இறப்பின் வாயிலில்
ஆயிரமாயிரம்
தோள்கள்
நட்பு பாராட்ட
பாரபட்சமின்றி
ஒதுக்கித் தள்ளி
மடியொன்று தேடும் வலிதான் நீ.
♥♥♥.
உடல் பசியோ
உணவுப் பசியோ
உணர்வுப் பசியோ அல்ல நீ உயிரின் பசி நீ.
♥♥♥.
இன்னும் இன்னுமாய்
விலகிச் செல்
நானென்பதே
மறந்து மறத்து
போகட்டும்
நானே நீயாகும்வரைதான்
உன்னால் துரத்த முடியும்
இன்னும் இன்னுமாய் விலகிச் செல் நீ.
♥♥♥.
இப்போதும்
எப்போதும்
உனக்குப்
பிடித்த பாடலை
நீயாகவே கேட்கிறது நான்.
♥♥♥.
பெரிதான தவறுகளொன்றும் செய்திட வில்லை
உன்னை அதிதமாய் தேடியதை தவிர.
♥♥♥.
இதோ எனக்கான
உறவுகள்
காத்திருக்கிறது
எனக்கான
உலகம் உறக்கம்
எனக்கான எல்லாமே காத்திருக்கிறது
நான் உன்னோடுத் இருக்கிறேன்.
♥♥♥.
இப்படித்தான் நீயென்றாலும்
எப்படியும்
என்னால் உன்னை விலக்க முடிந்ததே இல்லை.
♥♥♥.
இரவுகளை கொய்து
உனக்கான
கனவுகளை
செதுக்குறேன்
நீயோ வாசலை தொலைத்திருந்தாய் .
♥♥♥.
நான் முட்டாளென்பதை
காட்டிலும்
உன் பைத்தியமென்பதே
எனக்கான முக்கியமாய்.
♥♥♥.
இனி பேசப்போவதில்லைதான்
நான் இறந்தவனென்று
உலகம் உனக்கு
நிருபிக்கும்
நீ வாழ் வாழ்ந்திடு
♥♥♥.
உனக்கும் எனக்குமான
பாடலில்
உனக்கும்
எனக்குமான
ஊடலில்
உனக்கும்
எனக்குமான
காதலில்
எப்போதும்
எதோ ஒன்று
சாலைகளில்
தேநீர் கடைகளில்
தனிமையில்.
♥♥♥.
எனக்கான ஒன்றான உன்னைத்தேடி
பாதைகளை
தொலைத்து விட்டேன்
முடிந்தால்
கைப்பிடித்து
வீடு சேர்
அவர்களுக்கான
எண்ணிக்கையில்
ஒன்று குறைவதாய் காத்திருக்கக் கூடும்
அவர்களாவது
நிம்மதியாய்
உறங்கட்டும் உன்னால்
♥♥♥.
என்னை சுற்றித்தான்
எனக்கான
கெண்டாட்டம்
உணர்வற்று கிடந்தது நான் மட்டுமெ .
♥♥♥.
உனக்குஎழுதபட்ட
கடிதங்கள்
எனக்கே
திரும்பி
வருகின்றன
என்னோடுதான்
இருக்கிறாய்
நீயாக.
என் கடைசி உயிராய் கெஞ்சிக் கிடக்கிறது நான். ♥♥♥.

No comments:
Post a Comment