Tuesday 16 October 2012

உன் குரல் தேடி செவிகள் மெளனமாய் உன் செவிகள் தேடி உதடுகள் ஊனமாய் ..!!!

தாஜ்மஹாலில் நடப்பதாய்
சொல்கிறாய்
கொழுசின் எதிரொலி செவிசேர்ந்தது தெரியாமல்..


அலைபேசியில
ஓரிருவார்த்தை தாண்டமுடியா
நிலையில்
நான் தவித்த தவிப்புகளை
உன் தவிப்புகள்
அறிமுகமில்லா
முகமாய் பார்த்தது என்னில்..


முத்தம் கேட்டால்
சத்தம் 
கேட்குமென்கிறாள்...  
 



என்னை சிறையெடுத்த 
இமை
க் கம்பிகளை 
எண்ணிச்சொல் சிறையெடுக்க...
யார் நீயென கேட்கிறாய்
கேட்டுக்கொள்
நான் எனை எப்போதும் கேட்கும் கேள்விதான் அது..♥
காரணங்கள் சொல்லியே
சமாளிக்கிறாய்
நீ சொல்லிய
காரணங்களில்
பிடித்தது
ஒன்று மட்டுமே
காலம் முழுவதும் உன்னோடுதான் 
காத்திரு..


அடுக்கடுக்காய் குறைகளை
அடுக்கும்
உதடுகள் நாளை செவியில் இருந்து திரும்பபெறாமல்
உதடுகளை மெளனமாக்கும்...


தெரிந்தே 
கேட்கிறாய்
எவ்ளோ பிடிக்குமென
உனக்காக
நானிருக்கவும்
நீ நீயாக இருக்கவும்
எனக்கு பிடிக்கும்...
காத்திருப்புக்கள்
காத்திருக்கின்றன
உனை
பிரியும்
கணத்திற்க்காக..


காற்றில் காற்றோடு கலந்து 
சாரையாய்
ஊர்ந்து உன் வாசம் தேடி
அலைகிறது
மழையும் இல்லை வெயிலும் 
மேகங்கள்
உருகி உதிர்வதற்குள்
போர்வைக்குள் புகுந்திட இனை தேடும்
காதலாய் காலை..


காத்திருப்பின்
சோம்பலில்
மூலையில் 
முடங்கி கிடந்த
இதயம் 
சோம்பல் முறித்து
திமிரி சிரித்தது
அவள் நெருங்க
தொடங்குகிறாள்..
உன்னிடமும்
என்னிடமும்
விடுதலைக்காக
காத்திருக்கும்
இந்நாள்
உன் அழைப்பில் மட்டுமே 
சிறைக்கதவை உடைத்து 
பறக்கும்
சிறகின்றி...


காத்திருப்புகளை
பிசைந்து
பொம்மை செய்து 
விளையாட்டுப் 
பிள்ளையாய்
உடைத்தழுகிறேன்
பூட்டப்பட்ட வாசலில் காத்திருக்கும்
சிறுவனாய்....

1 comment:

இந்திரா said...

//காரணங்கள் சொல்லியே
சமாளிக்கிறாய்
நீ சொல்லிய
காரணங்களில்
பிடித்தது
ஒன்று மட்டுமே
காலம் முழுவதும் உன்னோடுதான்
காத்திரு..//


//தெரிந்தே
கேட்கிறாய்
எவ்ளோ பிடிக்குமென
உனக்காக
நானிருக்கவும்
நீ நீயாக இருக்கவும்
எனக்கு பிடிக்கும்...♥//


என்னை மீண்டுமொருமுறை படிக்கத் தூண்டிய வரிகள் இவை..

:-)

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...