Friday, 19 April 2013

காதல் காதல் காதல் !!!

நீ இல்லா இரவுகளில் உன்னிடமிருந்து 
என்னை கொஞ்சம் தனிமை படுத்து 
அழுது விடிகிறேன் வலிகள் குறைந்து 
வழி பிறக்கட்டும் விழியில்.
♥♥

சொல்வதற்குஒன்றுமில்லை 
உன்னுடனான
வாழ்க்கையை
விழித்தே கனவு காண்கிறது இரவெல்லாம்.
♥♥

நினைவுகளால்நிறம்பி தனித்து கிடக்கிறது வீடு,
இன்னும் நான்
உயிரோடுதான்
இருக்கிறேன் !
நீ கொடுத்த
கடைசி முத்தத்தை சுவாசித்தபடி....
♥♥

நீயன்றி எதை கொடுத்தாலும்உறங்க மறுக்கிறது இந்த இரவு.
♥♥

புன்னகைக்குள்ஒளிந்துகொண்டு இம்சிக்கிறாய் 
அதுவா இதுவாவென்று 
தொலைந்­த குழந்தையின்
முகம் தேடும்
அன்னையின் தேடலாய்.
♥♥

நிலவின்அருகில்
ஒற்றை நட்சத்திரம்
நான் நிலவை
ரசிப்பேனென்று அவள் அனுப்பிய நெற்றிக் கண்.
♥♥மூன்று முடிச்சிட்டால்
போதுமடியென்றால் !
வெறும் கயிற்றையா முடிச்சிடப் போகிறாயென்கிறால் ?
இல்லையடி
முதல் முடிச்சில்
உன் தாயின்
அன்பை காதலாய் முடிச்சிடுவேன் !
அட ! அடுத்த முடிச்சி ?
எப்போதும் ஒப்படைத்தலின்றி ஒப்புதலின்றி 
தனக்குள்ளையே தாங்கும் உன் தகப்பனினின் 
தாய்மையை முடிச்சிடுவேன் !
ம்ம்ம் கொல்றடா அப்புறம் ?
அர்த்தமற்ற கேள்விகளற்று
அகிம்சையாய்
ஆதரவாய் ஆமாம் சாமியாய்

 உன் சுதந்திரம் நேசிக்கும் நண்பனாய் நட்பை 
முன்றாவதாய் முடிச்சிடுவேன் !
இப்பேவே தாலிகட்டு இல்லையேல் 

என்னையாவது கட்டிக்கோள்லென்று கைவிரிக்கறாள் ஒரு தேவதை. 
♥♥

சில நிமிடங்களை
நீயிருந்து நிறப்பி
பல வருடங்களை
நினைவுகளால்
நிறப்ப வைக்கிறாய் நீ.

♥♥

பிரிதொரு சந்தர்ப்பத்திற்காக
காத்திருக்கிறது
எல்லா பிரிவுகளும். (நினைவுகளும்)

♥♥உறவுகள்
படியேற
குரல்
இறக்கினாய்
இதயப்படியில்
ஏறிக்கொண்டே.
♥♥

பூனைக் குட்டிகளைகாணும் போதெல்லாம்
மீயாவென்று
கத்துகிறாய்
என்னை சந்திக்கும் போதும்.
♥♥

உன் புன்னகையில்
தொலைவதும்
உன் புன்னகையை
தேடுதலும்
எனக்கான காதல்.
♥♥

உன் வீட்டு செல்லப்பிராணிகளோடு
என்னையும்
சேர்த்துக் கொள் 
மழை நாளில் மடி கொடு அது போதும்.
♥♥
செல்லப்பிராணிகள்
காத்திருக்கின்றன உன்
செல்ல கிறுக்கலுக்காக
நீ இன்னும் கனவில்
கொஞ்சி கொண்டிருக்கிறா
ய்
ஒரு பூனைக்குட்டியை 

ஒரு பட்டாம்பூச்சியை
ஒரு மீசைவைத்த மீனை
ஒரு கரடி பொம்மையை
ஒரு நிஜக்
கரடி வேடிக்கை பார்க்க

♥♥


நானே தொலைந்தாலும்
தேடிச் சேர்க்கிறது என்னை
உன்னிடம்
நானென்னும் நீ.

♥♥
பயணங்களில் எப்போதும் அடம்பிடிக்கும்
சன்னலோரத்தில் சாய்ந்திட நீயின்றி நிமிர்ந்து
உணர்வற்று கிடக்கிறது என் தோள்கள்.

♥♥
காலி இடங்கள் நிறம்பிய பேருந்தில்
உன் அருகிருப்பு
இல்லாமல் வெறுமையாய்
நீற்கிறது என் பயணம்.

