தாயின்
விழிப்புக்கு முன் விழித்த
குழந்தையின்
சீன்டாலாய்
உன் நினைவின் தீன்டல் கனவில்..!
அங்காடியில்
எந்த மரியாதையுமில்லை
எந்த உனர்வும் இல்லை
வெறும் விற்பனை பொருளாய்
அங்கொன்றும் இங்கொ ன் றுமாய்
தொங்கிகொண்டு
என் கண்ணை உறுத்தியது
கேட்பாரற்று
கவனிபாரற்று தரையில் கிடந்த
அந்த ஒற்றை கொடி மட்டுமே
தலை குனிந்தேன்
தலை நிமிர்ந்தது தேசியம்...joe.!
சூரியனால்
கிழிக்க முடியா
இருளுக்குள் தவித்த
பட்டாம்பூச்சியின் இதய இருளை
மழலை பூ ஒன்று
தோலில் ஏறி துடைத்து செல்ல கண்டேன்...! joe.!
எல்லாவற்றிலும் வித்தியாசம்
கேட்பதும் கொடுப்துமே
உலகின் செயலாய்
புதுமையும் தனித்துவமும்
தேடுகிறோம்
புல்லாங்குழல் இசையை
மறைக்கும் இரைச்சலில்
புல்லாங்குழல் விறகாய்
கிடப்பதே மேல்...!
சின்ன சின்ன சன்டைகள்தான் இன்னும் அதிகமாய் காதலிக்க சொல்கிறது அவளை....
தோல்சாய்ந்து நுகர்வாய் உன் வாசம் மட்டுமே உள்ளதா ஏதேனும் சக்களத்தி தலை சாய்திருப்பாளா என்று நானோ உச்சி வகிடில் பிழை திருத்திகொண்டிருப்பேன்...! joe!
வானின் தனிகுடித்தனங்கள் கூட்டுக்குடும்பமாய்
திருவிழாவிற்கான பேச்சு வார்த்தை...!
"மழை"
ஒரு துளிக்குள்
ஒழிந்து
நேடுதுர பயனத்தில்
நொடி போழுதில் உடைந்து
அவளில் ஒட்டிக்கொள்ள வேண்டும்
அவ்வளவு காதல் உன்மீது....
"மழை"
இரவு நீ வந்து சென்ற
அடையாளம்
பூமியில் மட்டுமல்ல
இதயத்திலும்
விழியிலும்
பிசுபிசுப்பாய்
ஒட்டியும் ஒட்டாமலும்..
"மழை"....joe.!
பிடித்த
வார்த்தைகளை
பின்தொடர்தல்
போன்றதொரு
சுகம்
கண்டறியேன் வாழ்வில்...joe.!
இந்த பிரிவின்
மெளனம்
முத்தத்திற்கான
செமிப்பு கிடங்கா
இல்லை
காத்திருப்பு புதைகுழியா...!
கடைசி சந்தி ப் பில் நீ கிள்ளிய இடம்
இப்போது வலிக்கிறது
பிடித்திழுத்த உச்சி முடி உதிர காண்கிறேன்
கண்ணிராய்
கரைகிறது காதல்...!
இமைச்சிறகை
பிரிக்காதே
என் வாழ்நாள்
இறகு எல்லாம்
வாழாமல் உதிர்கிறது உன் விழியில் மயங்கி...!
விடியலில்லா இரவு தேடுவேன்
அவள் நினைவில்...
அடுத்த விடியல் வேண்டாமென்ற ஆசையோடு...:!
கடவுளுக்கு கூலி கொடுத்துப்பொக மீதமாய் வெற்று கையோடு திரும்பினேன் ஆலய வாசலில் கையேந்தி நின்ற பெரியவருக்கு இப்போது நான் கடன்காரன் ...:-(
ஆயிரம் எதிர்பார்ப்புகளோடு
வாசல் தான்டி
வந்தான்
ஆயிரம் கொஞ்சல் கேள்விகள் கேட்க ப் பட்டது
கடைசிவரை
அவன் தேடிவந்த அவன் வயது நட்பு இல்லா ஏமாற்றத்தோடு
தாயின் தோலில் இடம்மாற்றுகிறான் நட்பை...!
வியர்வை பேதம்பாரா
கைத்துணி
நட்பு
கண்ணீரையே அதிகம் துடைக்கும்..!