Saturday 2 March 2013

அரபு நாடுகளில் ஆடைச் சிறைக்குள் அவள் ஆணின் எண்ணம் கலைப்பாளாம் பெண் உன்மையெனில் ஆண் பேசும் நாயினமா !



முதல் விபத்தில் 
சரி செய்யப்படாத சாலையாய் சட்டதிட்டங்கள் 
உயிர்கள் விதைக்கபட வேண்டிய கட்டாயத்தில்
இந்தியனின்
வருங்கால வாழ்க்கை பாதை.


எழவு விழாத
வீட்டினரின்
இழப்பின்
வலியாய் சாலை விபத்தை 
கண்டு கடந்து
செல்கையில்
மனதில் கொடுக்கும் மெளனம் மட்டுமே 
இந்நாட்டின் இயல்பு.



தினமும் பார்க்கிறேன் இரவில் இதே
நேரத்தில் வேலை சென்று திரும்பும் அவளை 
அழைத்து செல்கிறாள் அன்னை
பெண் மிதான நம்பிக்கையும்
பெண்ணுக்கான சுதந்திரமும்
இங்கு இல்லையென்று 
சொல்லாமல் சொல்லி செல்கின்றனர் அவர்கள்.
இயற்கையை 
கழுத்தறுக்க
யோசிக்காத
நாம்தான்
இயற்கை முரணை பாதுகாக்கிறோம்
களையெடுக்காமல் பாதுகாப்பதும்
குற்றமே 
நாளை நம் வீட்டிலும் வளர்ந்திடும்
பயமின்றியே 
பயிர் திண்ணும் பெருச்சாலிகளாய்
தண்டனைகள்
நிறைவேற்றப் படாதிருப்பதுதான்
மிகப்பெரிய குற்றம்
ஆம் நாம் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

கண்ணால் காணும் சக உயிரை 
சதையாய் எண்ணி புணரும்வரை
மனிதனென்றும்
மனிதமென்றோ சொல்ல வெட்கபடுவோம் 

விலங்குகளுக்கு கூட காலம் நேரமுண்டு 
எல்லாவற்றிர்க்கும்.


அரபு நாடுகளில் 

ஆடைச் சிறைக்குள் அவள்
ஆணின் எண்ணம் கலைப்பாளாம் பெண் 
உன்மையெனில் ஆண் பேசும் நாயினமா !


சிறகு கொடுப்பதாய்
சொல்லி இறகை பறித்து
பாதுகாக்கிறோம் நானும் யோக்கியனில்லை அவளுக்கு.


என் பாதையில் அவள் நடக்க வேண்டுமென
அப்பனோ அண்ணனோ நண்பனோ காதலனோ கணவோனோ
நினைக்கும் வரை ஆணென்பவன் விலங்கினமதான்.



வெறும் வேடிக்கை 
பார்க்கும் பொம்மைகளாய் இனி பிறக்கும்
குழந்தைகள் கையில் கொடுத்திடுங்கள் 
உங்கள் கடவுள் பொம்மைகளை 
உடையும் போதேனும் உணரட்டும் 
உணர்வற்றவன் 
கடவுளென்று.


என்னை ஒத்திருந்த முகமூடியணிந்த
மிருகமொன்று
நான் வேடிக்கை பார்க்க
சக உயிரின் சதையறுத்து
திண்கிறது
இனி இந்த காட்டிற்கு 
விலங்கையோ இறைகளையோ 
குழந்தை வடிவில் வளர்க்காது 
கருவில் அழித்திடல் நன்று .



No comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...