♥♥
கதவிடுக்கில் கண்ணாமூச்சி ஆடுகிறாய்
என் விழிகள் நசிந்து 

கண்ணீர் கசிவதை பாராமலேயே.
♥♥
நீ யாரோவா பார்க்கிறாய்
குழந்தை கையிலெடுத்து
தவறவிட்ட பொம்மையின் வலியில் நான்.

♥♥
விழி தெலைத்து
செவி தொலைத்து
நாசி தொலைத்து
உதடு தொலைத்து
நினைவு தொலைத்து
தனிமை செய்தேன்
நீ உடைத்து விளையாட.

♥♥
சந்தர்ப்பங்களுக்கான
காத்திருப்பில்
நிர்ப்பந்தங்கள்
நிர்ணயிக்கபடுகின்றன
திருப்தியில்லா
தேடலாய்
அதிர்ப்தியில் முடிகிறது எல்லாம்.

♥♥
பல் இடுக்கில்
சிக்கிக் கொண்ட
திசுக்களின்
இம்சையாய் நீ.

♥♥

Wednesday, 17 April 2013

என் பார்வையில் காதல்!!! ♥என் பார்வையில் காதல்!!! ♥

காதல் இந்த வார்த்தையில்
ஏதோ ஒரு மாயை சூன்யம் உருவாக்கி வைத்திருக்கிறது இந்த உலகமும் இந்த சமுதாயமும்

கற்பனையில் கொண்டாடி தீர்த்து நிஜத்தில் அதற்கு நேர்மாறான
செயல்களோடு போராடி, தின்டாடி அதிகமாய் அப்படித்தான் பழக்கி இருக்கிறார்கள்
நேற்று காதலித்தவர்கள்
இன்று காதலிப்பவர்களை.

ஏற்றுக் கொள்ளும் வரை கெஞ்சுதலாய்
ஏற்றுக் கொண்டபின்
கெஞ்ச வைத்தலாய்தான்
இங்கு நிறைய காதல்கள்
நானா நீயா என்று
போட்டிப் போடுவதே காதலாய்

ஒரு உயிரை ஜெயிக்க முடியாதற்காக
தோற்றதற்காக
தினம் ஒரு மரணம் ஒரு கொலையோ தற்கொலையோ காதல் பெயரில் நிச்சயமாய் இங்கு நடக்கிறது
பிறப்பின் அர்த்ந்தை கெடுத்து

எல்லா உறவுகளையும் உயர்ந்ததாய் எண்ணிக் கொள்ள சொல்லிருந்தார்கள்
இல்லாவிடில் காதலில்லை என்றார்கள்

இழப்புகளை ஏற்றுக் கொள்ளாது
இந்த நிலையில் வாழ்தல் சுகமென்ற போதை எல்லோருக்கும் ஊட்டப்படுகிறது

ஏற்காவிடில் மாய்த்துக் கொல் இல்லை ஏற்காத உயிரை கொல்
ஏற்றபின் பிரிந்தாலும் இதையே செய் உனக்கு ஆணியம் பெண்ணிய ஆணியில் உருவப்படமிட்டு மாலையிடுவர்
என்பது போல் தவறுகளை கொளரவிக்கும் முட்டாள் சமுகமாய்

இப்போதெல்லாம் காதல் காதலாய் இல்லை
காமத்தின் வடிகாலாய் மட்டுமே
அதிகமாய்

ஆணோ பெண்ணோ பதின் முன்று வயதில் என்ன இதுவென்று ஆராயத் தொடங்கும் உணர்வுதான் இந்த காதல்
யாரோ இருவர் எங்கோ தெருமுனையி சிரித்து பேசுவதை கடந்து செல்கையில் நாமும் வாழ்ந்துப் பார்க்க தொன்றும் உணர்வை

ஏனோ பெரிதான
தடைகளிட்டு சுவாரஸ்மாக்கி அதையே பெரும் போராட்டமாக்கி
அவர்களை வீரர்களாக்கி வேடிக்கை பார்கிறோம்.

