Tuesday, 28 May 2013

நானென்பது எனக்கு ரெம்ப பிடிக்கும் நானென்பது நான் மட்டுமெ நானென்பதால்.




ஒவ்வொரு விலங்கின்
குனமும்
சற்று
முரண்பட்டு
கூடவோ
குறைவாகவோ
எல்லா விலங்கிடமும்
உண்டு
உலகின்
மொத்த விலங்கின்
குணங்களும்
குறைகளின்றி
ஒன்றாய்
மனிதனாய்.

பெண்கள்
தனக்குள்ளும்
ஆண்கள்
தன்னை சுற்றியும்
தேடுகிறார்கள்
எதோ ஒன்றை
எல்லாமுமாய்.

  
தொலைவிலும்
நெருக்கத்திலும்
நான்
நானகத்தான்
இருக்கிறேன்
நெருக்கத்தில்
உங்கள் தேடல்
வேறாக இருப்பின்
உங்கள் ஏமாற்றங்கள்
நானல்ல நீங்களே.

நீங்கள்
தலைவனென்பிர்கள்
சிலை என்பீர்கள்
நாளை ஒருநாள்
காகித குப்பையில்
கிடப்பான்,
சாக்கடையோரம் தலைவனும்
கண்டும் கானாமல் முகம் சுழித்து
மனம் வருந்தி
தலை குனிந்து
தலை திருப்பி
காணாமல் போவிர்கள்.
நான் ஒரு போதும் எவரையும்
தலைவனாய்
எண்ணியதில்லை,
அவர்கள் விரும்பிய
தில்லை தலைவனென்று
நீங்கள் சொல்லியதை 

நீங்கள்தான் சொல்லி கொண்டிர்கள்
கொன்றிர்கள்.
உங்களைப் போலல்ல 
நான் எனக்கு தலைவனென்பவன் சக மனிதன் மட்டுமே.
வித்தியாசமான
போர்க்களமிது
இங்கு
ஆயுதங்களில்லை
சப்தங்களுண்டு
அம்புகாளாய்
மீன்டும் ஒரு வாக்கெடுப்பிற்கு
இலவசமாய்
இருக்கும்
இடத்திலயே
செழுத்தி விடுவோம்
உரிமையை விட்டுக் கொடுத்ததாய் எண்ணி.

இந்த இரவை
என்ன செய்வதென்றே
தெரியவில்லை
வீடொன்றும்
எனக்கு
துனையில்லை
நானும் வாசலில்தான்
இருக்கிறேன்
காவலோ நாயோ
நீங்களே முடிவு
செய்யுங்கள்,
தீருடியவர்களுக்காக
குலைத்தலோ
இழப்பிற்காக
ஒப்பாரி ஓலமோ
ஒரு போதும் என்னிடமில்லை,
எனில் நானென்னும் இதயத்தை எப்போதே திருடிருந்திர்கள் நீங்கள்.

          
ஒருபோதும் ஒப்பிடாதிர்கள்
இவர் இவரைப்
போன்றென்று
எவரும் எவரைப் போன்றன்று
அவரவர் அவரை போன்றே.

நான் சதை தின்னும்
மிருகங்கள்
மத்தியில்தான்
வாழ்கிறேன்
என் முகமும்
மிருகத்தின்
முகமும் ஒன்றாய்தாய்த்தான் இருக்கிறது.
என்னால் ஒருபோதும்
சொல்ல முடியவில்லை
நான் மனிதனென்று
எனில் நான்
மிருகங்கள்
மத்தியில்தான்
வாழ்கிறேன்
என் முகம் போல்தான்
இருந்தது
அந்த சதை தின்னும் மிருகத்திற்கும் முகம்.


பல நாய்களின்
மத்தியில்
சில மனிதர்கள் மட்டுமே
வாழ்கின்றனர். 

எப்படி மூடி மறைத்து
முகமூடிகளோடு
மனதெனென்று
சொன்னாலும்
அவன் விலங்கினம்தான். 

