Saturday 12 January 2013

மழலையின் மொழிகள் ♥♥♥.


விளையாடவோ 
கொஞ்சிடவோ
சிரிக்கவோ யாருமில்லை 
இயந்திரமாய்
ஓடிக்கொண்டிருந்தது
நாட்கள்
பதிலற்ற கேள்விகளால் விடை கிடைக்குமென 
நம்பி உயிருள்ள பொம்மையொன்று 
உயிரற்ற பொம்மையை 
துன்புருத்த தொடங்கிருந்தது.





 இனி நாம் எதற்காக
சிரிக்கிறோமென்பதே அவர்களுக்கான இலக்கு.

இருப்பின் காரணமும்
இல்லையின்
காரணமும்
சொல்லி விடுங்கள்
அவர்களாய்
தெரிந்து கொள்கையில்
நீங்கள் யாரோவாகிடக் கூடும்.
அவர்களின்
கன்னங்களின்
வறட்சி 
உங்களுக்கான
ஆயுதமேந்தல்
உதட்டின் 
வரட்சி 
உங்களுக்கான
பழிப் பல்லதாக்கு.
இரகசியம் பேசும் புத்திசாலிகளாய் ஒளிந்து
கொள்கிறிர்கள்
அவர்கள் உங்களை திருடர்களாய் பார்க்க 
தொடங்கி நாளை உங்களை ஏமாற்றுவதற்கான 
காரணங்கள் சேமிக்க தொடங்குகின்றனர்.
அஞ்சி 
அஞ்சி 
பொத்தி பொத்தி
பார்த்து பார்த்து சுத்தங்கள் 
நடுவில் பாதுகாத்து
குப்பைக்குள்
அனுப்பும்
சுயநலவாதிகள்
நாம்.

வயதுக்கு மீறிய சுதந்திர சிறகுகளை
விதைத்து
விதிமுறை சிறைக் கம்பிகளை வேலியாக்குகிறோம்
கூர் தீட்டி திருப்பி எறிகிறார்கள்
சிறகடிப்பின்
வேகம் கொண்டு வலிகளை ஏற்றுக்
கொள்ளுங்கள் வேறு வழில்லை இனி நமக்கு.
இதயம்
பூட்டிய
காத்திருப்பில்
அவர்கள் 
உலகை 
திருட்டுப் பூனைகள் 
உருட்டத்தான்
செய்யும்.
நடை வண்டியின் நட்பைத்தான்
இன்னும் தேடிக் கொண்டிருக்கிறார்கள்,
சக்கரங்கள்
தொலைந்தாலும்
காலம் தள்ள கற்றுக் 
கொடுத்தது அந்த நட்புதான்.

உடைக்காமல் விளையாட
கற்றுக் கொடுக்க தயாராயில்லை
உடைந்தால்
வேறொன்றோ
ஒட்டவைத்து ஏங்க வைக்கவோ 
தயாராவே இருக்கிறோம் பொம்மையில் 
தொடங்குகிறது
பொம்மலாட்ட
வாழ்க்கை.
 பாதுகாப்பில்லா
உலகம் உருவாக்கி
வாசற்படியில்
பாதணிக் கணக்கை கூட்டிக் கொண்டிருக்கும் நாம்,
பாவிகள் அவர்களுக்கு. 

 


1 comment:

ஹேமா said...

உயிருள்ள பொம்மையும் உயிரற்ற பொம்மையும்....கவிதைகள் உயிராய் உணர்வோடு சிறுகுழந்தைபோல !

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...