காதலென்பது அபரிதமான புரிதலும்
அதிதமான அன்புமென்று
யாரும் சொல்லித்தரவில்லை யாருக்கும்

சில பல வேடிக்கைகள் வாடிக்கையாக பேசாவிட்டால் கத்தி எடுப்பதும் காயபடுத்துவதும் புனிதமென சித்தரித்திருக்கிறது உலகம்
காதலுக்காக தன்னை இத்தனை வருத்திக்கிறாங்களே என்ற பெருமை வேறு
நிச்சயமாக இது மொத்தமும் உள் நோக்கம் நினைச்சதை சாதிக்க நினைக்கும் குருறப்புத்தி குறுக்குப் புத்தி
அவ்ளோதான்
தான் நினைத்ததை சாதிக்க எதையும் செய்யும் விலங்கினப் புத்திதான் மனிதனின் இந்த செயல்கள்

இதெல்லாம் காதலில்லை தன்னை காயபடுத்துதல்
வருத்திக் கொள்தல் எல்லாமே நான் சொல்வதை நீ கேட்க வேண்டும்
செய்ய வேண்டுமென அடிமையாக்க எடுக்கும் முயற்ச்சிகள் அவ்வளவே

எல்லா உறவுகளிலும் உண்டு இழப்புகள் பிரிவு வலி துரோகம் சந்தோசம் மகிழ்ச்சி எல்லாவற்றையும் கடந்து போகும் மானுடம் காதலில் மட்டும் எல்லாவற்றையும் பெரிதாய் மதிப்பளிப்பதன் அர்த்தம் அடிமைத்தனமும்
அடிமையாக்குதலும்தான்

சொல்லப் போனால் எல்லோரும் தனித்தனியென்று யோசித்திருக்கும் மனித இனம் காதலில் இருவர் ஒன்றாய் யோசிக்க வாழ நினைக்க நிர்பந்திக்கிறது இது உச்சக்கட்ட முட்டாள்தனம்தானே,
சிறைபடுதல் சுகமென்றும்
விட்டுக் கொடுத்தலே காதலென்றும் சொல்லிக் கொண்டு வாழ்வை வாழாது யாரையோ சுமந்து யாருக்காகவோ யாராகவோ வாழ்கிறது மானுடம் இதற்கு யாரோ ஒருவர் இறப்பதே மேல் ஆம் யாரின் வாழ்க்கையோ வாழ்வதற்கு அவனோ அவளோ எதற்கு அவனோ அவளோ யாரோ ஒருவர் போதும்தானே
சுயம் தொலைத்து வாழ !

காதலின் துரோகங்கள் பெரிதாய் சொல்லப்படுகிறது இங்கு ஆண்கள் வெளியே சொல்லிடுறாங்க பெண்கள் சொல்றதில்லலை
ஏன்னா பெண்கள் காதலை சொல்லவும் இங்கு தடைதான்
ஒரு ஆண் நான் காதலிக்கிறேனென்று உலகில் வீட்டில் எங்கேயும் சொல்ல முடியும்
ஆனால் பெண் சொல்ல முடியாது
அப்புறம் ஏன் ஆண் பெண்ணை காதலிக்கிறான் ?!

எனக்கு புரியலை உன்னை காதலிச்சு வேற யாரையோ கல்யாணம் பன்னா தப்புன்னு சொல்றிங்களே

இது எந்த விதத்தில் நியாயம் நெருங்கும் பொதுதான் எல்லோரின் தேவை குணம் சுயம் எல்லாமே தெரியும் அப்படி எதேனும் பிடிக்காதபட்சத்தில் அவரவர் வாழ்வை தீர்மானிக்கிற அதிகாரத்தை தப்புன்னு சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது

விருப்பு வெறுப்பு தேவை எல்லாமே வேறாகத்தான் இருக்கும் எல்லோருக்கும்
இதை மாற்றியோ சகித்தோ வாழ்வதுதான் காதல்னு நினைச்சா நீங்கதான் உலகத்தில் மிகப்பெரிய முட்டாள்

காதலென்பது
உன்மையில் ஒன்றுமே இல்லை எனில் அதன் வடிவத்தை அவரவர் விருப்பதிற்கு மாற்றிக் கொண்டே இருக்காங்க
ஆனா பழியை காதல் மீதும் ஆண் பெண் என்று வர்க்கத்தின் மீதும் திணிக்கிறாங்க

காதல் என்பது உன்மையில் காதலிக்கும் முன்பு இருந்த நிலையிலையே சுதந்திரமா இருத்தலும்
புரிதலும்தான்
காதல்,
சூழ்நிலையோ பிடிக்காமலோ
பிரிந்தாலும்
அவரவர் விருப்பு வெறுப்பென்று ஏற்றுக் கொள்தலே காதல்
அதை விட்டுட்டு அவன் ஏமாத்திட்டான் அவள் ஏமாத்திட்டா இந்த பொண்ணுங்களே இப்படித்தான் இந்த ஆண்களே இப்படித்தான்னு புலம்பாதிர்கள்

உனக்காக அல்ல யாருக்காவும் எந்த உயிரும் பிறக்கவில்லை தனக்கா தனது வாழ்க்கையை வாழவே ஒவ்வ்வெரு உயிரும் .

