Showing posts with label மழை. Show all posts
Showing posts with label மழை. Show all posts

Wednesday, 16 January 2013

"மழை"...!!!!





நிலவைத் திருடிக் கொண்டு ஒளியும் இல்லை
துளியும் இல்லையென 
கண்சிமிட்டி 
சிரிக்கிறாள்
மின்னலாய். 

ஓவ்வொரு
இடிச்சத்தமும்
இதயத்தில்
உறவுகளின்
துடிப்பாய் வெடிக்கிறது...

எங்கே விழுந்தாலென்ன
பாதைகள்
தீர்மானிக்கும் நம்பிக்கை என்னில் மழை



உன் நிழல்
குடை பிடிக்க
முடியா அன்பு மழை.


 
நீ வேண்டாமென
நினைக்கும் போதெல்லாம்
நானே வேண்டாமென
நினைக்கிறேன்.

தினமும் உன் நினைவுகளை நடை பாதையெங்கும்
விட்டுச் செல்கிறேன்
நாளைய தனிமை தவிர்க்க.


போ உன் பேச்சு கா
நீ பார்க்க குழந்தையை
கொஞ்சியதை
மனதில் வைத்துக் கொண்டு வரமறுக்கிறாய்
போ உன் பேச்சு கா !




ஒளிந்து கொல்லாதே
உன்னை
என்னால் தேட முடியாது
அத்தனையும்
உதறி தள்ளி வீதி வந்தது உன்னை கொஞ்சி விளையாடத்தான் வா !



ஒருபிள்ளை
வாழும்
வீட்டின்
வெறுமை
நிரம்பி வழிகிறது
உன் வருகையால்.


முற்றுப்புள்ளி
தீர்மானித்து
இயற்கை எழுதும் கடிதம்
நீ .


நாசி தொட்டது
உன்வாசம்
இங்குதான்
அருகில்தான்
இருக்கிறாய்
முத்தமிடப்போகும்
நேரம்
தூரமில்லை.



புன்னகைச்
சத்தம்
நிறம்பிய
தொட்டில்

நீ

கருவறை
ஒன்றென
கொண்டாடும்
புன்னகை

நீ



என் தோள்களின்
பள்ளத்தில்
மழலையாய் நீ.


நீ
ஒதுங்க
தொடங்க ஈசலாய்
நகர்கிறான்
மனிதன்..!




எல்லா வார்த்தையும்
உறங்கட்டுமென
காத்திருக்கிறது உனக்கான ஓர்
வார்த்தை...






  

Monday, 29 October 2012

மழை ! ! !



மழை பிடித்து
விளையாடலாம்
வாவென அழைத்தால்
உன் கைபிடித்தால்
போதுமெனச் சொல்லி மறுக்கிறாள்..!


நீ விழித்தால்தான்
மழை
நிற்குமாம் !
அப்படியா !
இன்னும்
உன் காதலளவு
பெய்திட வில்லை இன்னும் பெய்திடச் சொல் காதலோடு !
நீ இன்னும் கொஞ்சலோடு
கெஞ்சிக் கொண்டிரு
குட்டித் தூக்கம்
தூங்கி விழிக்கிறேன் உன் குட்டி இளவரசி !

தகதப்பின் எல்லை தாண்டிய
பாதம் உள்ளிழுக்கிறாள்
பகலவன் பகலே
வேண்டாமென மறைகிறான்.!

விழித்து சோம்பல் முறிக்கிறாள்
மண் வாசனை
தொலைந்து
நாசியெங்கும்
அவள் வாசனை..!



தரை சில்லிடுவதாய்ச் சொல்லி
தோல் பற்றுகிறாள்
நெற்றியிலா
உதட்டிலா
யோசனையில்
நான்.!



தடுமாறும் விழி
அனலாய் பெருமூச்சு
இருபக்க கன்னம் தட்டி சிரிக்கிறாள்..!




கொலுசின்
முத்தொன்று
உதிர்ந்ததாய்
சொல்லி
தலை குணிந்து தேடத் தொடங்கினாள்
நான்தான் அது நான்தான் அது எனக் கெஞ்சியது மழை..!!


