Wednesday, 6 March 2013

"முகப்புத்தகம்""முகப்புத்தகம்"
அதான்பா மூஞ்சியே காட்டாமல்
இருக்கும் பேஸ்புக்கு, நிறைய பேஸ் பன்ன வைச்ச புத்தகம்,:-) உள்ளே
நுலையசுல எதோ
கள்ளக் கடத்தல் கும்பலுக்கு நடுவுல சிக்கினாப்புல இருந்திச்சு, இப்போவரை
கொஞ்சபேருதான் என்னையும் மனிஷனா ஏத்துக்கிட்டாய்ங்க நிச்சயமா
அவுங்களுக்கு பெரிய மனசு அவுங்களுக்கு ஒரு கும்புடு போட்டுக்கிறேன்
/\

நிறுத்து இப்போ இன்னா சொல்ல வர்ற நீய்யின்னு கேட்கிறது காதுல விழுது
இதோ பாயின்ட்டுக்கு வந்திட்டேன்

1,மூஞ்சிப் புத்தகம் வேலையில இருக்கிறவங்க வெட்டியா செய்ற வேலை
அதையே வேலையா செய்தா வெட்டியான் கூட மதிக்க மாட்டான்

2,இங்க நல்ல கருத்தோ கவிதையோ கதையோ திட்டமோ எதையுமே 10 சதவீதத்திற்கு
மேல எவனும் மதிக்க மாட்டாய்ங்க ஐயோ பாவம் அது தமிழுக்கே காலம் காலமா
தமிழனே செய்ற துரோகம்தான்.

3,லைக் வாங்க ஆசை படுறிங்களா ஒன்னும் பெரிசால்லாம் வேண்டாம் அன்றைய
அரசியல் பதிவும் அதுக்கு பொருத்தமா கவுண்டமணி , சந்தானம் ,டயாலாக்
போதும் லைக் அள்ளிக்கலாம்

3,அப்பாடக்கர் பதிவர்னு ஒருத்தர் கிடையாது
அவர் நிச்சயமா போழுதுபோக்குக்காக முகப்புத்தகத்தை தெளிவா
பயன்படுத்துவார் அவ்ளோதான்

4,அப்புறம் அரசியல் போரடிச்சிச்சின்னா இருக்கிறவங்களையே ஒருத்தரை மாத்தி
மாத்தி கழுவி கழுவி ஊத்தி விளையாடுவாங்க
5, இன்னும் ஒரு சிலர் இருக்காங்க லைக்தான் சோறுன்னு நினைச்சுகிட்டு தன்
போஸ்ட்டையே பே ன்னு பார்த்திட்டு இருப்பாங்க அடுத்தவங்க போஸ்ட்டுக்கு
லைக் போடவே மாட்டாங்க
அப்படியும் லைக்க கிடைக்கலை என்னமோ பல ஆயிரம் புத்தகம் படித்து புதுசா
கன்டு பிடிச்சிட்டேன்னு TAGGING பன்னுவாங்க என்னன்னு பார்த்தா குட்
மார்னிங்குன்னு இருக்கும் செம கடுப்பேத்துவாய்ங்க

பார்த்திங்களா லைக் பற்றி பேசினா இன்னோரு பதிவு எழுதனம் போல அவ்ளோ
பஞ்சாயத்து நடக்குது

இதுவரை எனக்குத் தெரிந்து லைக் பற்றி கவலைப்படாத நபர்கள் ஒரு 20 பேர்
இருப்பாங்க இதுவே அதிகமோ !

ஆங் எதையோ எழுத ஆரம்பிச்சு எதோ எழுதுறேன்ல அது வழக்கமா நடக்கிறதுதான
பாஸ் விடுங்க விடுங்க

கடந்த வருஷம் மொக்கையா உள்ள வந்தேன் ஓ இப்பவும் மொக்கைதான்ல :-)

அப்படி மெக்கையா வந்து லைக் போட ஆரம்பிச்சு கமென்ட் போட ஆரம்பிச்சு
எழுதவும் செய்தேன் நான் செய்த உருப்படியான விசயம் என்னன்னா இன்பாக்ஸை
எட்டிப்பார்க்காததுதான்

ஏன்னா எனக்கு நல்லா தெரிஞ்சவர்களிடமே மூஞ்சை கொடுத்து பேசமாட்டேன்
அவ்ளோ அடக்கம்லாம் இல்லை அநாவசியமா ஆகாத விசயத்தை பேசுறது வீனென்ற
எண்ணம் நெருங்கிய நண்பர்கள் பேசி சிரிக்கும் போதும் சிரிப்பேன் எனக்கு
மட்டும் தெரியுற மாதிரி அவ்ளோ உம்னா மூஞ்சி ,
ஆனா அப்படி பேசாததே எனக்கு நிறைய பலத்தையும்
மரியாதையையும்
தேடிக் கொடுத்திச்சு அதனால வெட்டியா பேசாதிங்க அப்புறம் ஸ்கூல் பசங்க
மாதிரி பதிவு எழுதாதிங்க

அப்புறம் சமிபகாலமா ஒரு 6 00 பேரை அன்ப்ரன்ட் பன்னிருக்கேன் ஒரு 80 பேரை
ப்ளாக் பன்னிருக்கேன் காரணம் பெரிசா இல்லை தன்னை அப்பாடக்கரா
நினைச்சவங்களும் வெட்டியா இருந்தவங்களும்தான் அவுங்கள்லாம்

இறுதியா எனக்கு முகப்புத்தகம் நூலகமா இருக்கு நிறைய முகங்களையும்
புத்தகங்களையும்
படிக்கிறேன்

கொஞ்சமல்ல நிறைவாய் நிறையவே நட்பாய் உறவாய் கிடைச்சிருக்காங்க அவ்ளோ
நல்லவங்க நான் என்ன பன்னாலும் நேசிக்கிறாங்க ரசிக்கிறாங்க நான்
இப்படித்தானென்று அவர்களுக்கு புரிந்தது பெரிய சாதனை வீட்லையே மன்டைய
பிச்சுக்கிறாய்ங்க பராவல்ல மக்கா சகமனிதனா நண்பனா ஏத்துக்கிட்டதுக்கு
நன்றி

ஆமா எதுக்கு இதை எழுதினேன் மறந்து போச்சு  தெரியலை.

 இந்த மூஞ்சி புத்தகத்தின்  குப்பை பக்கத்தை பற்றிய பதிவை தனியா எழுதுறேன்
மீன்டும் வரும் மூஞ்சி....

2 comments:

ஹேமா said...

ஜோ....என்னாச்சு.உங்களைக் காணோம்.நீங்க எங்கே ?தேட வேறு வழி இல்லை தொடர்புக்கு.சுகம்தானே.இப்போ உங்கள் கமெண்ட் கண்டதும் மனசுக்கு நிம்மதி.நிலாவுக்கும் சந்தோஷம்.உங்களை வானவில் ஜீவாவும் சுகம் கேட்டதாகச் சொல்லச் சொன்னார் !

Satihs kumar Dvk said...

ஹலோ...ஹலோ... இங்குட்டு நாங்க சுகம்... அங்குட்டு நீங்க சுகமா...

அப்புறம் மேல பின்னுட்டம் இட்டுள்ளது குழந்தை நிலா ஹேமா தானே :)

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...