காதல் செயவீர் அவரவராய் இருந்தே உயிரோ உணர்வோ நேசித்து புரிதலோடு அப்படியே ஏறறுக் கொள்ளுங்கள்
இடம்பெயர்க்காதீர்கள் எதையும்,
அவரவரும் தனி உலகம் அவரவரும் தனி சிந்தனை தனி பாதை வாழ்கை வாழ்வதற்கே வாழுங்கள் எனில் வாழ்தல் இனிது.

காதல் பன்னுங்க காதலா பன்னுங்க வாழ்க்கை நல்லா இருக்கும் :-)

Wednesday, 3 April 2013

365நாளும் தமிழகத்தில் போராட்டம்தான்,,

ஜனநாயக ஜனவரி

1ந்தேதி ஒன்னுமில்லாக்கட்சி,
2ந்தேதி இரண்டாங்கட்டான் கட்சி,
3ந்தேதி முன்னேறாதகட்சி,
4ந்தேதி நாலுபேருக்கு தெரிஞ்சகட்சி,
5ந்தேதி ஐஞ்சுபேருக்கான கட்சி,
6ந்தேதி அறிமுக கட்சி,
7ந்தேதி எதாவது கட்சி,
8ந்தேதி எட்டப்பக் கட்சி,
10ந்தேதி பாடைல போன கட்சி,
11ந்தேதி பன்முகக் கட்சி,
12ந்தேதி பலபட்டரைக் கட்சி,
13ந்தேதி அந்த ரசிகர் மன்றம்,
14ந்தேதி இந்த ரசிகர் மன்றம்,
15ந்தேதி நடிகர் சங்கம்,
16ந்தேதி வழக்கறிஞர் சங்கம்,
17ந்தேதி ஓட்டுநர் சங்கம்,
18ந்தேதி நடத்துனர் சங்கம்,
19ந்தேதி நடக்கிறவன் சங்கம்,
20ந்தேதி அந்த சாதி சங்கம்,
21ந்தேதி இந்த சாதி சங்கம்,
22ந்தேதி வியாபாரிகள் சங்கம்,
23ந்தேதி ஆசிரியர்கள் சங்கம்,
24ந்தேதி மாணவர்கள் சங்கம்,
25ந்தேதி அந்த மதம்,
26ந்தேதி இந்த மதம்,
27ந்தேதி மதமே இல்லையென்னும் மதம்,
28ந்தேதி மானங்கெட்டவர்கள் சங்கம்,
29ந்தேதி மானமுள்வர்கள் சங்கம்,
30ந்தேதி மூஞ்சி சங்கம்,
31ந்தேதி முகம் காட்டாத சங்கம்,

பிரிவினைவாத பிப்ரவரி

1ந்தேதி ஓரம் ஒதுங்குவோர் இயக்கம்,
2ந்தேதி இம்சை இயக்கம்,
3ந்தேதி முட்டாப்ய பங்கம்,
4ந்தேதி காதலிப்போர் சங்கம்,
5ந்தேதி காதல் எதிரிப்பு சங்கம்,
6ந்தேதி வருத்தப்படா வாலிபர் சங்கம்,
7ந்தேதி மறுபடியும் எதாவது சாதிசங்கம் இல்லை கட்சி இல்லை இயக்கம்
இல்லை மன்றம்

நாக்கு தள்ளுதே 365நாளும் தமிழகத்தில் போராட்டம்தான்
ஏதாவது ஒன்றிர்க்கு,
என்றுதான் இனைந்து பொதுவான பிரச்சனையொன்றிற்கு போராடப் போகிறோம்,
இதோ இந்த ஒன்றிர்க்காவது நாம் முகம் அகம் ஆன்மா அரசியல் சாதி மதம்
அனைத்தும் துறந்து மனிதநேயமாய் கூடியிருக்கலாம்  எதற்காகவென்று
தெரிந்தும் நாம் போராடுவதாய் நடித்துக் கொண்டுதான்
இருக்கிறோம் நான்கு மூலைக்கும் நான்குபேராய் நின்று அங்குமிங்குமாய்
குரலெழுப்பி அவரவரவர் உயிரோடிருப்பதை உரைத்தல் போராட்டமில்லை சுயநலம்,
நம் போராட்டத்தில் வாய்மையுமில்லை நேர்மையுமில்லை சமுக சேவையென்னும்
சாயமென்று
அவனவன் தன் நிறத்தை பதிகிறோம்
பிற உயிரில் வலியில்
உன் இருத்தலை நிருபிக்க அடுத்தவன் பிரச்சனையில் முகம்
காண்பிக்கிறோம்

இன்று அங்கு 
இதே நிலையில் உங்கள் மனநிலையும்
போராட்டக் குணமும் இருந்தால் நிச்சயமுண்டு நாளை நமக்கும் சங்கு.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...