Wednesday 19 September 2012

அடிமைத்தனத்தை அன்பென்றும் ஆக்ரமிப்பை அழகென்றும் ரசிக்கும்வரை சுதந்திரம் தேவையில்லை.





அடிமைத்தனத்தை அன்பென்றும்
ஆக்ரமிப்பை அழகென்றும்
ரசிக்கும்வரை 
சுதந்திரம் தேவையில்லை...

தனிமையை 

பரிசளித்து
எதற்கு 
பகலை இரவாக்கி 
செல்கிறாய் 
விழிகளையாவது விட்டுச்செல் 
ஒளியில்
சில விளக்கங்கள்
தேடிக்கொள்கிறேன் கவிதையில்...

மரணவலி கொடுக்கிறாய்
கடைசி நிமிடங்களின்
துடிப்பில் 
உனக்கான தேடலை நிருபிக்க 
எந்த மொழியிலும் 
வார்த்தையில்லை
தொலைவுகள்
குறை
பிரிவை நிறை
பெற்றுச்செல் 
என் உயிரை 
உனக்கே சொந்தமாம் 
எனக்கெதற்கு உனக்கான உயிர்
வேண்டாம் இனியும் 
இந்த பிரிவும் உயிரும் 
உன்னோடு அழைத்துச்செல்...

இருளிடம் 
காதலை நிருபிக்க
விளக்கிடம்
சண்டையிடும் 
விட்டிலாய் 
தனிமையிடம்
சண்டையிடும்
பிரிவோடு
நான்...!

நன்பகலில் போர்வைக்குள
நடுங்கும் குரலில் அழைப்பு விடுக்கிறாய்
மடி வேண்டுமென
சூழ்நிலை முடிச்சுக்களை
கண்ணீரால்
அவிழ்க்க முயன்று 
தோற்றுப் போகிறேன் நான்..!


கண்ணீரை இருளாக்கி 
காதலை தொட்டிலாக்கி
வலியை கவிதையாக்கி
தாலாட்டு பாடச்சொல்லும் 
கல்நெஞ்சக்காரி நீ.


காலம் 
தவறிவிட்டது
அழைப்பை ஏற்கமறுக்கிறாய்
இனி என் காதல்
தனிமைக்கும்உன்
காதல் கனவுக்கும்
சொந்தம்..




போதும் பிரிவால்
நினைவால்
தண்டித்தது
சில நிமிடங்கள் கொடு
நீ கனவுக்குள் வர... joe.!

1 comment:

thendralsaravanan said...

”போதும் பிரிவால்
நினைவால்
தண்டித்தது
சில நிமிடங்கள் கொடு
நீ கனவுக்குள் வர..”
கலக்கல் வரிகள்!!!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...