Wednesday, 26 December 2012

நட்பு !
நன்றி என்னும்
வார்த்தையில்
தீராதது என் நான்.அவளென்று
அவனென்று
ஒன்று
இல்லவே இல்லை 
அம்மா என்னும் வார்த்தை ஒன்றேயென்று எண்னுகையில்.


கேள்விகளின்றி
தொடங்கி
கேள்விகளின்றியே முடியும் அன்பு.

#♥

ராட்டினம் போல் சுற்றும்
பொம்மையை
வேடிக்கை
பார்க்கும்
தொட்டில் குழந்தையாய்
அவர்களின்
சிரிப்புச் சத்தத்தை கேட்கும் நான்.

#♥


தொட்டில்
துணியாகிப்
போகிறது
சிலரின் நட்பு
அம்மாவின் வாசமாய்.

#♥

அம்மாவிடம் புடவை நூல் வாங்கி
தீப்பெட்டியில் 
பேசி சிரிக்கிறோம் அன்பில் நாம். 

#♥

ஒரு முத்தம்
கொடுக்கும்
ஈர்ப்பை
நேசத்தை
சிறு மெளனம் 
கொடுத்திடும்
இதயத்திற்கு
மெளனம் என்றும் 
கலையாத பேச்சு அழியாத குரல்.
#♥

Tuesday, 25 December 2012

விடைபெறுதல் இல்லா நாட்களோடு நான் உன்னால் உன்னுடன் !

கவிதையென்னும்
பெயரில் கதை எழுதுகிறாய்
உன் வார்த்தையில் 
அழகுமில்லை
கவிதையுமில்லை 
சரிதானே !
நீ இருக்கிறாய் எல்லாமுமாய் !

போடா லூசு !கடைத்தெரு 
அழைத்து சென்று
என்ன வேண்டுமென்றால்
கைகோர்த்து நட போதுமென்கிறாள்.


உள்ளொன்று
வைத்து
புறமொன்று
பேசத் தெரியா முடம் நான்.உன் சப்த நெரிசலுக்குள்
குரலொன்று அநாதையாய்
ஜன்னல் ஓர இறுக்கைக்காக ஏங்கி அலறுகிறது
உன் சப்த நெரிசலோடு இறங்கி செல்லிறாய் நான் மட்டும் பயணிக்கும் வாழ்க்கை பேருந்திலிருந்து.பிரிவில் 
அருகில்
நெருக்கத்தில் 
எனக்குள் நீ !
உன்னிடம் இழப்பதற்கு 
உனக்கான இன்னுமோர் 
நாள்தான்
நாளையும். இதயத்திலிருந்து
நழுவிச் செல்லும் (உன்) நினைவுகளை
இழுத்துப் பிடிக்கிறது 
கனவு.உன்னை ஏன் நான் தேடிக் கொண்டே இருக்கிறேன்
உன்னை தேடாவிட்டால் 
நானே இல்லை என்பதால்தான்!
உன் வருகையில்லா 
நாளோன்றில்தான்
எனக்குள் 
நீ யாரென்று
தெளிவுபடுத்தினாய்
ஆம் எனக்கு நீ நான்.விடுமுறையற்ற
வானம் உன் நினைவு.உன் நினைவு வரும்வரை
நான் உயிரோடுதான் இருந்தேன்.

காதல் சேமிப்பில் நாட்கள்
கரைகிறது
காத்திருப்பு
நீள்கிறது நாளையாய்.
எவராலும் ஏற்றுக் கொள்ளப்படாத
பாவமாய்
மூலையில் முடங்கிக் கிடக்கிறது நான்.
மீட்டேடுக்க
குரல் எழுப்புகிறேன்
உன் நினைவொன்று
தொண்டையை
கொத்தி செல்கிறது
மீன்டும் எனக்குள்ளே
புழுங்கி
நசுங்கி
வெதும்பி
கடைசியில்
கண்ணீர் துளிகளாய் கரைகிறது காலம் இப்போழுதெல்லாம்
வீதி உலா சென்று நினைவுகளை சேமிப்பது
கண்ணீரென்னும் தனிமைக்கு உணவாய் மட்டுமே.
விடைபெறுதல் இல்லா
நாட்களோடு நான்
உன்னால் உன்னுடன் !


