Showing posts with label தேசியம். Show all posts
Showing posts with label தேசியம். Show all posts

Monday, 25 February 2013

பஞ்சோந்திக்கும் மனிதனுக்கும் பெரிதான வித்தியாசங்கள் கிடையாது எதிரிலிருக்கும் கண்ணாடிகளின் பிரதிபலிப்பது.

யாரென்று தெரியாமலயே
இருந்திருக்கலாம்
நான்
யாரென்பதேனும்
இருந்திருக்கும்
என்னில்.

 நீங்கள்
யாரென்று
எனக்கு
தெரியாது
நானென்பதில்
நீங்களும் அவ்வளவே நானும்.

அவள் ஒருத்திக்காக
அவர்களை
பழிப்பதும்,

அவன் ஒருத்தனுக்காக
அவர்களை
பழிப்பதுமாய்,
நானோ
யாருக்காகவும்
யாரையும்
பழிப்பதில்லை
அவரவருக்கான
என்னை மட்டுமே
கொடுக்கிறேன்
அவர்களாகவே.


கொடுத்ததும்
பெற்றதுமாய்
எல்லோருக்குள்ளும்
ஓர் துரோகம்
துடித்துக் கொண்டே.

 பஞ்சோந்திக்கும்
மனிதனுக்கும்
பெரிதான வித்தியாசங்கள்
கிடையாது
எதிரிலிருக்கும்
கண்ணாடிகளின்
பிரதிப
லிப்பது.


ஒரு சிறு இழப்பை
ஏற்க தயங்குபவன்
உலகை ஆழப்பிறந்தவனெற்று 

பிதற்றுவதின்
நியாயம் சுயநலமாய் மட்டுமே.



பருவ காலங்கள்
தடம் மாறி
விட்டன
உதடுகள்
பேச தவறி
ஊனமாகி இடம் மாறி பேசுவதால்
இங்கு
வாக்கில்
வார்த்தையில் நேர்மையில்லை
நம்மிடமே இயற்கையும்
துரோகம்
செய்யப்
பழகியிருக்கிறது .


  
நான்கு
வரிகளோ நாற்பது வரிகளோ 

ஒரு கொலையை மரணமாக்கி 
துக்கம் விசாரித்து எழுத முடிகிறது 
நான்கு பேரில்
ஒருவராய் இல்லாமலயே.

 தன்னை
ஆடைகளால் மூடி
ஒவ்வொன்றிலும் நிஜ நீர்வாணம் தேடி
அலைகிறது
ஒவ்வொரு விலங்கும்
மனிதனென்று
பெயரொடு.



தனக்கான பிடிவாதங்களை
பிடித்தமாய்
பிடித்து கொண்டு
நடித்து கொள்கிறது
நானென்னும்
அவர்களுக்காக பிடிக்காதது போல்.


 மரணமொன்று
அருகில்
காத்திருக்கிறது
நாளையும் காத்திருக்கலாம்
அதுவரை
நானும் உங்களுக்காக
காத்திருப்பேன்
ஒரு புன்னகையாய்.


மூலைக்கு மூலை
இறந்துக் கிடக்கிறது
சுவாசிக்கும்
சதைப் பிண்டங்களாய்
இயற்கையை

ஏமாற்றிவிட்டு நாளைக்கான 
தூரோகங்களாய்.

கடைசியில்
கண்மூடி
இறந்து போகிறது
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொருவரின்
நானும்.



புறக்கணிக்கபட்ட
விலங்காய்
மூலையில்
இருளில் முடங்கி கிடக்கிறது நான்,
நீங்களோ நிழலென்ற 

வேடிக்கை பொருளால்
பொய்களை அடுக்கி 

தண்டித்து கொண்டிருக்கிறிர்கள்,
இனியும் துன்புறுத்தாதிர்கள்
அதன் கோரப்பற்களில் 

மொத்த வழுவையும் சேர்த்தாகிவிட்டது
அப்படியே கண்டும் காணாமல் 

கலைந்து செல்லுங்கள் 
தனிமையில் இளைப்பாறட்டும் இருள் 
ஒளியேற்றும் நாளில் முடிந்தால் 
நீங்களும் இருளாய் வாருங்கள் நிழலை 
இனியும் நம்புவதாயில்லை நானென்னும் மிருகம் •

 இறக்கும் போது
யாருக்கும்
வலியாய்
விழியில்
ஈரமாய்
இருக்க விரும்பாத
சாத்தான்தான்
நான்,
தேடாதிர்கள் என்னை கடந்து செல்லுங்கள்
தேட தேட புறக்கணியுங்கள்
தனிமையில்
வாழப் பழக வேண்டும் நான்
நீங்கள் இறக்கும் முன்பே.