முடிந்தால்
நேற்றைய
தலைவர்களை
கொன்று
விடுங்கள்.
அவர்களால்
இங்கு சாதிப் பிரச்சனைகளாவது
குறைந்து
அவரவர் சாதியில் இன்னோருவன்
எல்லோருக்காகவும்
சாதித்திடப்
பிறக்கட்டும்
நாளைய பொதுவுடமையாளனாய்
முடிந்தால் கொன்று விடுங்கள் நேற்றையத் தலைவர்களை.

யார் யாரோ
நம் கண்களில்
கனவு காண்கிறார்கள்.
எந்த கனவும்
நிறைவேறப் போவதில்லை
என்று தெரிந்தும்.
இன்றேனும்
கனவுகளற்று
உறங்குங்கள்
எனில் எவர்
கண்ட கணவும்
இங்கு நிறைவேறவே
இல்லை
அது காந்தி கண்ட கனவோ
காமராஜர்
கண்ட கனவோ அம்பேத்கார்
கண்ட கனவோ எத்தனை எத்தனையோ  

நல்வர்கள் கண்ட எந்த கனவும்  
இங்கு நிறைவேறவே இல்லை
எனில்
அவர்களைப்பற்றி பேசிக்கொண்டு
நீங்கள் நீங்களாகவே இருக்கிறிர்கள் இன்றேனும்
இனியேனும்
அவர்களை கொண்டு நிறைவேறாத கனவு காணாதீர்கள்
.


நானென்பது
எனக்கு
ரெம்ப பிடிக்கும்
நானென்பது
நான் மட்டுமெ நானென்பதால்.   ♥♥♥.

இன்றே கடைசியென்னும் கணக்கு எல்லோருக்குள்ளும் ஏதோ ஒன்றில் தொடக்கமாக எப்போதும்.




பனிக்காற்று கலந்து மழை
கதகதப்பு தேடும் தேகம்
நெருங்க முடியா தூரத்தில் நீ
ஊடலுக்கான
வார்த்தை தேடி நான். 

                
               ♥

என்னவள் காதல்
எழுதி அழித்து
எழுதி அழித்து
விளையாடும்
சிலேட்டுப் பலகை நான

உறவுகள் 
வரா ஞாயிறு
மகிழ்ச்சிக்கு ஓய்வு..

              ♥

இருளை கண்டால் இரகசிய மொழி எல்லா குரல் வளையத்திலும்
ஏனோ ஊரையே துனைக்கு அழைத்தது 
மழலை மனிதனின் முதல் மொழியில்...


விழித்ததும் தேர்ந்தெடுக்கிறாய் 
இன்றைக்கான முகமூடியை 
இரவே உருவாக்கி வைத்ததாய் 
எண்ணி மாட்டிக் கொண்டாய் 
வீட்டிலும் சாலையிழும் 
அலுவலகத்திலும் 
உன் முகத்தை பார்த்து தினமும் 
யார் யாரோ தொலைவர் 
ஒப்பனையில் 

          

தேவைகளை
கைவிரித்து
குழந்தைகளாய்
அனுப்புகிறோம்
அள்ளி அனைப்பவரின்
கழுத்தை இறுகக் கட்டிக் கொள்(ல்)கிறது இதயம்..
             
           ♥
          
நீ யாரெனக்
யாரேனும்
கேட்டால்
நீயே நினைவில்.








நட்பை தவிர எந்த தகுதியும்
யோசிப்பதில்லை
நட்பு மட்டும்.

          

தினத் தேதி தாள் கிழித்து
திருப்பி பாருங்கள்
வெறுமையா 
இருக்கும் நாளையும்.

            


இன்றே கடைசியென்னும்
கணக்கு 
எல்லோருக்குள்ளும் ஏதோ ஒன்றில் தொடக்கமாக எப்போதும்.



Saturday, 18 May 2013

தான் சரியென்பதெல்லாம் சரிதான். அது இங்கு யாருக்கும் தெரியாதென்பதே சரி.!!!