தேடலில்லா
தனிமை வேண்டும்..!
காத்திருப்பில்லா
காதல் வேண்டும்..!
அடிமைத்தனமில்லா
அன்பு வேண்டும்..!
பேதமில்லா பாதையாய் மனிதம் வேண்டும்..!நாளையென்ற நம்பிக்கையோடு உலகம்
நான் நீயென்றே விழி மூடுகிறேன்
முடிவோ தொடக்கமோ நீயாகவே இருக்கட்டும் என்னி்ல்


தலையனையும்
உடலும்
உறங்கத் தயாராகிவிட்டது
தேவதையை
தேடிப் போன என்னைதான்
கானவில்லை.
இரவென்பது
உன் வெளிச்சத்தின்
வெட்கம்
என் இன்னுமோர் பகல்.
உன் மெளன தூண்டிலில்
சிக்கிக் கொண்ட 
மீனாய் என் குரல்.


நீ மட்டும் இருக்கும்
என்
இதயக் கூட்டிற்கு
நான் திரும்பவே இல்லை
வழி மறந்தேன் உன் நினைவால்.உன் இருப்பு கொல்கிறது
என் இருப்பு
கொள்ளாமல்.

என் கணக்கு
வாத்தியார்
நக இடுக்கில் மாட்டிக் காண்ட காதிற்கும் 
உன் விழி இடுக்கில் மாட்டி கொண்ட இதயத்திற்கும் ஒரே வலி.
மறக்க முயற்சி 
செய்வதாய் சொல்லி
மீன்டும் மீன்டும் 
உன்னயே நினைக்கிறேன்
சொல்லில் அடங்கா காதலே
ஆரோமலே ! ..joe!

♥ ♥ ♥♥ ♥ ♥♥ ♥ ♥♥ ♥ ♥♥ ♥ ♥♥ ♥ ♥♥ ♥ ♥♥ ♥ ♥♥ ♥ ♥♥ ♥ ♥♥ ♥ ♥♥ ♥ ♥♥ ♥ ♥♥ ♥ ♥♥ ♥ ♥♥ ♥ ♥♥ ♥ ♥♥ ♥ ♥ 

Sunday, 2 December 2012

பிரிவினைவாதம்.


இறந்தவர்களை 
உறவாடி 
சாதியெனக்
கொண்டாடி
சாக்கடைபுழுக்களாய்  நெளிந்து இன்றுவரை
ஆன்மாக்களுக்கு
அமைதிகொடுக்காத நீங்களா அன்பை பயிரிட்டு
அமைதியை அருவடை 
செய்யப் போகிறிர்கள்.


மொழி இனம் மதம் சாதி அன்பு நட்பு துரோகம் இழப்பு இயலாமை
எதிர்பார்ப்பு 
ஏமாற்றம் உலகின் அத்தனை பிரிவினைவாதமும் இல்லா வீடாய் அமைதியாய் 
அந்த தோட்டம் கடக்கும் போதெல்லாம்
அழுகுரலொன்று 
கேட்கும் 
நானின்றி அமைதி தொலைத்த என் இடத்திலிருந்து .சிற்பமாய் செதுக்கப்பட்டு
வரலாற்றை 
தொலைத்து
சாதி உணர்வோடு
உடைந்து
உயிர் குடிக்க 
ஒவ்வொரு ஊர்களிலும் 
காத்திருக்கிறது
ஒரு கற்ச்சிலை.பிறர் மீதான கேள்விகள் மட்டுமே எல்லோரிடமும்
தனக்கான 
கேள்விகளென்று
அறியாமல்.மாண்ட உயிர்களுக்கு
துனை நிற்கா உங்கள் கடவுள் 
நானே ஆண்டவென அழிப்பவர்களை அழிக்கா உங்கள் கடவுள் 

வருவாதாய் 
சொன்னவனும்
வரவில்லை
எழுவதாய்சொன்னவனும்
எழவில்லை
காப்பதாய்சொன்னவனும்
காக்கவில்லை
கொலைகார அரக்கர்களுக்கு
மனித உயிரைப் பற்றி சொல்லாத கடவுளைதான்
இன்னும் உலகம் வணங்குகிறது
வணங்குபவனை மட்டுமே காப்பானெனில்
அவன் கடவுளெ அல்ல சுய நலவாதி
மனிதனை விட தரக்குவறைவானவன்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...