Tuesday 17 July 2012

யாருமற்ற விடுமுறை நாள்....!



யாருமற்ற விடுமுறை நாள்....!

தனிமையில் கட்டிலின் அடிமையாய் மாலை வரை கட்டிலுக்கு சுமையாய்....

வீடும் வெறுமையாகி சிறைச்சாலையாய் காட்சியளித்தது...

வெறுப்பில் வெளியே எட்டிப்பார்தேன்
உலகமும் அமைதியாய் ஒய்வில் ....
வீதி உலா செல்ல தொடங்கினேன்
காற்று கூட புக முடியாத சுவர்கற்களாய் இடைவேளியற்ற வீடுகள்....

அதிகபட்ச வீடுகளின் உள்ளே ஒரு குடும்பம் தொலைகாட்சியில் தொலைந்திருந்தது
வாசலில் மட்டும் ஏனோ தேடுவாரறற்று அநாதையாய் மரணத்தின் வருகைக்காக காத்துக்கொண்டு வயதானவர்கள்....

இன்னும் வெறுமையை உணர்ந்த நொடி தென்றலாய் காற்று துணைக்கு வந்தது....

தோழனாய்
விழியால் பெசத்தொடங்கினேன் இலைகளின் அசைவுகளோடு
உலகம் அழகாக தொடங்கிய தருனம் ...
சுவர்சிறைகளுக்குள் அடைபட்டிருக்கும் அனைவரையும் அழைத்து...
உங்கள்
உலகம் அநாதையாய் கிடக்கறது கவனிப்பாறற்று பாருங்கள் என்று கூற எண்னிய தருனம் சாலையில் நாய்கள் மட்டுமே இருந்தன....

யாருக்கு தெறியும் நான் சென்ற உலகம் மொழி,மதம் இனம்,ஐாதி இல்லா உணர்வுகள் மட்டுமே உள்ள உயிர்களின் வீடாகவும் இருக்களாம்......joe.!

2 comments:

ஹேமா said...

என்ன ஆச்சு ஜோ.எங்களுக்கு நாங்களேதான்.நாங்கள் என்ன் குற்றம் செய்தோம்.என் உணர்வுகளைக் காண்கிறேன் உங்கள் எழுத்துக்களில் !

துயிலன் ஜோ said...

thanks sister :)))))))))))

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...