நான் கடவுளென்றாலும்
எனக்கான
வரங்களையும்
எனக்கான
சாபங்களையுமே
சுமக்கிறேன்
சகக் கடவுள்கள் எப்படியோ
எனக்குத் தெரியாது
தேவையுமில்லை.

யாரையும்
காயப்படுத்தும்
எண்ணமில்லை
நீங்கள்
என்னை விளையாட்டுப் 

பொருளென நினைக்கும்வரை.

உன்னிடமுள்ள பதில்களுக்காக
உனக்கான கேள்விகள்
என்னில்
மெளனமாய்க் கிடக்கின்றன.
எனக்கான
கேள்விகளை
மெளனமாக்கியே பழகியவன் நான்
வினவி ஒப்பித்தல் புரிதலில்லை 

என்ப்தே என் பிடிவாதம்.



யாருமற்ற தனிமையில்
ஒற்றைப் புன்னகைக்கான
காத்திருப்பில்
அழுதிருந்தது
ஓர் இரவு
விழிகள் தேடலில் தெலைந்ததால்.

என் மரணத்தை
நீங்கள் அழுது என்னை துக்கமாக்கதிர்கள்.
மாலையிட்டு வாசனைத் 

பூக்களால் அழங்கரித்து கொண்டாடவும்
வேண்டாம்
முடிந்தால் உபயோகப்படுவதை எடுத்துக் கொண்டு 

உடணடியாக உரமாக்கிடுங்கள்
விரும்பினால் எனக்கான ஒப்பாரிப் பாடலிலேனும்
கொஞ்சம் மெளனம் கொடுங்கள்
என் ஆன்மாவிற்கு அது போதுமானது



வழி மாற எத்தனிக்கும் போதெல்லாம்
ஒரு சிரிப்பு சப்தம் கேட்கிறது 

எனக்குத் தெரியுமென்றும் இதுதான் நீயென்றும்.
அது யாருடையதாகவும்
இருக்கலாம் நீங்களாகவும் இருக்கலாம்
ஒவ்வொருமுறையும் ஏமாற்றுகிறேன் 

என்னால் ஏதுமற்று நிலையாய் வாழ முடியுமென்று
நிருபித்து மெளனமாக்கிறேன்,
உங்களுக்கும்
கேட்கக் கூடும்
அந்த சிரிப்புச் சப்தம் 

காதலோ துரோகமோ
இயலாமையோ
உங்களை முழுமையாக தாக்கும்போது 

நீங்களும் வழி மாற எத்தனிக்கையில்
இன்னும் இன்னும் அதிகமாய் 

அந்த சிரிப்புச் சப்தம் கேட்குமாயின் 
நீங்கள் தோற்றுக் கொண்டிருக்கிறிர்கள் அதனிடம்.

என் நிழலைத்தான்
தேடிக் கொண்டிருக்கிறேன்
தவறுகளுக்காக தண்டிப்பதற்கு
உங்களைப் போலவே.


மரணம்வரை
காத்திருக்கத்தான்
வேண்டும்
நான் யாரென்று நானறிய,
நீங்கள் தற்கொலை
செய்வதாயின்
செய்து கொள்ளுங்கள். 

எத்தனை வலியானால்
என்ன எனக்கான
வலியை நான்
சுமக்கிறேன்
இறுதி நொடியில் இருக்கக் கூடும்
அதுவரை சந்தித்திராத ஒரு புன்னகை
ஒரு சந்தோசம் ஒரு திருப்தி நான் வாழ்ந்து
முடிந்து போகிறேன்,
உங்கள் விருப்பம்
நீங்கள் தற்கொலை செய்வதாயின்
செய்தியற்று
செத்தொழியுங்கள்.

பாதை மாறிய
ஆடுகளில்
ஒன்று
என்னைப் போல்தான்
இருந்திருக்கும்.

