Friday, 19 April 2013

காதல் காதல் காதல் !!!

நீ இல்லா இரவுகளில் உன்னிடமிருந்து 
என்னை கொஞ்சம் தனிமை படுத்து 
அழுது விடிகிறேன் வலிகள் குறைந்து 
வழி பிறக்கட்டும் விழியில்.
♥♥

சொல்வதற்குஒன்றுமில்லை 
உன்னுடனான
வாழ்க்கையை
விழித்தே கனவு காண்கிறது இரவெல்லாம்.
♥♥

நினைவுகளால்நிறம்பி தனித்து கிடக்கிறது வீடு,
இன்னும் நான்
உயிரோடுதான்
இருக்கிறேன் !
நீ கொடுத்த
கடைசி முத்தத்தை சுவாசித்தபடி....
♥♥

நீயன்றி எதை கொடுத்தாலும்உறங்க மறுக்கிறது இந்த இரவு.
♥♥

புன்னகைக்குள்ஒளிந்துகொண்டு இம்சிக்கிறாய் 
அதுவா இதுவாவென்று 
தொலைந்­த குழந்தையின்
முகம் தேடும்
அன்னையின் தேடலாய்.
♥♥

நிலவின்அருகில்
ஒற்றை நட்சத்திரம்
நான் நிலவை
ரசிப்பேனென்று அவள் அனுப்பிய நெற்றிக் கண்.
♥♥மூன்று முடிச்சிட்டால்
போதுமடியென்றால் !
வெறும் கயிற்றையா முடிச்சிடப் போகிறாயென்கிறால் ?
இல்லையடி
முதல் முடிச்சில்
உன் தாயின்
அன்பை காதலாய் முடிச்சிடுவேன் !
அட ! அடுத்த முடிச்சி ?
எப்போதும் ஒப்படைத்தலின்றி ஒப்புதலின்றி 
தனக்குள்ளையே தாங்கும் உன் தகப்பனினின் 
தாய்மையை முடிச்சிடுவேன் !
ம்ம்ம் கொல்றடா அப்புறம் ?
அர்த்தமற்ற கேள்விகளற்று
அகிம்சையாய்
ஆதரவாய் ஆமாம் சாமியாய்

 உன் சுதந்திரம் நேசிக்கும் நண்பனாய் நட்பை 
முன்றாவதாய் முடிச்சிடுவேன் !
இப்பேவே தாலிகட்டு இல்லையேல் 

என்னையாவது கட்டிக்கோள்லென்று கைவிரிக்கறாள் ஒரு தேவதை. 
♥♥

சில நிமிடங்களை
நீயிருந்து நிறப்பி
பல வருடங்களை
நினைவுகளால்
நிறப்ப வைக்கிறாய் நீ.

♥♥

பிரிதொரு சந்தர்ப்பத்திற்காக
காத்திருக்கிறது
எல்லா பிரிவுகளும். (நினைவுகளும்)

♥♥உறவுகள்
படியேற
குரல்
இறக்கினாய்
இதயப்படியில்
ஏறிக்கொண்டே.
♥♥

பூனைக் குட்டிகளைகாணும் போதெல்லாம்
மீயாவென்று
கத்துகிறாய்
என்னை சந்திக்கும் போதும்.
♥♥

உன் புன்னகையில்
தொலைவதும்
உன் புன்னகையை
தேடுதலும்
எனக்கான காதல்.
♥♥

உன் வீட்டு செல்லப்பிராணிகளோடு
என்னையும்
சேர்த்துக் கொள் 
மழை நாளில் மடி கொடு அது போதும்.
♥♥
செல்லப்பிராணிகள்
காத்திருக்கின்றன உன்
செல்ல கிறுக்கலுக்காக
நீ இன்னும் கனவில்
கொஞ்சி கொண்டிருக்கிறா
ய்
ஒரு பூனைக்குட்டியை 

ஒரு பட்டாம்பூச்சியை
ஒரு மீசைவைத்த மீனை
ஒரு கரடி பொம்மையை
ஒரு நிஜக்
கரடி வேடிக்கை பார்க்க

♥♥


நானே தொலைந்தாலும்
தேடிச் சேர்க்கிறது என்னை
உன்னிடம்
நானென்னும் நீ.

♥♥
பயணங்களில் எப்போதும் அடம்பிடிக்கும்
சன்னலோரத்தில் சாய்ந்திட நீயின்றி நிமிர்ந்து
உணர்வற்று கிடக்கிறது என் தோள்கள்.

♥♥
காலி இடங்கள் நிறம்பிய பேருந்தில்
உன் அருகிருப்பு
இல்லாமல் வெறுமையாய்
நீற்கிறது என் பயணம்.

♥♥
கதவிடுக்கில் கண்ணாமூச்சி ஆடுகிறாய்
என் விழிகள் நசிந்து 

கண்ணீர் கசிவதை பாராமலேயே.
♥♥
நீ யாரோவா பார்க்கிறாய்
குழந்தை கையிலெடுத்து
தவறவிட்ட பொம்மையின் வலியில் நான்.

♥♥
விழி தெலைத்து
செவி தொலைத்து
நாசி தொலைத்து
உதடு தொலைத்து
நினைவு தொலைத்து
தனிமை செய்தேன்
நீ உடைத்து விளையாட.

♥♥
சந்தர்ப்பங்களுக்கான
காத்திருப்பில்
நிர்ப்பந்தங்கள்
நிர்ணயிக்கபடுகின்றன
திருப்தியில்லா
தேடலாய்
அதிர்ப்தியில் முடிகிறது எல்லாம்.

♥♥
பல் இடுக்கில்
சிக்கிக் கொண்ட
திசுக்களின்
இம்சையாய் நீ.

♥♥

No comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...