ஆமென்.










கடவுள் :)



கடவுளைப் பற்றி என்னிடம்
ஒரு பதில்தான் இருக்கிறது

துரோகிகளின்
நம்பிக்கை
அவன்,
நல்லதும் செய்வதும்
இல்லை
கெடுதலும்
செய்வதில்லை
செய்வதெல்லாம்
மனிதன்தான்
உயர்ரக மது போல்
உயர்ரக
பழியாடே கடவுள்.


விபத்தில்
இறந்தவர்கள்
இயலாமையில்
இறந்தவர்கள்
இரு கால்
மிருகங்களால்
இறந்தவர்கள்
எல்லோருக்குள்ளும்
அவரவர் பெற்றோர் கொடுத்த முகமூடியும்
மரணித்துதான்
போகிறது
கடவுளென்ற
பெயரோடு.


வேற்று
சாதியென்றும்
மதமென்றும்
இனமென்றும்
கொஞ்சம் கொஞ்சமாக
இழந்ததென்னவோ
நமக்கான புன்னகைகளை மட்டும்தான்.


 போதாது
போதாதென்று
வேண்டுகிறோம்
போதும்
போதுமென்று
வாழ்ந்துப் பாருங்களேன்
மாறுதலுக்கு
கடவுளாகி.


விதிமுறையற்ற
கடவுளுக்கே
கடவுள் சொல்லியதாய் சொல்லி விதிமுறைகளிட்ட
மனிதன் எவ்ளோ பெரிய புத்திசாலியா இருப்பான்.


 எல்லைகள்
பிரித்து
வீரர்கள்
நிறுத்தி
கடவுளை
பாதுகாக்கும்
உலகத்திற்காக
கடவுள் எந்த கடவுளை வணங்கிக் கொண்டிருப்பான் ?


மனிதம்
பற்றியும்
நாம்
மனிதர்களென்றும்
பேசிக் கெண்டிருந்தாரொருவர்,
அவரின் பிறப்பே தவறென்றும்
உறவுகளை
விபச்சாரமென்றும்
விளக்கம் சொல்லி கொண்டிருந்தான்
மதவாதியொருவன்
மார்க்கமென்று
உண்டாம்
அவனுக்கான கடவுள் தீர்ப்பளிப்பானாம்
நாளை, அவனுக்கான
தீர்ப்பாய் சாத்தெனென்பதை தவிர வேறென்ன இருக்க முடியும் ! நான கடவுளானேன் அந்த மதச் சாத்தானால்.


இறந்தால் மட்டுமே
பார்க்க முடியுமெனில்
உங்களுக்குள்ளான
கடவுளை கொல்லுங்கள்
இல்லையேல்
உங்களையே கொன்றுவிடும் அந்த மாயை.





தெளிவற்று கிடக்கிறது பாதை
முட்களுக்கோ
கற்களுக்கோ
அஞ்சுபவனல்ல
முட்களாய்
கற்களாய்
திசைகாட்டியாய்
நேசித்தலின்
பெயரில் யார் யாரோ
யாரையேனும்
வதம் செய்து
தொடர்ந்தால்
சொர்க்கம் கிடைக்கலாம்
வேண்டாமென
அங்குதான்
அவர்களோடு
காத்திருக்கிறேன்

அவர்கள் பயணத்தை தொடர்வார்களென..




Sunday, 2 December 2012

பிரிவினைவாதம்.