இறந்த பிறகான
கண்ணீருக்காக
நேசிக்க சொல்கிறது
உலகம்,
நானோ நீங்கள் இருக்கும் போதே அழுது கொண்டுதான்
இருந்தேன்
உங்களுக்காகவும்
உங்களால்
வடிவமைக்கபட்ட
எனக்காகவும். முடிந்தால்
என் மரணத்திற்கான
கண்ணீரை
இன்றே கொடுங்கள்
எனில் எனக்கு தெரியப் போவதில்லை
இறந்தபிறகு நீங்கள் எனை எத்தனை நேசித்தீர்களென்று.

கொஞ்சமும்
பெருந்தாத
முகமூடியது
எனக்கு
பிடிக்கவே
இல்லை.
இப்போதெல்லாம்
அவர்களால் நிறையவே
சிரிக்கிறேன் பயமாக
இருக்கிறதெனக்கு
அந்த மிருகம்
இறந்து விடுமோயென்று


ஆடையில்
திருத்தமில்லை அழுக்கோடு
நிர்வாணத்தின்
எல்லையில் நின்று
யாரின் புன்னகையையோ
அழகு பார்த்து
சிரிக்கிறான்
அத்தனை அன்பு அவன் கண்களில். எல்லாத் திருத்தங்களுடன் கண்டும் காணததுமாய் மெளனித்திருக்கிறேன்
நான்,
எனக்கு வாழக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறான்
அவனை நீங்கள் பைத்தியமெனச் சொல்லாதீர்கள் அவன்தான் கடவுளாயிருக்கிறான் எனக்கு.

எனக்கு பயமாக
இருக்கிறது
நீங்கள் என்னை
கொன்று விடுவீர்களோவென்று !
உங்களிடமிருந்து
தப்பித்து உயிர்வாழவே
உங்களை நேசிக்கிறேன்.

தான் சரியென்பதெல்லாம்
சரிதான்.
அது இங்கு
யாருக்கும்
தெரியாதென்பதே சரி.

இறக்கும் போது
யாருக்கும்
வலியாய்
விழியில்
ஈரமாய்
இருக்க விரும்பாத
சாத்தான்தான்
நான்,
தேடாதிர்கள் என்னை கடந்து செல்லுங்கள்
தேட தேட புறக்கணியுங்கள்
தனிமையில்
வாழப் பழக வேண்டும் நான்
நீங்கள் இறக்கும் முன்பே.



ஆமென்.



.

Friday, 19 April 2013

காதல் காதல் காதல் !!!

நீ இல்லா இரவுகளில் உன்னிடமிருந்து 
என்னை கொஞ்சம் தனிமை படுத்து 
அழுது விடிகிறேன் வலிகள் குறைந்து 
வழி பிறக்கட்டும் விழியில்.
♥♥

சொல்வதற்குஒன்றுமில்லை 
உன்னுடனான
வாழ்க்கையை
விழித்தே கனவு காண்கிறது இரவெல்லாம்.
♥♥

நினைவுகளால்நிறம்பி தனித்து கிடக்கிறது வீடு,
இன்னும் நான்
உயிரோடுதான்
இருக்கிறேன் !
நீ கொடுத்த
கடைசி முத்தத்தை சுவாசித்தபடி....
♥♥

நீயன்றி எதை கொடுத்தாலும்உறங்க மறுக்கிறது இந்த இரவு.
♥♥

புன்னகைக்குள்ஒளிந்துகொண்டு இம்சிக்கிறாய் 
அதுவா இதுவாவென்று 
தொலைந்­த குழந்தையின்
முகம் தேடும்
அன்னையின் தேடலாய்.
♥♥

நிலவின்அருகில்
ஒற்றை நட்சத்திரம்
நான் நிலவை
ரசிப்பேனென்று அவள் அனுப்பிய நெற்றிக் கண்.
♥♥



