Saturday 16 February 2013

........................காதல்........................

.............................................................................காதல்.........................................................................................
பார்வையின்
பாவனைகள்
தாங்கி
பாவங்களுக்கான
காத்திருப்பில்
தொடங்கிற்று
ஒரு கனவு

சந்தித்தலே சிந்தித்தலாய்
சிந்தித்தலே
சிரித்தலாய்
சிலாகிப்பில்
சிலிர்த்தது
சில பொழுதுகள்

தடுமாற்றங்களில்
உதடுகள்
நடனமாட
பிழையில்லா
நாட்டியமென
இமைக்க மறந்தன விழிகள்

இரவென்றும்
பகலென்றும்
பாரது பத்திரப்படுத்தலே
பாதையென
பாகுபாடுளற்ற
பலவீனமே பாலமாய் இறுகியது

விரல்கள் சந்திக்க
தொடங்கிற்று
சிந்தனைகள்
இடமாறத் தொடங்கி இமைகள் மூடிக்கொண்டன
இதயம் தொலைய தொடங்கியது

தறிகெட்டு திரிந்த
பார்வையில் பாதைகள் பாழாய்ப் போக
மீந்தது ஒரு சொல் காதல் பொய்யென்று

கடலளவு காதல் சிறு துளியாகி உடைந்து சிதறியது காமத்தில்,
யாரும் அறிந்திருக்கவில்லை அந்த பாவத்தை.
கை கோர்த்து
கதை பேசும்
காலம் கண் சேருமென்று
கதவிடுக்கில்
உயிரோன்று
காத்திருக்கிறது, 

ஒவ்வொரு வாசல் தாண்டலிலும் நசிந்தாலும்
கன்னம் தொட்ட
கடைசி முத்தம்
கரைந்திடக் கூடுமென 

கண்ணீரை கட்டியிழுக்கிறது
கல் மனமொன்று....


சிறகிருந்தும்
தனக்கான
வானமின்றி
மூளையில் முடங்கி கிடக்கிறாள்
ஒவ்வொரு தேவதையும், உலகின் சுயநலனுக்காக
தனதில்லா பாதைகளில்
சிறகற்ற சிரசாய்
பயணிக்கிறாள் சிந்தனைகளை
சிறைக்கதவாக்கி
சிரிக்கிறாள்
வளக்கமென்றும்
பழக்கமென்றும்
எல்லா முடிச்சுக்களின்
வளைவிலும்
அவளுக்கான
இறகொன்று
இறந்து விடைபெறுதலின்றி
இதயத்தின் நடுவீட்டில்
பிணத்தின் துர்நாற்றமாய்
முனுமுனுக்கிறது
ரசித்து சிரிக்க பழகிருந்தோம்
அவள் அப்படித்தானென்று.


உன்னோடு
கடந்த நாட்கள்
எண்ணித் தேடுகிறேன்
நீ வாழ்ந்த  நாளொன்றில்
இளைப்பாரிட


தேர்ந்தேடுத்தாகி விட்டது
சுயநலமாய் நீ கொஞ்சி
சிரித்து நான் எனை மறந்த நாளொன்றினை

இடைவிடாது பேசி இடைவிடாது
சிரித்து களைக்குமளவுக்கு மூச்சை 
நிறுத்தி இளைப்பாரிடும்
கணங்களையும்
வாழ்ந்திருந்தாய் என்னோடு

இன்றுதான் கடைசியென்று 
வாழ்ந்து சென்றிருக்கிறாய் உனையே 
நானக மாற்றி வெற்றிடமின்றி நிரப்பி நீயாக என்னையே..

மெலிதாய் புன்னகைத்து
துரோகம்
இழைத்ததாய்
புலம்பித் தீர்க்கிறேன் அன்றும் உனெக்கென்று
ஏதும் செய்திடவில்லை
நானென்று


விடைபெறுதலுக்கான கடைசி 
வார்த்தையாய் விட்டுச் சென்றிருந்தாய் 
அதித நேசித்தலுக்கு சொந்தக்காரன் 
நீயென்று காரணமொன்றை

கொடுத்து சென்ற
புன்னகைகளை
திருப்பித் தற வழியின்றி
வாய் விட்டு அழுகிறேன்
என் கண்ணீரே எனைக் கண்டு சிரிக்க
ரசிக்கும்படியான
நாள் இதுவென்று வேறில்லையென 
நாளைக்காக சேமிக்கிறேன்
நியாபகப் பெட்டகத்தில் 
நீ மட்டும் வாழந்த நாளை .

No comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...