Wednesday, 19 September 2012

தாய்மாமன்..!!!


முதுகில் அமர்ந்து தட்டியும் தடவியும் 
இஷ்டத்துக்கு முடியை இழுத்தும் 
எழுப்புவாய் வலித்தாலும் 
உள்ளுக்குள் கொண்டாடி
முகத்தில் உறக்கம் காட்டுவேன் 
இன்னும் அடிக்க இன்னும் இழுக்க 
உச்சகட்டமாய் 
உன்னால் முடிந்த எல்லாம் செய்வாய் 
உன் தேவை சில கொஞ்சல்களும்
பல முத்தங்களும்தான்...


நடு வீட்டில் இரகசியங்கள் 
பேசிக்கொள்வோம்
மொத்தமாய் எல்லோரிடமும்
என்னை பழியாடாக்குவாய் 5 ரூயாய்
சாக்லேட்டிற்க்க்கு அந்தகணம் 
உன் முகத்தின் உணர்வை பதிவிட வார்த்தை ஏது..


உலகின்
ஈடு இனையில்லாதது 
உன் எச்சில் முத்தம்தான்..
தேவைகளை என்னிடமும்
குறைகளை
அவளிடமும்
சொல்கிறாய்
தாய்மாமன்
தாய்க்கு சமமென்று யார்சொல்லி தெரியும் உனக்கு...!விடுமுறை நாட்களுக்காக
வாசலில்
காத்திருக்கிறது
தனிமையில்
கலப்பில்லா காலணிகள்...

உற்றுப் பார்க்கிறாள் உற்றுப் பார்த்த பாவைகளின் முகங்கள் எத்தனை என்று எண்ணிப் பார்க்க...!!!

அன்றோருநாள் அலைபேசியில் 
சொல்லுடி என்றாயே
அன்றுதான் உறுதி செய்யபட்டது 
என்னில் காதல்...!


முதல் சந்திப்பில் 
அங்காடியில் பொருட்களை 
மட்டுமே பார்க்கும் சிறவனாய்
நான் 
எதை கொடுத்து
எதை மறுக்க யோசிக்கும் சிறுமியாய் நீ...வேடிக்கை
பொருள் நீ
விளையாட்டுப் பொருள்
நான்
ஒவ்வோரு சந்திப்பும்..!உன் 
அருகாமையில்
முழுமையாய்
தொலைகிறது
நான்..!


உற்றுப் பார்க்கிறாள் 
உற்றுப் பார்த்த பாவைகளின்
முகங்கள் எத்தனை
என்று எண்ணிப் பார்க்க...


தனித்தனியே பயிராகி 
சமையலறையில் ஒன்றுகூடி 
உணவில் 
கலந்திடும் காய்கறிதான் 
உனக்குமெனக்குமான கருத்து வேறுபாடு 
நறுக்காமல் இனைக்கிறோம் 
உதடுகளை...!


எண்ணிக்கையில்லா கேள்விகளோடு
எனை நெருங்குவாய்
அத்தனைக்கும் சிரிப்பையே 
பதிலாய் தருவேன் 
கோபத்தின் உச்சத்தில் 
சில கொட்டுக்களும் கிள்ளலும் பரிசளிப்பாய் 
பிரியும்கணம் அடுத்த 
சந்திப்பைபற்றி கேள்வி கேட்காமலிருக்க....


இருளை மூட போர்வையாய் காதல் வேண்டும்
உன் அருகாமை தேடி அலைகிறது என் தைரியங்கள்..!ஒழிந்துகொள் தேடுகிறேன்
அகப்படக்கூடும்
அழகான ஓர் வார்த்தை கவிதையாய்..!!!

அடிமைத்தனத்தை அன்பென்றும் ஆக்ரமிப்பை அழகென்றும் ரசிக்கும்வரை சுதந்திரம் தேவையில்லை.

அடிமைத்தனத்தை அன்பென்றும்
ஆக்ரமிப்பை அழகென்றும்
ரசிக்கும்வரை 
சுதந்திரம் தேவையில்லை...

தனிமையை 

பரிசளித்து
எதற்கு 
பகலை இரவாக்கி 
செல்கிறாய் 
விழிகளையாவது விட்டுச்செல் 
ஒளியில்
சில விளக்கங்கள்
தேடிக்கொள்கிறேன் கவிதையில்...

மரணவலி கொடுக்கிறாய்
கடைசி நிமிடங்களின்
துடிப்பில் 
உனக்கான தேடலை நிருபிக்க 
எந்த மொழியிலும் 
வார்த்தையில்லை
தொலைவுகள்
குறை
பிரிவை நிறை
பெற்றுச்செல் 
என் உயிரை 
உனக்கே சொந்தமாம் 
எனக்கெதற்கு உனக்கான உயிர்
வேண்டாம் இனியும் 
இந்த பிரிவும் உயிரும் 
உன்னோடு அழைத்துச்செல்...

