Thursday, 17 January 2013

ஆதரவற்றதாய் ஒரு காதல் !


வறுமையின் வழிநடத்தலில்
விரும்பியோ
விரும்பாமலோ
கல்வியை கைத்தொழிலை கட்டாயமாய்
கஷ்டத்தோடு
கஷ்டமாய்
கற்றிருந்தான்
 
கண்கள் அலைபாய்ந்திட
காதலென்னும்
சொல் காதில்
கம்பியாய் குத்திக் கிழிக்க
அவனுக்கான
தேவதையை
கதவுகளுக்குள்
பூட்டி அடை காத்திருந்திருந்தான்
கண்களை ஊமையாக்கி

விடுமுறையே
விதியென்றாலும்
வீதியில்
விளையாட்டு
பொருளாய் வேடிக்கை பொருளாய்
வழிப்போக்கனுக்கும் கேளிப்பொருளாய்
கேட்கபடும் கேள்விகளால்
ஆசைகளை அறுத்தெரிந்து
வீடு நுளைந்தால்
பாசத்தின் பார்வைகளும்
சலிப்பை ஊட்டும்
உண்னாது
உறங்காது கற்ற கல்வியும் கடனில் மூழ்கி

நிஜக் கனவுகளை அழித்து இனியும் ஆகாது
இந்த நரகம், நகரமே மேலென்று படியேறினால்
வரவேற்பதாய் சொல்லி
பாதணிக்கும்
பணம் வசூலிக்கும்
வாங்கும் வருமானம் வாய்க்கும் வாழ்வாதாரத்துக்கும் போதாதென்ற
நின்ற இடத்தின் நிலையில்

கடல் தாண்டிய பயணமொன்றில்
பொன் முட்டையிடும் வாத்து நீதானென்றான்
வயதை தொலைத்த முதிர் கண்ணனெருவன்
சொல்ல கண்கள் விரிய கனவுகளோடு
காணா தேசம்
ஓடினான் கனவு மூட்டை தாண்டிய
கடன் சுமையோடு


சொர்க்கமாயிருந்த பூமியில் சொந்தங்களற்ற
சோதனை பொருளானான்
பணியாளனென்ற
அடிமைப் பெயரோடு
எதற்கும் கேள்வி கிடையாதவனுக்கு
அசிங்கமோ அவஸ்த்தையோ
அத்தனையும்
அஜீரனக் கோளாராய்
சுமநது
மூலையில் முடங்கி கிடந்தான்


வாயைக்கட்டி வயித்தைக் கட்டி
விடுதலைக்காக
போராடும் போராளியாய்
போராட்டமாய்
தினம் தினம்
போர்முனையில்
சிரிப்பதாய் நடிக்க தொடங்கி
நடிப்பே வாழ்க்கையாய்
வாழக் கற்றான்

நல்லதோ கெட்டதோ செய்தியாய்
காற்றில் மீட்டெடுக்க முடியா தவறிய இறகாய்
மிதக்க மீள முடியா ஏக்கத்தில்
எழுதப்பட்டதென
பெருமூச்சில்
தனக்குள் புதைத்தான்


முதல் வருடம் கடனுக்காக
அடுத்த வருடம்
வறுமைக்காக
அடுத்த வருடம்
வாழ்வாதரத்திறக்காக
எந்திரமாய்
வாழ்ந்து
வருகையில்
வாசலில் கோடரி தைலத்திற்கும்
கோல்ட் வாட்சுக்கும் காத்திருந்தது
எத்தனை மாசம் விடுமுறையென்னும் கேள்வியோடு
கனவுகளை நொறுக்கிய கூட்டம்


வந்ததும் வராதாதுமாய்
வந்ததும் வேறு உலகமாய் தெரிய
மூன்று வருடக் கதையை மூன்று நாளில் தேரிந்து
இழப்புகளில் வாழத் தொடங்கும் பகல்களோடும்
உதிரும் நாட்களை எண்ணிக் கொன்டிருக்கும்
இரவுகளோடும்
நலமாய் நடிக்க வேண்டும் நான்
நீங்கள் காண தேசம் வெறுமையில் வென்றவனென்று

வாழ்ந்திட வழிக் கிடைத்ததாய்
வாழ்க்கை துனை தேடல் தொடங்க
வெளிநாட்டு மாப்பிள்ளையா
வேண்டாமென்று
அவள் நினைத்தாலும்
வேண்டுமென்றே
அவர்கள் நினைக்க பிடித்தும் பிடிக்காமலும்
நிச்சயம் செய்து
திரும்புவான் காதலி கிடைத்தாலென்று

தொலை வழியில் பேசி சிரித்து ஓய்வில்
காதல் வளர்த்து காலத்திற்கான காத்திருப்பில்
காயங்களோடு
கண் மூடாது
கனவு வளர்த்து
கையாளாகாத
கவிதையோடு
மீன்டும் திரும்பி திருமணம் முடித்து
காரியம் முடிந்தது காரணம் கிடைத்தென
கடல் கடந்து கல்லாய் வாழ்து கொண்டிருந்தான்
கடல் கடந்த ஒரு காதலன்.


No comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...