Wednesday 27 February 2013



உலகின் துன்புறுத்தல் 
தாளாது இருப்பாகவே 
இருக்கும் தனிமையும் சலனமற்றிருக்கும் மெளனமும் 
நினைவுகளை அள்ளி அள்ளி வீசுகின்றன
முகத்தில் 
உமிழ் நீராய் வந்து விழும் ஒவ்வொரு நிகழ்விலும் 
சராசரி எதிர்பார்ப்புகளையும் 
ஏமாற்றிருக்கிறிர்கள்
நீங்கள் 

துடிக்கும் புழுவாய் வெடித்துச்
சிதறுகிறது
கண்ணீர் உணர்வின்
கொலையோ
தற்கொலையோ
நிச்சயமாய்
நிகழப் போகின்றது,

காரணம்
நீங்களாகவும்
இருக்கலாம்
உங்களுக்கும் எனக்குமான
பொதுவான பழகிய பதிலொன்றுண்டு
என்னைப் போல் 

நீங்களும் இயலாமையென்றே எண்ணிக் கொள்ளுங்கள், 

நானும் பதிலொன்று
தேந்தெடுத்தாகிவிட்டது
பார்வையற்வர்கள் முன் 

ஊமையாய்
உடையாதே
விழகிச் செல்
இவர்கள் உனக்கானவர்கள் அல்லவென்று

கண்ணீரைஉதறித் தள்ளுகிறேன் 


உணர்வொன்று உயிரின்றி 
நடை பிணமாய் நானாய்
நீங்களும் எண்ணிக் கொள்ளுங்கள் 

எனக்கானவன் இவனல்லவென்று 
அது போதும் முகமூடியற்ற என் நிர்வாணத்திற்கு.

இந்த காடே எனக்கானதுதான் உன் பாதுகாப்பில் மரணம் வரை எச்சிலாய் வாழ்ந்து போ.



இழந்த
உயிர்களுக்காக
சிதைந்த உடல்களுக்காக
இல்லாத உரிமைக்காக
இயலாமையென்னும்
கண்ணீரில்
எழுதாதிர்கள்
சிதறிக் கிடக்கும்
உணர்வுக்கு
வழு கொடுக்க 
வன்மமாய்
மிருகம் வளர்த்திடுங்கள்

ஆம் இது காடுதான்
கொடிய இரு கால் மிருகங்கள்
வாழும்
காடு
இங்கு பறவைகென்னும்
முகமூடியும்
முயலென்னும்
முகமூடியும்
இனி உதவாது

உன்னை காத்திட
வேண்டுமானால்
மிருகமாயிரு
வண்மமாயிரு
கோபமாயிரு

சிங்கத்திடம்
அகப்பட்டப்பின்
கெஞ்சுதலென்பது
இன்னும் துன்புறுத்தச்
சொல்லும் தூண்டலே

ஓரே வழிதான் இனி உனக்கு 
உனக்குள்ளும்
அதே மிருகம்
வளர்த்திடு
முடிந்தால்
தீய விலங்கை
தின்று காட்டை சுத்தப்படுத்து
இல்லை மிருகமாகிப் போ

உன்னையும்
கொல்ல என் போலொரு
மிருகம்
சந்தர்ப்பம்
தேடி இருப்பு கொள்ளாது
கொலைவெறியுடன்
அலைகிறது

மறவாதே
நானும் உனக்கீடான
மிருகம்தான்
இந்த காடே எனக்கானதுதான்
உன் பாதுகாப்பில்
மரணம் வரை
எச்சிலாய் வாழ்ந்து போ.

Monday 25 February 2013

பஞ்சோந்திக்கும் மனிதனுக்கும் பெரிதான வித்தியாசங்கள் கிடையாது எதிரிலிருக்கும் கண்ணாடிகளின் பிரதிபலிப்பது.

யாரென்று தெரியாமலயே
இருந்திருக்கலாம்
நான்
யாரென்பதேனும்
இருந்திருக்கும்
என்னில்.

