Tuesday 17 July 2012

தொலைந்து போன முத்தங்கள்....!


தொலைந்து போன முத்தங்கள்....

எனக்கான அவளும் அவனும்
என் வருகைக்காக விழித்திருந்ததும் காத்திருந்ததும் இப்போது கதையாய் சொல்ல கேட்டேன் ....

கொட்டும் மழை என்றும் பாராமல் எட்டி உதைத்தேனாம் அவளின் அடி வயிற்றை அந்த அர்த்த ராத்திரியில் எப்படியேல்லாம் தவித்தாயோ நீ ,

வலியால் அவள் துடிக்க எங்கே யாரை கூப்பிட்டாயன இன்றுவரை நான் கேட்டதே இல்லை
அவளின் வலி அலறல் சத்தம் கேட்டு உன் இதய துடிப்புகளின் அலறல் பெரும் சத்தமாய் என் காதுகளில் கேட்கிறது இப்போது...

உண்ட தாய்பாலும் வயித்தில நிக்காதாம் வாடி வதங்கி எலிகுட்டியாய் கிடப்பேனாம் உணவின்றி தவிக்கையில் பால் பவுடர் வாங்க பல மைல் அலைந்தாயாம்....
உருப்படியான உயீரான பின்பு உறங்கி கொண்டிருந்தாலும் உதட்டருகே உமிழ் நிரோட ஒட்டிருக்கும் எனக்கு என்று வாங்கிவந்த தின்பன்டம் விடிஞ்சதும் தெரியும் என்னதுன்னு...

எல்லாம் எனக்காக செய்த உன் உதடுகள் என்னை முத்தமிட்ட ஈரப்பதங்ளை இன்றுவரை காணவில்லை

உடல் எங்கும் தேடிப்பார்த்தேன் முத்தங்களின் அடையாளங்களை காலம் தின்றிருந்தது

நான் தொலைத்த முத்தங்களை எனக்கு நினைவு படுத்தவேனும் மின்டும் ஒருமுறை முத்தமிடு அப்படியாவது உன் குரலின் அழுத்தத்தை உணரட்டும் என் உயீர்...

இன்றும் அவளுக்கான முத்தங்கள் நானும் எனக்கான முத்தங்களை அவளும் ஆண்டுக்கு பலமுறை கிடைத்தாலும் பிறந்தநாள் பரிசாய் கொடுத்துவிடுகிறாள்

நீ மட்டும் தலையில் கைவைத்து கடவுளாகிறாய் உயிர் கொடுத்த கடவுள் நீயாகவே இரு தவறில்லை கடவுளிடம் குழந்தைகள் கேட்பது வரம் அல்ல
முத்தங்கள் மட்டுமே...! joe!
 

2 comments:

thendralsaravanan said...

ஹையோ ...........என்ன சொல்வேன்... அழகான தாய் சேய் அன்பின் பிரதிபலிப்பு!வாழ்த்துக்கள்(என்றும் நிலைத்திருக்கும் என் நினைவில் என் அன்னை அவள் மீண்டும் வருகிறாள்...)

thendralsaravanan said...

தாயுமானவனின் முத்தமாக பார்க்கையில் இன்னும் இனிக்கிறது!!!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...