Monday 18 March 2013

பாலாவின் "பரதேசி"





பாலாவின் "பரதேசி"

"இவன்தான் பாலா"
புத்தகம் படித்தவர்களுக்கு பாலாவிடமிருந்து இப்படியொரு சினிமா அதிசயம்தான்

இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத எந்த சூழலிலும் போங்கி எழாத
கதாபாத்திரம்தான கதைநாயகன்

பஞ்சத்திலிருருந்து பிழைப்பு தேடிச் செல்லும் பயணத்தில் நிலத்தின்
தன்மையை வழிவழியாக மாற்றி கதையின் வலியை காண்பித்திருக்கிறாய்,  உயிர்
இருந்தும் மயங்கிய நிலையில் கிடக்கும் உடலை உயிரோடு விட்டுச்செல்லும்
மக்கள் மனநிலையில் பஞ்சத்தின் சாவு புதிதல்ல என்பதாய் பதிவு செய்துள்ளார்

அந்த இடைவேளை காட்சியில் அந்த ஒரு ஷாட்டே இயக்குநர் பாலாவுக்கு போதும்

இதுவரையிலான
பாலா படங்களில் கதாபாத்திரங்கள் கொஞ்சம் மனநிலை பாதிக்கபட்டது போல்
இருந்தாலும் ஹிரோயிசமிருக்கும்
இந்த படத்தில் ஹிரோவே கிடையாது நடித்த அத்தனை மக்களும் ஹிரோதான்
எப்படித்தான தேர்ந்தேடுத்தாரோ அந்த கால மக்களை போன்ற வயதான முகங்களை அத்தனையும் சிறப்புதான்
எந்த ஒரு முகமும் நடித்ததாய் எனக்கு தெரியவில்லை, அப்படியான ஒரு சிறந்த படம்

கலை இயக்குநர் ஒளிப்பதிவாளர்
பாலாவின் கண்களாய் வாழ்ந்திருக்காங்க,
கதையைப்பற்றி நான் சொல்வதாயில்லை
படம் முடியும் தருவாயில் நல்ல வேலை அந்த காலத்தில் நான் பிறக்கவில்லை
என்ற நிம்மதியும்
இப்போதைய நாடுகளில் பிழைக்க சென்றவர்கள் வாழ்வாதரமற்வர்கள் நிலையும்
நாளை நமக்கும் இதே நிலை வரலாமென்ற அச்சமும் வருகிறது அதுதான் அவரின்
வெற்றி

படத்தில் எனக்கு தெரிந்த குறை
இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ்குமார் மட்டுமே இசைஞானி இளையராஜாவை தேடாமல்
இருக்க முடியவில்லை இசைஞானி இளையராஜாவா இருந்திருந்தால் இந்த திரைப்படம்
இன்னும் சிறப்பா இருந்திருக்கும்
ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்த ஆயிரத்தில் ஒருவன் பின்னனி இசைக்கு இது குறைவுதான்

மேலும் தன் மிது மக்கள் வைத்திருக்கும் நம்பிகையை காப்பாற்றிவிட்டார்
இயக்குநர் பாலாவின்
இதுவரையிலான படங்களை விட இது சிறந்த படம் இசைஞானியிருந்திருந்தால் இன்னம்
இன்னும் கொண்டாடியிருக்கும் உலகம்.

இறுதியா இயக்குநர் பாலா அவர்களுக்கு உங்கள் அத்தனை படங்களிலும் யாராவது
சாவுறாங்க சாகடிக்கப்படுறாங்க எப்போ யார் சாவாங்களோன்னு படம் பார்க்க
வேண்டிருக்கு அடுத்த படத்திலாவது யாரையும் சாகடிக்காதிங்க
அதுக்காக ஜாலியா படம் பன்றேன்னு அவன் இவன் போல படம் தயவு செய்து
எடுத்திறாதிங்க,  நாங்கள் தொலைஞ்சதா நினைச்ச அடையாளம் மீட்டு எடுத்து
மறுபடியும் உங்களை மக்கள் மத்தியில் கலைஞர்கள் மத்தியில் நீங்கள்
யாரென்று  நிறுபிச்சிட்டிங்க

எது எப்படியோ விருதே வேண்டாம்னு நீங்க சொன்னாலும் நிச்சயமாக நிறைய
விருதுகள் உங்களுக்கு உறுதி

பரதேசி பார்க்க வேண்டிய படைப்பு
தமிழகத்தால் கொண்டாடப்படவேண்டிய இயக்குநர், பாலா...


No comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...