இறந்தவர்களை 
உறவாடி 
சாதியெனக்
கொண்டாடி
சாக்கடைபுழுக்களாய்  நெளிந்து இன்றுவரை
ஆன்மாக்களுக்கு
அமைதிகொடுக்காத நீங்களா அன்பை பயிரிட்டு
அமைதியை அருவடை 
செய்யப் போகிறிர்கள்.


மொழி இனம் மதம் சாதி அன்பு நட்பு துரோகம் இழப்பு இயலாமை
எதிர்பார்ப்பு 
ஏமாற்றம் உலகின் அத்தனை பிரிவினைவாதமும் இல்லா வீடாய் அமைதியாய் 
அந்த தோட்டம் கடக்கும் போதெல்லாம்
அழுகுரலொன்று 
கேட்கும் 
நானின்றி அமைதி தொலைத்த என் இடத்திலிருந்து .



சிற்பமாய் செதுக்கப்பட்டு
வரலாற்றை 
தொலைத்து
சாதி உணர்வோடு
உடைந்து
உயிர் குடிக்க 
ஒவ்வொரு ஊர்களிலும் 
காத்திருக்கிறது
ஒரு கற்ச்சிலை.



பிறர் மீதான கேள்விகள் மட்டுமே எல்லோரிடமும்
தனக்கான 
கேள்விகளென்று
அறியாமல்.



மாண்ட உயிர்களுக்கு
துனை நிற்கா உங்கள் கடவுள் 
நானே ஆண்டவென அழிப்பவர்களை அழிக்கா உங்கள் கடவுள் 

வருவாதாய் 
சொன்னவனும்
வரவில்லை
எழுவதாய்சொன்னவனும்
எழவில்லை
காப்பதாய்சொன்னவனும்
காக்கவில்லை
கொலைகார அரக்கர்களுக்கு
மனித உயிரைப் பற்றி சொல்லாத கடவுளைதான்
இன்னும் உலகம் வணங்குகிறது
வணங்குபவனை மட்டுமே காப்பானெனில்
அவன் கடவுளெ அல்ல சுய நலவாதி
மனிதனை விட தரக்குவறைவானவன்.

Tuesday, 18 September 2012

தாத்தாக்கள்



பெற்றுத்தந்த சுதந்திரத்தை
பேணிக்காத்திடா
பேரப்பிள்ளைகள்
கொள்கைகளை பின் தொடராமல் 
தலைவரென்றும் வழிகாட்டியென்றும் 
உரிமை கொண்டாடினர்
சாதிப்பாராதுழைத்த தாத்தாக்களின்
பெருமையை
சாதி சாயத்தோடும்
விளம்பர மோகத்தோடும்....

Thursday, 6 September 2012

உலக வரலாறு

மறுத்தலும்
இகழ்தலும்
நீ யாரென்று
நிறுபிக்கும
மறுத்திடு
இகழ்ந்திடு..!!

#உலக வரலாறு

Thursday, 16 August 2012

தேசியம்.!!!



அங்காடியில் 
எந்த மரியாதையுமில்லை 
எந்த உனர்வும் இல்லை
வெறும் விற்பனை பொருளாய் 
அங்கொன்றும் இங்கொன்றுமாய் 
தொங்கிகொண்டு
என் கண்ணை உறுத்தியது 
கேட்பாரற்று
கவனிபாரற்று தரையில் கிடந்த 
அந்த ஒற்றை கொடி மட்டுமே 
தலை குனிந்தேன் 
தலை நிமிர்ந்தது தேசியம்...joe.!

Thursday, 9 August 2012

புதுமையும் தனித்துவமும்...



எல்லாவற்றிலும் வித்தியாசம்
கேட்பதும் கொடுப்துமே
உலகின் செயலாய்
புதுமையும் தனித்துவமும்
தேடுகிறோம் 

புல்லாங்குழல் இசையை 
மறைக்கும் இரைச்சலில் 
புல்லாங்குழல் விறகாய் 
கிடப்பதே மேல்...!

Saturday, 4 August 2012


கடவுளுக்கு கூலி கொடுத்துப்பொக
மீதமாய்
வெற்று கையோடு திரும்பினேன்
ஆலய வாசலில்
கையேந்தி நின்ற
பெரியவருக்கு இப்போது நான் கடன்காரன்
...:-(

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...