நீர் அள்ளி முகம் தெளித்து
என்மீது உதறுகிறாள்
தோற்றுப் போனது மழை !


தேநீர் கலக்கலாம்
வாவென
அடுப்பங்கரை
அழைக்கிறாள்
இன்று தேநீரே உணவு..!!!


Tuesday, 16 October 2012

இயர்கையை காப்போம் இயற்கையோடு இயற்கையாய் வாழ்வோம்.. !!!



மரங்களை
வெட்டி வெறுமையாக்கி
வெட்டிய
மரங்களை கதவாக்கி
மீதமானதில்
சவப்பெட்டி
செய்து
அதிலும் 
மீதமானதை 
ஏழைக்கு எரிக்க விற்று
காற்றை தொலைத்தான்..
காலிமனை
கண்ணை உறுத்த
கடனை உடனே
வாங்கி
கல்லை அடுக்கி
சன்னல் வைச்சி
கண்ணாடி போட்டு மூடி வைச்சான்
மரம் எண்ணியது
உயர்ரக
சவப்பெட்டிகளென.



மரங்களை வெட்டிவிட்டு 
கற்களை நட்டு வைத்தோம்...
அவரவர் வசதிக்கேற்ப 
கற்கள் வளர்ந்து நின்றன.....
மரம் தெலைத்தோம்

மழை தொலைந்தது,
விளை  நிலங்களை  கூறு பொட்டு
வீட்டுமனையென கூவிக் கூவி விற்றோம்.....
இன்று குடிக்க நீரின்றி தவிக்கிறோம்,
நாளை உணவின்றி தவிப்போம்,
வரும்ஏதோ ஓர்நாள் சுவாசிக்க காற்று இன்றி தவிப்போம் 
அப்பொதும் அசைவற்றே நிற்கும் நாம் நட்டுவைத்த கற்கள்.....





இரக்கமில்லாமல் இருகிப்பொன இதயங்களொடு... 
இடைவேளி இல்லா வீடுகளுக்கு மத்தியில்...
மழைக்கு ஒதுங்க சிறு தாவாரம் இல்லை
வெயிளுக்கு இளைப்பார சிறு தின்னை இல்லை
சுற்றமும் இல்லை நட்பும் இல்லை......
இன்றைய மனிதன் வாழ வீடு கட்டவில்லை 
காசு வசூலிக்க கம்பிகள் இல்லா சிறைக்கூண்டுகள் கட்டுகிறான்.....
இயற்கையை அழீத்து எந்திரமாய் வாழும் இவர்களை என்ன செய்வது ?


இப்டி ஒரே இடத்தில் கட்டினா பூகம்பம் வராம என்ன செய்யும்....

வீட்டுக்கு இரண்டு மரம் வளர்ப்போம் இயற்கையை பாதுகாப்போம்.....


அரசாங்கமே வீட்டுமனைக்கு இரண்டு மரம் வளர்த்தால் மட்டுமே வீடுகட்ட அனுமதி என்ற சட்டம் போடு,இருக்கும் வீடுகளில் மரம் வளர்தால் வீட்டுவரி குறைத்திடு,வளர்க்காத வீடுகளுக்கு வருடத்துக்கு ஒரு தொகை தன்டனையாய் வசூலித்திடு... 

இயர்கையை காப்போம் இயற்கையோடு இயற்கையாய் வாழ்வோம்.









Thursday, 9 August 2012

"மழை"



வானின் தனிகுடித்தனங்கள் கூட்டுக்குடும்பமாய்
திருவிழாவிற்கான பேச்சு வார்த்தை...! 
                                                              "மழை"



ஒரு துளிக்குள்
ஒழிந்து
நேடுதுர பயனத்தில்
நொடி போழுதில் உடைந்து
அவளில் ஒட்டிக்கொள்ள வேண்டும்
அவ்வளவு காதல் உன்மீது....
                                          "மழை"




இரவு நீ வந்து சென்ற

அடையாளம்
பூமியில் மட்டுமல்ல 
இதயத்திலும்
விழியிலும்
பிசுபிசுப்பாய்
ஒட்டியும் ஒட்டாமலும்..
                                     "மழை"....joe.!