மூன்று முடிச்சிட்டால்
போதுமடியென்றால் !
வெறும் கயிற்றையா முடிச்சிடப் போகிறாயென்கிறால் ?
இல்லையடி
முதல் முடிச்சில்
உன் தாயின்
அன்பை காதலாய் முடிச்சிடுவேன் !
அட ! அடுத்த முடிச்சி ?
எப்போதும் ஒப்படைத்தலின்றி ஒப்புதலின்றி 
தனக்குள்ளையே தாங்கும் உன் தகப்பனினின் 
தாய்மையை முடிச்சிடுவேன் !
ம்ம்ம் கொல்றடா அப்புறம் ?
அர்த்தமற்ற கேள்விகளற்று
அகிம்சையாய்
ஆதரவாய் ஆமாம் சாமியாய்

 உன் சுதந்திரம் நேசிக்கும் நண்பனாய் நட்பை 
முன்றாவதாய் முடிச்சிடுவேன் !
இப்பேவே தாலிகட்டு இல்லையேல் 

என்னையாவது கட்டிக்கோள்லென்று கைவிரிக்கறாள் ஒரு தேவதை. 
♥♥

சில நிமிடங்களை
நீயிருந்து நிறப்பி
பல வருடங்களை
நினைவுகளால்
நிறப்ப வைக்கிறாய் நீ.

♥♥

பிரிதொரு சந்தர்ப்பத்திற்காக
காத்திருக்கிறது
எல்லா பிரிவுகளும். (நினைவுகளும்)

♥♥



உறவுகள்
படியேற
குரல்
இறக்கினாய்
இதயப்படியில்
ஏறிக்கொண்டே.
♥♥

பூனைக் குட்டிகளைகாணும் போதெல்லாம்
மீயாவென்று
கத்துகிறாய்
என்னை சந்திக்கும் போதும்.
♥♥

உன் புன்னகையில்
தொலைவதும்
உன் புன்னகையை
தேடுதலும்
எனக்கான காதல்.
♥♥

உன் வீட்டு செல்லப்பிராணிகளோடு
என்னையும்
சேர்த்துக் கொள் 
மழை நாளில் மடி கொடு அது போதும்.
♥♥
செல்லப்பிராணிகள்
காத்திருக்கின்றன உன்
செல்ல கிறுக்கலுக்காக
நீ இன்னும் கனவில்
கொஞ்சி கொண்டிருக்கிறா
ய்
ஒரு பூனைக்குட்டியை 

ஒரு பட்டாம்பூச்சியை
ஒரு மீசைவைத்த மீனை
ஒரு கரடி பொம்மையை
ஒரு நிஜக்
கரடி வேடிக்கை பார்க்க

♥♥


நானே தொலைந்தாலும்
தேடிச் சேர்க்கிறது என்னை
உன்னிடம்
நானென்னும் நீ.

♥♥
பயணங்களில் எப்போதும் அடம்பிடிக்கும்
சன்னலோரத்தில் சாய்ந்திட நீயின்றி நிமிர்ந்து
உணர்வற்று கிடக்கிறது என் தோள்கள்.

♥♥
காலி இடங்கள் நிறம்பிய பேருந்தில்
உன் அருகிருப்பு
இல்லாமல் வெறுமையாய்
நீற்கிறது என் பயணம்.

♥♥
கதவிடுக்கில் கண்ணாமூச்சி ஆடுகிறாய்
என் விழிகள் நசிந்து 

கண்ணீர் கசிவதை பாராமலேயே.
♥♥
நீ யாரோவா பார்க்கிறாய்
குழந்தை கையிலெடுத்து
தவறவிட்ட பொம்மையின் வலியில் நான்.

♥♥
விழி தெலைத்து
செவி தொலைத்து
நாசி தொலைத்து
உதடு தொலைத்து
நினைவு தொலைத்து
தனிமை செய்தேன்
நீ உடைத்து விளையாட.

♥♥
சந்தர்ப்பங்களுக்கான
காத்திருப்பில்
நிர்ப்பந்தங்கள்
நிர்ணயிக்கபடுகின்றன
திருப்தியில்லா
தேடலாய்
அதிர்ப்தியில் முடிகிறது எல்லாம்.

♥♥
பல் இடுக்கில்
சிக்கிக் கொண்ட
திசுக்களின்
இம்சையாய் நீ.

♥♥

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...