 நீங்கள்
யாரென்று
எனக்கு
தெரியாது
நானென்பதில்
நீங்களும் அவ்வளவே நானும்.

அவள் ஒருத்திக்காக
அவர்களை
பழிப்பதும்,

அவன் ஒருத்தனுக்காக
அவர்களை
பழிப்பதுமாய்,
நானோ
யாருக்காகவும்
யாரையும்
பழிப்பதில்லை
அவரவருக்கான
என்னை மட்டுமே
கொடுக்கிறேன்
அவர்களாகவே.


கொடுத்ததும்
பெற்றதுமாய்
எல்லோருக்குள்ளும்
ஓர் துரோகம்
துடித்துக் கொண்டே.

 பஞ்சோந்திக்கும்
மனிதனுக்கும்
பெரிதான வித்தியாசங்கள்
கிடையாது
எதிரிலிருக்கும்
கண்ணாடிகளின்
பிரதிப
லிப்பது.


ஒரு சிறு இழப்பை
ஏற்க தயங்குபவன்
உலகை ஆழப்பிறந்தவனெற்று 

பிதற்றுவதின்
நியாயம் சுயநலமாய் மட்டுமே.



பருவ காலங்கள்
தடம் மாறி
விட்டன
உதடுகள்
பேச தவறி
ஊனமாகி இடம் மாறி பேசுவதால்
இங்கு
வாக்கில்
வார்த்தையில் நேர்மையில்லை
நம்மிடமே இயற்கையும்
துரோகம்
செய்யப்
பழகியிருக்கிறது .


  
நான்கு
வரிகளோ நாற்பது வரிகளோ 

ஒரு கொலையை மரணமாக்கி 
துக்கம் விசாரித்து எழுத முடிகிறது 
நான்கு பேரில்
ஒருவராய் இல்லாமலயே.

 தன்னை
ஆடைகளால் மூடி
ஒவ்வொன்றிலும் நிஜ நீர்வாணம் தேடி
அலைகிறது
ஒவ்வொரு விலங்கும்
மனிதனென்று
பெயரொடு.



தனக்கான பிடிவாதங்களை
பிடித்தமாய்
பிடித்து கொண்டு
நடித்து கொள்கிறது
நானென்னும்
அவர்களுக்காக பிடிக்காதது போல்.


 மரணமொன்று
அருகில்
காத்திருக்கிறது
நாளையும் காத்திருக்கலாம்
அதுவரை
நானும் உங்களுக்காக
காத்திருப்பேன்
ஒரு புன்னகையாய்.


மூலைக்கு மூலை
இறந்துக் கிடக்கிறது
சுவாசிக்கும்
சதைப் பிண்டங்களாய்
இயற்கையை

ஏமாற்றிவிட்டு நாளைக்கான 
தூரோகங்களாய்.

கடைசியில்
கண்மூடி
இறந்து போகிறது
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொருவரின்
நானும்.



புறக்கணிக்கபட்ட
விலங்காய்
மூலையில்
இருளில் முடங்கி கிடக்கிறது நான்,
நீங்களோ நிழலென்ற 

வேடிக்கை பொருளால்
பொய்களை அடுக்கி 

தண்டித்து கொண்டிருக்கிறிர்கள்,
இனியும் துன்புறுத்தாதிர்கள்
அதன் கோரப்பற்களில் 

மொத்த வழுவையும் சேர்த்தாகிவிட்டது
அப்படியே கண்டும் காணாமல் 

கலைந்து செல்லுங்கள் 
தனிமையில் இளைப்பாறட்டும் இருள் 
ஒளியேற்றும் நாளில் முடிந்தால் 
நீங்களும் இருளாய் வாருங்கள் நிழலை 
இனியும் நம்புவதாயில்லை நானென்னும் மிருகம் •

 இறக்கும் போது
யாருக்கும்
வலியாய்
விழியில்
ஈரமாய்
இருக்க விரும்பாத
சாத்தான்தான்
நான்,
தேடாதிர்கள் என்னை கடந்து செல்லுங்கள்
தேட தேட புறக்கணியுங்கள்
தனிமையில்
வாழப் பழக வேண்டும் நான்
நீங்கள் இறக்கும் முன்பே.



