Monday 29 October 2012

மழை ! ! !



மழை பிடித்து
விளையாடலாம்
வாவென அழைத்தால்
உன் கைபிடித்தால்
போதுமெனச் சொல்லி மறுக்கிறாள்..!


நீ விழித்தால்தான்
மழை
நிற்குமாம் !
அப்படியா !
இன்னும்
உன் காதலளவு
பெய்திட வில்லை இன்னும் பெய்திடச் சொல் காதலோடு !
நீ இன்னும் கொஞ்சலோடு
கெஞ்சிக் கொண்டிரு
குட்டித் தூக்கம்
தூங்கி விழிக்கிறேன் உன் குட்டி இளவரசி !

தகதப்பின் எல்லை தாண்டிய
பாதம் உள்ளிழுக்கிறாள்
பகலவன் பகலே
வேண்டாமென மறைகிறான்.!

விழித்து சோம்பல் முறிக்கிறாள்
மண் வாசனை
தொலைந்து
நாசியெங்கும்
அவள் வாசனை..!



தரை சில்லிடுவதாய்ச் சொல்லி
தோல் பற்றுகிறாள்
நெற்றியிலா
உதட்டிலா
யோசனையில்
நான்.!



தடுமாறும் விழி
அனலாய் பெருமூச்சு
இருபக்க கன்னம் தட்டி சிரிக்கிறாள்..!




கொலுசின்
முத்தொன்று
உதிர்ந்ததாய்
சொல்லி
தலை குணிந்து தேடத் தொடங்கினாள்
நான்தான் அது நான்தான் அது எனக் கெஞ்சியது மழை..!!


நீர் அள்ளி முகம் தெளித்து
என்மீது உதறுகிறாள்
தோற்றுப் போனது மழை !


தேநீர் கலக்கலாம்
வாவென
அடுப்பங்கரை
அழைக்கிறாள்
இன்று தேநீரே உணவு..!!!


Tuesday 23 October 2012

ஆதலால் ஆதலால் காதல் செய்விர்!!!


எண்பதிலும் கண்ணாமூச்சி 
ஆடலாம் காதல் இருந்தால்
ஆதலால்
ஆதலால் காதல்
செய்விர்!!!


சிறைகம்பியும்
இறகுச் சிறகும்
ஒரே இதயத்தில்
ஆதலால்
ஆதலால் காதல்
செய்விர்!!!



முத்த அரசாட்சியும்
முள் மகுடமும்
ஒரே உதட்டில்
ஆதலால்
ஆதலால் காதல்
செய்விர்!!!



கையெழுத்து காவியமாகும்
வெற்று 
காகிதமே கவிதையாகும் 
ஆதலால் ஆதலால்
காதல் செய்விர்!!!

கடைத் தெருவில்
கைகோர்த்து
ஒரு உயிர் தொலைய
ஒரு உயிர்
தேடும்
ஆதலால் ஆதலால்
காதல் செய்விர்!!!



தேர்ச்சி பெற்ற பின்பும் 
தேர்வு
எழுதி தோற்று
கெஞ்சும்
ஆதலால் ஆதலால்
காதல் செய்விர்!!!


காரணமின்றி
சிரிக்கும்
காயமின்றி
அழுதிடும்
வெறுமையை
ரசித்திடும்
தனிமை 
துணையாக்கிடும்
ஆதலால் ஆதலால்
காதல் செய்விர்!!!


பயணச் சீட்டு
பரிசாகும்
சாக்லேட்
காகிதம்
ஆயுளுக்கும்
பயணிக்கும்
ஆதலால் ஆதலால்
காதல் செய்விர்!!!



சொந்தங்கள்
மத்தியில்
இதயம்
திருட்டுப் பூனையாகும்
ஆதலால் ஆதலால்
காதல் செய்விர்!!! 


பெண்ணாய்
வெட்கபடும்
ஆணாய்
திமிரிடும்
ஆதலால் ஆதலால்
காதல் செய்விர்!!!

ஊனமில்லா
உதடுகள்
ஊமையாகி
செய்கை பாஷை
பேசிடும்
ஆதலால் ஆதலால்
காதல் செய்விர்!!!


ஒற்றை கைத் துணி
உதடுகள்
ஒற்றியெடுக்கும்
வியர்வையில் 
நனைந்திடும்
ஆதலால் ஆதலால்
காதல் செய்விர்!!!



முன்னும்
பின்னும்
இடைவெளியில்
நடக்கும்
ஒவ்வோரு அடிபாத நகர்த்தலுக்கும்
முகம் தேடி அலையும்
ஆதலால் ஆதலால்
காதல் செய்விர்!!!






இருபத்தைந்து 
வயதில்
பேரப் பிள்ளையை
குளிப்பாட்டும்
தலைவாரி பூச்சூடும்
ஆதலால் ஆதலால்
காதல் செய்விர்!!!!!

Tuesday 16 October 2012

உன் குரல் தேடி செவிகள் மெளனமாய் உன் செவிகள் தேடி உதடுகள் ஊனமாய் ..!!!

தாஜ்மஹாலில் நடப்பதாய்
சொல்கிறாய்
கொழுசின் எதிரொலி செவிசேர்ந்தது தெரியாமல்..


அலைபேசியில
ஓரிருவார்த்தை தாண்டமுடியா
நிலையில்
நான் தவித்த தவிப்புகளை
உன் தவிப்புகள்
அறிமுகமில்லா
முகமாய் பார்த்தது என்னில்..


