தனிமையை
அதிகம்
நேசிப்பவன்
உறவுகளை
வெறுக்கிறான்
தனிமையை நேசித்துப் பழகாதிர்கள்
உலகம் யாரோவாகத் தெரியும்.
சொல்
கழுத்தை நெறித்தது
நட்பென்னும்
சொல் முதுகை நெறித்தது காதலென்னும்
சொல்
இதயம் நெறித்தது
இயற்கையென்னும்
சொல் மட்டும்
ஏனோ சுவாசம்
நேசிக்கிறது
முத்மிடத் தோன்றுகிறது
இயற்கையாகி
இயற்கையை.
முத்மிடத் தோன்றுகிறது
இயற்கையாகி
இயற்கையை.
எந்த புன்னகைக்காக
ஏங்கினாயோ
எந்த புன்ணகைக்காக
வாழ்ந்தாயோ
அந்த புன்னகையை
நீயே கிள்ளி எறிந்து விட்டு
தேடி அலைவாய்
எனில் நீ மனிதன்.
எதையாவது
மாற்ற வேண்டும்
என்ற எண்ணமே
உன்னையும்
என்னையும்
மாற்றி ஏமாற்றுகிறது.
நானே சாட்சி
கூண்டில்
நின்று என்னை
நிருபிக்கிறேன்
உங்களிடம்
தண்டிக்கப்பட வேண்டியவர்கள்
நீங்களென தெரிந்தே
உங்களை நீதிபதிகளாக்குகிறேன்
எதிர்பார்ப்புகளுடன்
ஏமாற்றம் தருகையில் இடம் மாற்றம் செய்து
தண்டிக்கப்படுவிர்கள் நீங்கள் சத்தியவாக்கு வாங்கப்படமலேயே.
எண்ணத்தில்
கைகள் விரித்து
அலறுகிறேன்
விடுதலை வேண்டுமென
உதடுகளில்
புன்னகையோடு.
அழகு இல்லையென என்னும்
உருவங்ளை உற்றுப்பார்
தன்னை அழகாக்க அவர்கள் எடுத்துக் கொண்ட
மெனக்கெடல் அழகாக இருக்கும்.
செயற்கை தொலைந்து
இயற்கை
அமைதியான
இருளில்
செயற்கையொன்று அறிவுறுத்தியது
காலம் கைவிட்டு போவதாய் டிக் டிக் டிக்கென்று...
உன் எண்ணங்கள்
ஏற்றுக் கொண்டால்
உன்மை என்கிறாய்
ஏற்றுக் கொள்ளா உன்மை உனக்கு பொய்யே
அதே மன நிலையில் நானும்
உன்மையை துனிந்து சொல் நாம் உலகின் பொய்யென.
தொடக்கம் யாரோ தீர்மானித்தார்கள்
நான் முடிக்க வேண்டும்
இந்த வாழ்வை
இந்த நாளை..!
எல்லோரையும்
சுமக்க முயன்று
என்னையே சுமக்க
முடியாது தோற்கிறேன்..!
யாரோ சுமப்பதாய் சொல்லிக் கொண்டார்கள்
என்னை
நானும் சமப்பதாய் சொல்லிக் கொண்டேன்
அவர்களையே..!
நாளை நானில்லா என்னை சுமப்பார்கள்
இங்கே வைத்திருக்க
முடியாது
நான் சுமந்து
ஒளித்து வைத்த அவர்களிருக்கும்
இடத்துக்கு என்னையும் யாரோ.
அவர்களையே..!
நாளை நானில்லா என்னை சுமப்பார்கள்
இங்கே வைத்திருக்க
முடியாது
நான் சுமந்து
ஒளித்து வைத்த அவர்களிருக்கும்
இடத்துக்கு என்னையும் யாரோ.
இதயம்
பறி கொடுத்ததாய்
எண்ணி
எங்கேங்கோ தேடுகிறோம்
விட்டுச் சென்ற
பிணங்கள் அமைதியாய்.
தொட்டிலில்
அழுகுரல்
அதிகமாய்
கேட்கிறது
அழுகை நிறுத்த
வெற்றுத் தொட்டில் அசைக்கிறேன்
அமைதி நிலவியது
எட்டிப் பார்க்கிறேன்
உறங்கிவிட்டேனா என்று
நானென்று தெரிந்தும்.
#நான் !
நானென்னும்
நான்
உங்களுக்கு
துரோகிதான்.