ஆமென்.










கடவுள் :)



கடவுளைப் பற்றி என்னிடம்
ஒரு பதில்தான் இருக்கிறது

துரோகிகளின்
நம்பிக்கை
அவன்,
நல்லதும் செய்வதும்
இல்லை
கெடுதலும்
செய்வதில்லை
செய்வதெல்லாம்
மனிதன்தான்
உயர்ரக மது போல்
உயர்ரக
பழியாடே கடவுள்.


விபத்தில்
இறந்தவர்கள்
இயலாமையில்
இறந்தவர்கள்
இரு கால்
மிருகங்களால்
இறந்தவர்கள்
எல்லோருக்குள்ளும்
அவரவர் பெற்றோர் கொடுத்த முகமூடியும்
மரணித்துதான்
போகிறது
கடவுளென்ற
பெயரோடு.


வேற்று
சாதியென்றும்
மதமென்றும்
இனமென்றும்
கொஞ்சம் கொஞ்சமாக
இழந்ததென்னவோ
நமக்கான புன்னகைகளை மட்டும்தான்.


 போதாது
போதாதென்று
வேண்டுகிறோம்
போதும்
போதுமென்று
வாழ்ந்துப் பாருங்களேன்
மாறுதலுக்கு
கடவுளாகி.


விதிமுறையற்ற
கடவுளுக்கே
கடவுள் சொல்லியதாய் சொல்லி விதிமுறைகளிட்ட
மனிதன் எவ்ளோ பெரிய புத்திசாலியா இருப்பான்.


 எல்லைகள்
பிரித்து
வீரர்கள்
நிறுத்தி
கடவுளை
பாதுகாக்கும்
உலகத்திற்காக
கடவுள் எந்த கடவுளை வணங்கிக் கொண்டிருப்பான் ?


மனிதம்
பற்றியும்
நாம்
மனிதர்களென்றும்
பேசிக் கெண்டிருந்தாரொருவர்,
அவரின் பிறப்பே தவறென்றும்
உறவுகளை
விபச்சாரமென்றும்
விளக்கம் சொல்லி கொண்டிருந்தான்
மதவாதியொருவன்
மார்க்கமென்று
உண்டாம்
அவனுக்கான கடவுள் தீர்ப்பளிப்பானாம்
நாளை, அவனுக்கான
தீர்ப்பாய் சாத்தெனென்பதை தவிர வேறென்ன இருக்க முடியும் ! நான கடவுளானேன் அந்த மதச் சாத்தானால்.


இறந்தால் மட்டுமே
பார்க்க முடியுமெனில்
உங்களுக்குள்ளான
கடவுளை கொல்லுங்கள்
இல்லையேல்
உங்களையே கொன்றுவிடும் அந்த மாயை.





தெளிவற்று கிடக்கிறது பாதை
முட்களுக்கோ
கற்களுக்கோ
அஞ்சுபவனல்ல
முட்களாய்
கற்களாய்
திசைகாட்டியாய்
நேசித்தலின்
பெயரில் யார் யாரோ
யாரையேனும்
வதம் செய்து
தொடர்ந்தால்
சொர்க்கம் கிடைக்கலாம்
வேண்டாமென
அங்குதான்
அவர்களோடு
காத்திருக்கிறேன்

அவர்கள் பயணத்தை தொடர்வார்களென..




Saturday 16 February 2013

இனி யாராலும் வளர்க்க முடியாது என்னில் இன்னுமோர் நீழல் தரும் நிஜத்தை உனையன்றி.


நீயற்ற
இடங்களில்
கண்ணீரை
நட்டு வைக்கிறேன்
ஒரு துளியேனும் மடிந்து போகட்டும் நானென்னும் நீ,

இனி யாராலும் வளர்க்க முடியாது என்னில் 
இன்னுமோர் நீழல் தரும் நிஜத்தை உனையன்றி.