முத்தம் கேட்டால்
சத்தம் 
கேட்குமென்கிறாள்...  
 



என்னை சிறையெடுத்த 
இமை
க் கம்பிகளை 
எண்ணிச்சொல் சிறையெடுக்க...
யார் நீயென கேட்கிறாய்
கேட்டுக்கொள்
நான் எனை எப்போதும் கேட்கும் கேள்விதான் அது..♥
காரணங்கள் சொல்லியே
சமாளிக்கிறாய்
நீ சொல்லிய
காரணங்களில்
பிடித்தது
ஒன்று மட்டுமே
காலம் முழுவதும் உன்னோடுதான் 
காத்திரு..


அடுக்கடுக்காய் குறைகளை
அடுக்கும்
உதடுகள் நாளை செவியில் இருந்து திரும்பபெறாமல்
உதடுகளை மெளனமாக்கும்...


தெரிந்தே 
கேட்கிறாய்
எவ்ளோ பிடிக்குமென
உனக்காக
நானிருக்கவும்
நீ நீயாக இருக்கவும்
எனக்கு பிடிக்கும்...
காத்திருப்புக்கள்
காத்திருக்கின்றன
உனை
பிரியும்
கணத்திற்க்காக..


காற்றில் காற்றோடு கலந்து 
சாரையாய்
ஊர்ந்து உன் வாசம் தேடி
அலைகிறது
மழையும் இல்லை வெயிலும் 
மேகங்கள்
உருகி உதிர்வதற்குள்
போர்வைக்குள் புகுந்திட இனை தேடும்
காதலாய் காலை..


காத்திருப்பின்
சோம்பலில்
மூலையில் 
முடங்கி கிடந்த
இதயம் 
சோம்பல் முறித்து
திமிரி சிரித்தது
அவள் நெருங்க
தொடங்குகிறாள்..
உன்னிடமும்
என்னிடமும்
விடுதலைக்காக
காத்திருக்கும்
இந்நாள்
உன் அழைப்பில் மட்டுமே 
சிறைக்கதவை உடைத்து 
பறக்கும்
சிறகின்றி...


காத்திருப்புகளை
பிசைந்து
பொம்மை செய்து 
விளையாட்டுப் 
பிள்ளையாய்
உடைத்தழுகிறேன்
பூட்டப்பட்ட வாசலில் காத்திருக்கும்
சிறுவனாய்....

இயர்கையை காப்போம் இயற்கையோடு இயற்கையாய் வாழ்வோம்.. !!!



மரங்களை
வெட்டி வெறுமையாக்கி
வெட்டிய
மரங்களை கதவாக்கி
மீதமானதில்
சவப்பெட்டி
செய்து
அதிலும் 
மீதமானதை 
ஏழைக்கு எரிக்க விற்று
காற்றை தொலைத்தான்..
காலிமனை
கண்ணை உறுத்த
கடனை உடனே
வாங்கி
கல்லை அடுக்கி
சன்னல் வைச்சி
கண்ணாடி போட்டு மூடி வைச்சான்
மரம் எண்ணியது
உயர்ரக
சவப்பெட்டிகளென.



மரங்களை வெட்டிவிட்டு 
கற்களை நட்டு வைத்தோம்...
அவரவர் வசதிக்கேற்ப 
கற்கள் வளர்ந்து நின்றன.....
மரம் தெலைத்தோம்

மழை தொலைந்தது,
விளை  நிலங்களை  கூறு பொட்டு
வீட்டுமனையென கூவிக் கூவி விற்றோம்.....
இன்று குடிக்க நீரின்றி தவிக்கிறோம்,
நாளை உணவின்றி தவிப்போம்,
வரும்ஏதோ ஓர்நாள் சுவாசிக்க காற்று இன்றி தவிப்போம் 
அப்பொதும் அசைவற்றே நிற்கும் நாம் நட்டுவைத்த கற்கள்.....





இரக்கமில்லாமல் இருகிப்பொன இதயங்களொடு... 
இடைவேளி இல்லா வீடுகளுக்கு மத்தியில்...
மழைக்கு ஒதுங்க சிறு தாவாரம் இல்லை
வெயிளுக்கு இளைப்பார சிறு தின்னை இல்லை
சுற்றமும் இல்லை நட்பும் இல்லை......
இன்றைய மனிதன் வாழ வீடு கட்டவில்லை 
காசு வசூலிக்க கம்பிகள் இல்லா சிறைக்கூண்டுகள் கட்டுகிறான்.....
இயற்கையை அழீத்து எந்திரமாய் வாழும் இவர்களை என்ன செய்வது ?


இப்டி ஒரே இடத்தில் கட்டினா பூகம்பம் வராம என்ன செய்யும்....

வீட்டுக்கு இரண்டு மரம் வளர்ப்போம் இயற்கையை பாதுகாப்போம்.....


அரசாங்கமே வீட்டுமனைக்கு இரண்டு மரம் வளர்த்தால் மட்டுமே வீடுகட்ட அனுமதி என்ற சட்டம் போடு,இருக்கும் வீடுகளில் மரம் வளர்தால் வீட்டுவரி குறைத்திடு,வளர்க்காத வீடுகளுக்கு வருடத்துக்கு ஒரு தொகை தன்டனையாய் வசூலித்திடு... 

இயர்கையை காப்போம் இயற்கையோடு இயற்கையாய் வாழ்வோம்.









LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...