Monday 25 February 2013

கடவுள் :)



கடவுளைப் பற்றி என்னிடம்
ஒரு பதில்தான் இருக்கிறது

துரோகிகளின்
நம்பிக்கை
அவன்,
நல்லதும் செய்வதும்
இல்லை
கெடுதலும்
செய்வதில்லை
செய்வதெல்லாம்
மனிதன்தான்
உயர்ரக மது போல்
உயர்ரக
பழியாடே கடவுள்.


விபத்தில்
இறந்தவர்கள்
இயலாமையில்
இறந்தவர்கள்
இரு கால்
மிருகங்களால்
இறந்தவர்கள்
எல்லோருக்குள்ளும்
அவரவர் பெற்றோர் கொடுத்த முகமூடியும்
மரணித்துதான்
போகிறது
கடவுளென்ற
பெயரோடு.


வேற்று
சாதியென்றும்
மதமென்றும்
இனமென்றும்
கொஞ்சம் கொஞ்சமாக
இழந்ததென்னவோ
நமக்கான புன்னகைகளை மட்டும்தான்.


 போதாது
போதாதென்று
வேண்டுகிறோம்
போதும்
போதுமென்று
வாழ்ந்துப் பாருங்களேன்
மாறுதலுக்கு
கடவுளாகி.


விதிமுறையற்ற
கடவுளுக்கே
கடவுள் சொல்லியதாய் சொல்லி விதிமுறைகளிட்ட
மனிதன் எவ்ளோ பெரிய புத்திசாலியா இருப்பான்.


 எல்லைகள்
பிரித்து
வீரர்கள்
நிறுத்தி
கடவுளை
பாதுகாக்கும்
உலகத்திற்காக
கடவுள் எந்த கடவுளை வணங்கிக் கொண்டிருப்பான் ?


மனிதம்
பற்றியும்
நாம்
மனிதர்களென்றும்
பேசிக் கெண்டிருந்தாரொருவர்,
அவரின் பிறப்பே தவறென்றும்
உறவுகளை
விபச்சாரமென்றும்
விளக்கம் சொல்லி கொண்டிருந்தான்
மதவாதியொருவன்
மார்க்கமென்று
உண்டாம்
அவனுக்கான கடவுள் தீர்ப்பளிப்பானாம்
நாளை, அவனுக்கான
தீர்ப்பாய் சாத்தெனென்பதை தவிர வேறென்ன இருக்க முடியும் ! நான கடவுளானேன் அந்த மதச் சாத்தானால்.


இறந்தால் மட்டுமே
பார்க்க முடியுமெனில்
உங்களுக்குள்ளான
கடவுளை கொல்லுங்கள்
இல்லையேல்
உங்களையே கொன்றுவிடும் அந்த மாயை.





தெளிவற்று கிடக்கிறது பாதை
முட்களுக்கோ
கற்களுக்கோ
அஞ்சுபவனல்ல
முட்களாய்
கற்களாய்
திசைகாட்டியாய்
நேசித்தலின்
பெயரில் யார் யாரோ
யாரையேனும்
வதம் செய்து
தொடர்ந்தால்
சொர்க்கம் கிடைக்கலாம்
வேண்டாமென
அங்குதான்
அவர்களோடு
காத்திருக்கிறேன்

அவர்கள் பயணத்தை தொடர்வார்களென..




No comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...