என் கல்லறையில்
உன் நினைவுச் 
சப்தங்கள் இசையாய். 
பட்டாம் பூச்சி உன் சிறகு
நானென்பதால்
மிச்சமின்றி
என் நினைவை தின்கிறாய் நீ.
என்னிலிருந்து
தவறி விழுந்த
புன்னகையாய்
நீ  
மெளனமாகிப் 
போனேன் நான்.
போழுதுகள்
நினைவில் மயங்கி
மாலையில்
விடியும்
பகல்தான்
எனதாய்
ஓய்வில்
ஒரு கனம்
செலவிடுகிறாய்
குரல் தோகை விரித்தலோ
குருஞ்செய்தி
வானவில் அனுப்பலோ
இரவுவரை காத்திருக்கிறதுநீயென்னும் நாட்களில் நான்.

நீதானே ! என்றே
விட்டுக் கொடுக்க தொடங்குகிறேன்
நீயோ இவன்தானென்றில்லாது
இவன் இப்படித்தானென்று தீர்மானித்திருக்கிறாய்
நிரந்தரமில்லா வாழ்க்கை இதென்பது உனக்கு புரிகையில்
நான் இல்லாமல் இருப்பேன்.

எனக்கான
தேடலின்றி
நீ,
என் காதலின்
பரிசுத்தம் அதுவே !
வலிகளை
எனக்குள்தான்
எழுதுகிறேன்
மரணத்தை
முத்தமிடும்வரை
உன்னை சந்திக்காதிருப்பெனென்ற நம்பிக்கையால்.


நானில்லா வாழ்க்கை
உனக்கு
நரகமென்றே
தினமும் பைத்தியம் பிடிக்கிறதெனக்கு.

  

என் மரணத்திற்கு
எல்லோரும்
வந்திருந்தார்கள்
உன்னை தேடிச் சென்ற என்னைத்தான்
கானவில்லை.

துளியும் சந்தேகம்
வேண்டாம்
இந்த இரவும்
உனக்கானதுதான்.




விட்டம் பார்த்து
நிலைகுத்தி நிற்கிறது
பார்வை
உன் நினைவுகள்
எனைச் சுற்றி அழத் தொடங்குகின்றன..














.











........................காதல்........................

.............................................................................காதல்.........................................................................................
பார்வையின்
பாவனைகள்
தாங்கி
பாவங்களுக்கான
காத்திருப்பில்
தொடங்கிற்று
ஒரு கனவு

சந்தித்தலே சிந்தித்தலாய்
சிந்தித்தலே
சிரித்தலாய்
சிலாகிப்பில்
சிலிர்த்தது
சில பொழுதுகள்

தடுமாற்றங்களில்
உதடுகள்
நடனமாட
பிழையில்லா
நாட்டியமென
இமைக்க மறந்தன விழிகள்

இரவென்றும்
பகலென்றும்
பாரது பத்திரப்படுத்தலே
பாதையென
பாகுபாடுளற்ற
பலவீனமே பாலமாய் இறுகியது

விரல்கள் சந்திக்க
தொடங்கிற்று
சிந்தனைகள்
இடமாறத் தொடங்கி இமைகள் மூடிக்கொண்டன
இதயம் தொலைய தொடங்கியது

தறிகெட்டு திரிந்த
பார்வையில் பாதைகள் பாழாய்ப் போக
மீந்தது ஒரு சொல் காதல் பொய்யென்று

கடலளவு காதல் சிறு துளியாகி உடைந்து சிதறியது காமத்தில்,
யாரும் அறிந்திருக்கவில்லை அந்த பாவத்தை.
கை கோர்த்து
கதை பேசும்
காலம் கண் சேருமென்று
கதவிடுக்கில்
உயிரோன்று
காத்திருக்கிறது, 

ஒவ்வொரு வாசல் தாண்டலிலும் நசிந்தாலும்
கன்னம் தொட்ட
கடைசி முத்தம்
கரைந்திடக் கூடுமென 

கண்ணீரை கட்டியிழுக்கிறது
கல் மனமொன்று....


