Tuesday, 5 March 2013
என்னமோ போங்க...!
ஒரு மாலையில்
பூக்களை
ரசிக்க
எண்ணம் கொண்டு பூங்கா நுலைகிறேன்
பகலை புணர்ந்து
ஒய்விற்காக
தன்னையே இழந்து வேர்பார்த்து சாய்ந்துக்
ஏங்குகிறது
விடுதலை வேண்டி
இன்னும் காலம்
இருப்பதாய்
இழுத்துப் பிடித்தப்படி காம்புகள்
நாளைய பகலுக்காக
தன்னை வெடித்துச் சிதற தயாராகிக்கொண்டும்
உதிரப் போகும்
பூக்களை பார்த்து
நகைத்துக் கொண்டும்
மொட்டுக்கள்
இன்று நான் நாளை நீயென்று
உதிர்ந்தது ஒவ்வொரு பூவும்
நானோ வேர்களிடம் சொல்லி வைத்தேன்
இனி பூக்காதே
இங்கு கண்களெல்லாம் புணர்ந்து செல்கின்றன
உன் வேர்களை நீயே கொன்று விடு
இனி இங்கு பூக்களுக்கு வேலையில்லை.
Labels:
வாழ்க்கை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment