Tuesday 15 January 2013

புறக்கனிக்கப்பட்டவர்கள் நாம்தான்...!

நான் யாரென்ற
கேள்வி கேட்டு கொண்டே இருந்தது
தேருவோரம்
தலைசாய்க்க
புத்தி சொல்லிற்று
கால்கள் பயணிக்க
கல்லறை போன்ற கூட்டில்
படியேற எனக்காக
காத்திருந்தார்கள் அவர்கள்,
யார் நீங்களென கேட்கும்
முன்பே
உரிமை கொண்டாடினர்
மகனென்று,
உள் சென்றேன்
அண்ணா என்றால்
ஒருத்தி மகன்
தொலைந்து அண்ணாவானது நான் !
பின்னந்தலை தட்டி தம்பி என்றாள்
அக்கா அண்ணன் போய்
தம்பியானது !
சற்றும் எதிர்பராது
கால்கள் கட்டிக்
கொண்டு மாமா என்றாள்
மழலையவள் தம்பி போய் மாமா ஆனது நான் !
வாசல்
தேடி வந்து நண்பனென்றான்
ஒருவன்
நண்பனானது நான் !யாரென்ற
கேள்வி இன்னும் தொடர
அலைபேசியில்
அழைத்து நீ என் கணவன்
என்றால் அவள் அனைத்தும் தொலைந்து கணவனானது நான் !
ஓரு வீட்டிற்குள் என
நானின் பிரிவுகள்
இத்தனையா !

யார் நானென்ற
கேள்வி இன்றுவரை விடை தெரியவில்லை தெரிந்த
ஒருவன்
நானகவே இருந்தான்
சாலை ஓரத்தில்
யாருமின்றி சுதந்திரக்
காற்றாய்.


ல்லைகளற்றவனாய்
மரணம்
காத்திருக்கிறது அவன் வருகைக்காக,

கையில் கிடைத்ததை உண்ணுகிறான்
மூடி மறைக்க ஏதிமில்லை ஓடி ஒளிய தேவையுமில்லை

ஆதி அந்தம் அவனாய் அனைத்துக்கும் உரிமையாளனாய்
சுதந்திரமாய் சுற்றி திறிகிறான் அங்கொன்றும் இங்கொன்றுமாய்

தன்நிலை மறந்தவனுக்கு சூட்டிய பெயர்களை பற்றிய கவலை இல்லை
அவனை பொருத்தமட்டில் உயிர்கள் அவன் உலகில் வாழும் தன்னைப்போல் இன்னுமோர் உயிர் மட்டுமே புறக்கனிக்கப்பட்டவர்கள் நாம்தான் அவனின் நிர்வாணத் தேசத்தில்.




No comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...