சிறகிருந்தும்
தனக்கான
வானமின்றி
மூளையில் முடங்கி கிடக்கிறாள்
ஒவ்வொரு தேவதையும், உலகின் சுயநலனுக்காக
தனதில்லா பாதைகளில்
சிறகற்ற சிரசாய்
பயணிக்கிறாள் சிந்தனைகளை
சிறைக்கதவாக்கி
சிரிக்கிறாள்
வளக்கமென்றும்
பழக்கமென்றும்
எல்லா முடிச்சுக்களின்
வளைவிலும்
அவளுக்கான
இறகொன்று
இறந்து விடைபெறுதலின்றி
இதயத்தின் நடுவீட்டில்
பிணத்தின் துர்நாற்றமாய்
முனுமுனுக்கிறது
ரசித்து சிரிக்க பழகிருந்தோம்
அவள் அப்படித்தானென்று.


உன்னோடு
கடந்த நாட்கள்
எண்ணித் தேடுகிறேன்
நீ வாழ்ந்த  நாளொன்றில்
இளைப்பாரிட


தேர்ந்தேடுத்தாகி விட்டது
சுயநலமாய் நீ கொஞ்சி
சிரித்து நான் எனை மறந்த நாளொன்றினை

இடைவிடாது பேசி இடைவிடாது
சிரித்து களைக்குமளவுக்கு மூச்சை 
நிறுத்தி இளைப்பாரிடும்
கணங்களையும்
வாழ்ந்திருந்தாய் என்னோடு

இன்றுதான் கடைசியென்று 
வாழ்ந்து சென்றிருக்கிறாய் உனையே 
நானக மாற்றி வெற்றிடமின்றி நிரப்பி நீயாக என்னையே..

மெலிதாய் புன்னகைத்து
துரோகம்
இழைத்ததாய்
புலம்பித் தீர்க்கிறேன் அன்றும் உனெக்கென்று
ஏதும் செய்திடவில்லை
நானென்று


விடைபெறுதலுக்கான கடைசி 
வார்த்தையாய் விட்டுச் சென்றிருந்தாய் 
அதித நேசித்தலுக்கு சொந்தக்காரன் 
நீயென்று காரணமொன்றை

கொடுத்து சென்ற
புன்னகைகளை
திருப்பித் தற வழியின்றி
வாய் விட்டு அழுகிறேன்
என் கண்ணீரே எனைக் கண்டு சிரிக்க
ரசிக்கும்படியான
நாள் இதுவென்று வேறில்லையென 
நாளைக்காக சேமிக்கிறேன்
நியாபகப் பெட்டகத்தில் 
நீ மட்டும் வாழந்த நாளை .

முத்தம் ♥



 உதட்டின் ரேகை எண்ணிச்
சொல் தினசரி முத்த
எண்ணிக்கை கணக்கிடலாம்.

மீசை போன்ற
உதடுணக்கு
அது நான் வாழும்
பாரதி வீடெனக்கு.

பேனாவால்
நினைவுகளை
முத்தமிட்டேன்
உதடுகள் கவிதைக்காக
ஏங்கியது.

பிரிவுக்கு முன்
முத்த சமாதனம்
செய்கிறாய்
கறையாதென்று ஆசையாய்
மழலை வாங்கும்
இனிப்பாய்
வாங்கி ஏமாறுகிறேன்
நான்

முத்தம் கேட்டால்
ச்சீ போடா
என்கிறாய்
நீ சொல்லிய
போடாவில்
ஒட்டியிருந்தேன்
நான் முத்தமாய்.

நாளைய முகச்
சுருக்கங்கள் இன்றைய
என் முத்தங்களின்
சேமிப்பு கிடங்கு நாளையும்
நான் சேமிப்பேன்
இன்னுமோர்
முத்தத்தை அழகில்லையென்று புலம்பும்
உன உதட்டில்.






LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...