Saturday, 28 July 2012

"மழை"



உதடுகளை குவிக்க தொடங்கி விட்டாய் முதல் முத்தம் எனக்கா                         
எனைத்தாங்கும் அவளுக்கா.... மழை!!!


இனி உன்னை 
வரவேற்பதாய்
இல்லை
ஒவ்வோரு முறையும்
உதடுகளை குவித்து ஏமாற்றுகிறாய்
மழலையைப்போல் காத்திருந்து
கடைசியில் ஏமாற்றமே மிச்சம்
சத்தங்களும் இல்லை உன் வாசமும் நூகர
முடியவில்லை
உயீர் குளிர்விப்பாய் 
என்றேன்னினேன்
நீ அனலில் தவிக்கவிடுகிறாய்
இனி உன்னை வரவேர்க்கபோவதில்லை
உன் பேச்சு கா...
"மழை"



ஸ்ஸ்ஸ...் 
அமைதி 
அமைதி 
அவர்கள்
முத்தமிடப்போகிறார்கள்
"மழை"


துளி விடு தூது விடுகிறாய் 
நான் இன்னும்
ஒளிந்துகொண்டுதான் இருக்கிறேன்
நாம் பழம் விட்டு கொள்ள நீ இன்னும் பலமாக வா
தூளி முத்தம் போதாது எனக்கு கடலளவு காதலோடு காத்திருக்கிறேன் நான்...
"மழை"


கண்ணாமுச்சி ஆடிக்கொண்டிருந்தோம் சிறுபிள்ளைகளாய்
உன்னை 
விரலால்
தொட்டதற்கு மின்னலாய் சிரித்து கேளி
செய்தாய் 
செல்ல கோபங்கள்
கரைய தொடங்கின
இனி உச்சி முதல் 
பாதம் வரை உன் சொந்தம் உயிரோடு கலந்துவிடு....
"மழை"


போதும் என்றா இல்லை தீர்ந்து விட்டதா 
முத்தங்கள்
அமைதி காக்க தொடங்கினாய் நீ
வீடு செல்ல தொடங்குகிறேன் நான் 
அன்னையவள்
முந்தானையில் ஒற்றி எடுத்துக்கொள்வாள்
அவளுக்கு 
நான் கொடுக்க
மறந்த முத்தங்களேன....
"மழை".......joe.!

Tuesday, 17 July 2012

உன் பெயர் மட்டும் ஏனோ மழை...!



சில நாட்களாய் நான் உறங்கிய பின் வருகிறாய் என் மீது உனக்கு என்ன கோபம்..


ஒவ்வோருமுறையும் உன் வருகையை கைகள் விரித்து உதடுகளால் முத்தமிட்டு வரவேற்கிறேன் என் உயிரால் கட்டி தழுவுகிறேன்...


நீயோ பகலில் வர மறுக்கிறாய் இரவிலும் வந்த வேகத்தில் வீடு திரும்பி இருக்கிறாய்....

நீ முத்தமிட்டு கோஞ்சி விளையாட பச்சை புள்வெளியும் இல்லை ஒட்டி உறவாட எந்த மரமும் இல்லை என்ற வருத்தமா...

இல்லை உலகம் உன்னை கண்டதும் ஒடி ஒழிவதால் உனக்கு கோபமா மன்னித்து விடு அந்த கற்சுவர் கைதிகளை அவர்கள் திருந்தா விட்டாலும் வருந்தி கொண்டுதான் இருக்கிறார்கள்உனக்காக...

நான் இருக்கிறேன் உன்னை உயீராய் சுவாசிக்க... உறவாய் நேசிக்க...

இன்றும் இரவு வந்து என்னை ஏமாற்றாதே கனவில் வர நீ என் காதலி அல்ல கடைசிவரை என் உயிரில் இருக்கும் உயீர் நீர்
உன் பெயர் மட்டும் ஏனோ மழை...! joe.!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...