இருளிடம் 
காதலை நிருபிக்க
விளக்கிடம்
சண்டையிடும் 
விட்டிலாய் 
தனிமையிடம்
சண்டையிடும்
பிரிவோடு
நான்...!

நன்பகலில் போர்வைக்குள
நடுங்கும் குரலில் அழைப்பு விடுக்கிறாய்
மடி வேண்டுமென
சூழ்நிலை முடிச்சுக்களை
கண்ணீரால்
அவிழ்க்க முயன்று 
தோற்றுப் போகிறேன் நான்..!


கண்ணீரை இருளாக்கி 
காதலை தொட்டிலாக்கி
வலியை கவிதையாக்கி
தாலாட்டு பாடச்சொல்லும் 
கல்நெஞ்சக்காரி நீ.


காலம் 
தவறிவிட்டது
அழைப்பை ஏற்கமறுக்கிறாய்
இனி என் காதல்
தனிமைக்கும்உன்
காதல் கனவுக்கும்
சொந்தம்..
போதும் பிரிவால்
நினைவால்
தண்டித்தது
சில நிமிடங்கள் கொடு
நீ கனவுக்குள் வர... joe.!

Tuesday, 18 September 2012

தாத்தாக்கள்பெற்றுத்தந்த சுதந்திரத்தை
பேணிக்காத்திடா
பேரப்பிள்ளைகள்
கொள்கைகளை பின் தொடராமல் 
தலைவரென்றும் வழிகாட்டியென்றும் 
உரிமை கொண்டாடினர்
சாதிப்பாராதுழைத்த தாத்தாக்களின்
பெருமையை
சாதி சாயத்தோடும்
விளம்பர மோகத்தோடும்....

Tuesday, 11 September 2012

அவள் விழியால் அவனும் அவன் விழியால் அவளும் பார்த்தால் காதல்..!


உன்னை முத்தமிட்ட
மழை
வானென்னும் போர்வைக்குள்
ஜீரத்தில்
நடுங்கிகொண்டு
தென்றலாய் காற்று நான் போர்த்திக்கொள்ள..

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥    

தாயின்
விழிப்புக்கு முன் விழித்த குழந்தையின்
சீன்டாலாய்
உன் நினைவின் தீன்டல் கனவில்..!

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥    

சில என்ன அப்புறமிற்கு
பின்
காதல் மொழியாய் ஊடலை தேந்த்தெடுக்கிறோம்
கவிதை தேடலாய்...!


♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥    

ஊடலில்
இசை ஸ்வரங்களாய்
மாற்றி மாற்றி
சொல்லப்படும்
போடா போடி கண்டு காதல்
கைதட்டி சிரிக்கும்
சிரிப்பு சப்தத்தை மொழி பெயர்க்க
வார்த்தை தேடியே இரவுகள்
பக
லாகிறது ...

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥    
கேட்பாரற்ற பாடலாய்
கவணிப்பாரற்ற
கவிதையாய்
மன்னிப்பு இல்லா பாவாமாய்
யார் தேட முதலிலென்ற பிடிவாத காத்திருப்புகளால் பாவமாய் காதல்.!

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥    

மெளனத்தில்
மெளனம்
தேடி பெருங்குரலாய அலைகிறது
ஒரு வார்த்தை
பிரிவு//..!

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥    

இலையில் தங்கி
பிரிவுக்காக காத்திருக்கும்
பனித்துளியாய்
ஒருதலைகாதல்..!

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥    
நீ
இன்னும் இன்னும் என்னை விலகிச்செல்
நான்
இன்னும் இன்னும் உன்னை நெருங்க..!

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥    
அவள்மீதான
தேடலை
தொலைக்க
இடம் இன்றி
இன்றும் இல்லாமல் போனதெனக்கு..

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥    
ம் கொட்டலுக்கான
காத்திருப்பில்
உதடுகள் மட்டுமே
இதயம் பேசிக்கொண்டுதான் எப்போதும்..!


♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥    இல்லையில் இறுகிவிடும்
உண்டில் உருகிவிடும்
வேண்டாமில் மட்டும்
வேண்டுமென கெஞ்சும் காதல்!

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥    

முடிவுக்கு வராத வாக்குவாதங்களுக்கு
முத்தங்களே முற்றுப்புள்ளியாய் காதலில்.
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥    
அழைப்பை துண்டிக்குமுன்
நீ கொடுக்கும்
மெளனம்
எனக்கான
காதல் காவியம்..!

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥    
உன்னுடன்

காதலில் கற்பனையில் எண்பது வயதுவரை வாழ்ந்துவிட்டவனிடம் அழகைபற்றி புலம்பும் செல்லகிறுக்கி நீ
உள்ளுக்குள் சிரித்து
முகத்தில் வெறுமை காட்டும் தலையாட்டி பொம்மை நான்..:-)

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ joe.! 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...