Saturday 16 February 2013

இனி யாராலும் வளர்க்க முடியாது என்னில் இன்னுமோர் நீழல் தரும் நிஜத்தை உனையன்றி.


நீயற்ற
இடங்களில்
கண்ணீரை
நட்டு வைக்கிறேன்
ஒரு துளியேனும் மடிந்து போகட்டும் நானென்னும் நீ,

இனி யாராலும் வளர்க்க முடியாது என்னில் 
இன்னுமோர் நீழல் தரும் நிஜத்தை உனையன்றி.

என் கல்லறையில்
உன் நினைவுச் 
சப்தங்கள் இசையாய். 
பட்டாம் பூச்சி உன் சிறகு
நானென்பதால்
மிச்சமின்றி
என் நினைவை தின்கிறாய் நீ.
என்னிலிருந்து
தவறி விழுந்த
புன்னகையாய்
நீ  
மெளனமாகிப் 
போனேன் நான்.
போழுதுகள்
நினைவில் மயங்கி
மாலையில்
விடியும்
பகல்தான்
எனதாய்
ஓய்வில்
ஒரு கனம்
செலவிடுகிறாய்
குரல் தோகை விரித்தலோ
குருஞ்செய்தி
வானவில் அனுப்பலோ
இரவுவரை காத்திருக்கிறதுநீயென்னும் நாட்களில் நான்.

நீதானே ! என்றே
விட்டுக் கொடுக்க தொடங்குகிறேன்
நீயோ இவன்தானென்றில்லாது
இவன் இப்படித்தானென்று தீர்மானித்திருக்கிறாய்
நிரந்தரமில்லா வாழ்க்கை இதென்பது உனக்கு புரிகையில்
நான் இல்லாமல் இருப்பேன்.

எனக்கான
தேடலின்றி
நீ,
என் காதலின்
பரிசுத்தம் அதுவே !
வலிகளை
எனக்குள்தான்
எழுதுகிறேன்
மரணத்தை
முத்தமிடும்வரை
உன்னை சந்திக்காதிருப்பெனென்ற நம்பிக்கையால்.


நானில்லா வாழ்க்கை
உனக்கு
நரகமென்றே
தினமும் பைத்தியம் பிடிக்கிறதெனக்கு.

  

என் மரணத்திற்கு
எல்லோரும்
வந்திருந்தார்கள்
உன்னை தேடிச் சென்ற என்னைத்தான்
கானவில்லை.

துளியும் சந்தேகம்
வேண்டாம்
இந்த இரவும்
உனக்கானதுதான்.




விட்டம் பார்த்து
நிலைகுத்தி நிற்கிறது
பார்வை
உன் நினைவுகள்
எனைச் சுற்றி அழத் தொடங்குகின்றன..














.











No comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...