Monday 29 October 2012

மழை ! ! !



மழை பிடித்து
விளையாடலாம்
வாவென அழைத்தால்
உன் கைபிடித்தால்
போதுமெனச் சொல்லி மறுக்கிறாள்..!


நீ விழித்தால்தான்
மழை
நிற்குமாம் !
அப்படியா !
இன்னும்
உன் காதலளவு
பெய்திட வில்லை இன்னும் பெய்திடச் சொல் காதலோடு !
நீ இன்னும் கொஞ்சலோடு
கெஞ்சிக் கொண்டிரு
குட்டித் தூக்கம்
தூங்கி விழிக்கிறேன் உன் குட்டி இளவரசி !

தகதப்பின் எல்லை தாண்டிய
பாதம் உள்ளிழுக்கிறாள்
பகலவன் பகலே
வேண்டாமென மறைகிறான்.!

விழித்து சோம்பல் முறிக்கிறாள்
மண் வாசனை
தொலைந்து
நாசியெங்கும்
அவள் வாசனை..!



தரை சில்லிடுவதாய்ச் சொல்லி
தோல் பற்றுகிறாள்
நெற்றியிலா
உதட்டிலா
யோசனையில்
நான்.!



தடுமாறும் விழி
அனலாய் பெருமூச்சு
இருபக்க கன்னம் தட்டி சிரிக்கிறாள்..!




கொலுசின்
முத்தொன்று
உதிர்ந்ததாய்
சொல்லி
தலை குணிந்து தேடத் தொடங்கினாள்
நான்தான் அது நான்தான் அது எனக் கெஞ்சியது மழை..!!


நீர் அள்ளி முகம் தெளித்து
என்மீது உதறுகிறாள்
தோற்றுப் போனது மழை !


தேநீர் கலக்கலாம்
வாவென
அடுப்பங்கரை
அழைக்கிறாள்
இன்று தேநீரே உணவு..!!!


1 comment:

ஹேமா said...

காதலுக்கு மழை பிடிக்கிறது.ஒற்றைக்குடை தந்தவருக்கு நன்றி !

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...