Monday 25 February 2013

பஞ்சோந்திக்கும் மனிதனுக்கும் பெரிதான வித்தியாசங்கள் கிடையாது எதிரிலிருக்கும் கண்ணாடிகளின் பிரதிபலிப்பது.

யாரென்று தெரியாமலயே
இருந்திருக்கலாம்
நான்
யாரென்பதேனும்
இருந்திருக்கும்
என்னில்.

 நீங்கள்
யாரென்று
எனக்கு
தெரியாது
நானென்பதில்
நீங்களும் அவ்வளவே நானும்.

அவள் ஒருத்திக்காக
அவர்களை
பழிப்பதும்,

அவன் ஒருத்தனுக்காக
அவர்களை
பழிப்பதுமாய்,
நானோ
யாருக்காகவும்
யாரையும்
பழிப்பதில்லை
அவரவருக்கான
என்னை மட்டுமே
கொடுக்கிறேன்
அவர்களாகவே.


கொடுத்ததும்
பெற்றதுமாய்
எல்லோருக்குள்ளும்
ஓர் துரோகம்
துடித்துக் கொண்டே.

 பஞ்சோந்திக்கும்
மனிதனுக்கும்
பெரிதான வித்தியாசங்கள்
கிடையாது
எதிரிலிருக்கும்
கண்ணாடிகளின்
பிரதிப
லிப்பது.


ஒரு சிறு இழப்பை
ஏற்க தயங்குபவன்
உலகை ஆழப்பிறந்தவனெற்று 

பிதற்றுவதின்
நியாயம் சுயநலமாய் மட்டுமே.



பருவ காலங்கள்
தடம் மாறி
விட்டன
உதடுகள்
பேச தவறி
ஊனமாகி இடம் மாறி பேசுவதால்
இங்கு
வாக்கில்
வார்த்தையில் நேர்மையில்லை
நம்மிடமே இயற்கையும்
துரோகம்
செய்யப்
பழகியிருக்கிறது .


  
நான்கு
வரிகளோ நாற்பது வரிகளோ 

ஒரு கொலையை மரணமாக்கி 
துக்கம் விசாரித்து எழுத முடிகிறது 
நான்கு பேரில்
ஒருவராய் இல்லாமலயே.

 தன்னை
ஆடைகளால் மூடி
ஒவ்வொன்றிலும் நிஜ நீர்வாணம் தேடி
அலைகிறது
ஒவ்வொரு விலங்கும்
மனிதனென்று
பெயரொடு.



தனக்கான பிடிவாதங்களை
பிடித்தமாய்
பிடித்து கொண்டு
நடித்து கொள்கிறது
நானென்னும்
அவர்களுக்காக பிடிக்காதது போல்.


 மரணமொன்று
அருகில்
காத்திருக்கிறது
நாளையும் காத்திருக்கலாம்
அதுவரை
நானும் உங்களுக்காக
காத்திருப்பேன்
ஒரு புன்னகையாய்.


மூலைக்கு மூலை
இறந்துக் கிடக்கிறது
சுவாசிக்கும்
சதைப் பிண்டங்களாய்
இயற்கையை

ஏமாற்றிவிட்டு நாளைக்கான 
தூரோகங்களாய்.

கடைசியில்
கண்மூடி
இறந்து போகிறது
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொருவரின்
நானும்.



புறக்கணிக்கபட்ட
விலங்காய்
மூலையில்
இருளில் முடங்கி கிடக்கிறது நான்,
நீங்களோ நிழலென்ற 

வேடிக்கை பொருளால்
பொய்களை அடுக்கி 

தண்டித்து கொண்டிருக்கிறிர்கள்,
இனியும் துன்புறுத்தாதிர்கள்
அதன் கோரப்பற்களில் 

மொத்த வழுவையும் சேர்த்தாகிவிட்டது
அப்படியே கண்டும் காணாமல் 

கலைந்து செல்லுங்கள் 
தனிமையில் இளைப்பாறட்டும் இருள் 
ஒளியேற்றும் நாளில் முடிந்தால் 
நீங்களும் இருளாய் வாருங்கள் நிழலை 
இனியும் நம்புவதாயில்லை நானென்னும் மிருகம் •

 இறக்கும் போது
யாருக்கும்
வலியாய்
விழியில்
ஈரமாய்
இருக்க விரும்பாத
சாத்தான்தான்
நான்,
தேடாதிர்கள் என்னை கடந்து செல்லுங்கள்
தேட தேட புறக்கணியுங்கள்
தனிமையில்
வாழப் பழக வேண்டும் நான்
நீங்கள் இறக்கும் முன்பே.



ஆமென்.










No comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...