நான் எடுக்கும்
முடிவுகளை
நானே மீறித் தொலைகிறேன்
எனக்கான வாக்குறிதிகளை
நானே காப்பாற்ற
தவறுகிறேன்,
யாரோ ஒருவன்
கேட்டுக் கொண்டிருந்த போதும்
இனியும் அவனை ஏமாற்றப் போவதில்லை,
ஒவ்வொருமுறையும்
தவழும் குழந்தையாய்
விழுந்தெழகிறேன்
நானே கைதட்டி
சிரித்தே என்னை குழந்தையாய் பாவித்தே பல
பாவங்கள் சொய்தவன்னமே
காலங்களை என்னை அவர்களை
ஏமாற்றிக் கொண்டே
மீன்டும் முடிவொன்றெடுக்கிறேன்
முடியாத முடிவொன்றிலிருந்தே
இதோ மீன்டும் ஒரு முடிவு
முடிவற்றுப் போக எத்தனிக்கிறது
இதை வென்றிடவே
எடுக்கப்பட்டது
இன்னோரு முடிவு
முடிவொன்றும் முடிவல்ல
இன்னோரு முடிவின் தொடக்கம்.

No comments:
Post a Comment