இருக்கிறார்கள்உனக்காக...

நான் இருக்கிறேன் உன்னை உயீராய் சுவாசிக்க... உறவாய் நேசிக்க...

இன்றும் இரவு வந்து என்னை ஏமாற்றாதே கனவில் வர நீ என் காதலி அல்ல கடைசிவரை என் உயிரில் இருக்கும் உயீர் நீர்
உன் பெயர் மட்டும் ஏனோ மழை...! joe.!

யாருமற்ற விடுமுறை நாள்....!யாருமற்ற விடுமுறை நாள்....!

தனிமையில் கட்டிலின் அடிமையாய் மாலை வரை கட்டிலுக்கு சுமையாய்....

வீடும் வெறுமையாகி சிறைச்சாலையாய் காட்சியளித்தது...

வெறுப்பில் வெளியே எட்டிப்பார்தேன்
உலகமும் அமைதியாய் ஒய்வில் ....
வீதி உலா செல்ல தொடங்கினேன்
காற்று கூட புக முடியாத சுவர்கற்களாய் இடைவேளியற்ற வீடுகள்....

அதிகபட்ச வீடுகளின் உள்ளே ஒரு குடும்பம் தொலைகாட்சியில் தொலைந்திருந்தது
வாசலில் மட்டும் ஏனோ தேடுவாரறற்று அநாதையாய் மரணத்தின் வருகைக்காக காத்துக்கொண்டு வயதானவர்கள்....

இன்னும் வெறுமையை உணர்ந்த நொடி தென்றலாய் காற்று துணைக்கு வந்தது....

தோழனாய்
விழியால் பெசத்தொடங்கினேன் இலைகளின் அசைவுகளோடு
உலகம் அழகாக தொடங்கிய தருனம் ...
சுவர்சிறைகளுக்குள் அடைபட்டிருக்கும் அனைவரையும் அழைத்து...
உங்கள்
உலகம் அநாதையாய் கிடக்கறது கவனிப்பாறற்று பாருங்கள் என்று கூற எண்னிய தருனம் சாலையில் நாய்கள் மட்டுமே இருந்தன....

யாருக்கு தெறியும் நான் சென்ற உலகம் மொழி,மதம் இனம்,ஐாதி இல்லா உணர்வுகள் மட்டுமே உள்ள உயிர்களின் வீடாகவும் இருக்களாம்......joe.!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...