Wednesday 27 February 2013

இந்த காடே எனக்கானதுதான் உன் பாதுகாப்பில் மரணம் வரை எச்சிலாய் வாழ்ந்து போ.



இழந்த
உயிர்களுக்காக
சிதைந்த உடல்களுக்காக
இல்லாத உரிமைக்காக
இயலாமையென்னும்
கண்ணீரில்
எழுதாதிர்கள்
சிதறிக் கிடக்கும்
உணர்வுக்கு
வழு கொடுக்க 
வன்மமாய்
மிருகம் வளர்த்திடுங்கள்

ஆம் இது காடுதான்
கொடிய இரு கால் மிருகங்கள்
வாழும்
காடு
இங்கு பறவைகென்னும்
முகமூடியும்
முயலென்னும்
முகமூடியும்
இனி உதவாது

உன்னை காத்திட
வேண்டுமானால்
மிருகமாயிரு
வண்மமாயிரு
கோபமாயிரு

சிங்கத்திடம்
அகப்பட்டப்பின்
கெஞ்சுதலென்பது
இன்னும் துன்புறுத்தச்
சொல்லும் தூண்டலே

ஓரே வழிதான் இனி உனக்கு 
உனக்குள்ளும்
அதே மிருகம்
வளர்த்திடு
முடிந்தால்
தீய விலங்கை
தின்று காட்டை சுத்தப்படுத்து
இல்லை மிருகமாகிப் போ

உன்னையும்
கொல்ல என் போலொரு
மிருகம்
சந்தர்ப்பம்
தேடி இருப்பு கொள்ளாது
கொலைவெறியுடன்
அலைகிறது

மறவாதே
நானும் உனக்கீடான
மிருகம்தான்
இந்த காடே எனக்கானதுதான்
உன் பாதுகாப்பில்
மரணம் வரை
எச்சிலாய் வாழ்ந்து போ.

No comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...