Saturday, 18 May 2013

தான் சரியென்பதெல்லாம் சரிதான். அது இங்கு யாருக்கும் தெரியாதென்பதே சரி.!!!நான் கடவுளென்றாலும்
எனக்கான
வரங்களையும்
எனக்கான
சாபங்களையுமே
சுமக்கிறேன்
சகக் கடவுள்கள் எப்படியோ
எனக்குத் தெரியாது
தேவையுமில்லை.

யாரையும்
காயப்படுத்தும்
எண்ணமில்லை
நீங்கள்
என்னை விளையாட்டுப் 

பொருளென நினைக்கும்வரை.

உன்னிடமுள்ள பதில்களுக்காக
உனக்கான கேள்விகள்
என்னில்
மெளனமாய்க் கிடக்கின்றன.
எனக்கான
கேள்விகளை
மெளனமாக்கியே பழகியவன் நான்
வினவி ஒப்பித்தல் புரிதலில்லை 

என்ப்தே என் பிடிவாதம்.யாருமற்ற தனிமையில்
ஒற்றைப் புன்னகைக்கான
காத்திருப்பில்
அழுதிருந்தது
ஓர் இரவு
விழிகள் தேடலில் தெலைந்ததால்.

என் மரணத்தை
நீங்கள் அழுது என்னை துக்கமாக்கதிர்கள்.
மாலையிட்டு வாசனைத் 

பூக்களால் அழங்கரித்து கொண்டாடவும்
வேண்டாம்
முடிந்தால் உபயோகப்படுவதை எடுத்துக் கொண்டு 

உடணடியாக உரமாக்கிடுங்கள்
விரும்பினால் எனக்கான ஒப்பாரிப் பாடலிலேனும்
கொஞ்சம் மெளனம் கொடுங்கள்
என் ஆன்மாவிற்கு அது போதுமானதுவழி மாற எத்தனிக்கும் போதெல்லாம்
ஒரு சிரிப்பு சப்தம் கேட்கிறது 

எனக்குத் தெரியுமென்றும் இதுதான் நீயென்றும்.
அது யாருடையதாகவும்
இருக்கலாம் நீங்களாகவும் இருக்கலாம்
ஒவ்வொருமுறையும் ஏமாற்றுகிறேன் 

என்னால் ஏதுமற்று நிலையாய் வாழ முடியுமென்று
நிருபித்து மெளனமாக்கிறேன்,
உங்களுக்கும்
கேட்கக் கூடும்
அந்த சிரிப்புச் சப்தம் 

காதலோ துரோகமோ
இயலாமையோ
உங்களை முழுமையாக தாக்கும்போது 

நீங்களும் வழி மாற எத்தனிக்கையில்
இன்னும் இன்னும் அதிகமாய் 

அந்த சிரிப்புச் சப்தம் கேட்குமாயின் 
நீங்கள் தோற்றுக் கொண்டிருக்கிறிர்கள் அதனிடம்.

என் நிழலைத்தான்
தேடிக் கொண்டிருக்கிறேன்
தவறுகளுக்காக தண்டிப்பதற்கு
உங்களைப் போலவே.


மரணம்வரை
காத்திருக்கத்தான்
வேண்டும்
நான் யாரென்று நானறிய,
நீங்கள் தற்கொலை
செய்வதாயின்
செய்து கொள்ளுங்கள். 

எத்தனை வலியானால்
என்ன எனக்கான
வலியை நான்
சுமக்கிறேன்
இறுதி நொடியில் இருக்கக் கூடும்
அதுவரை சந்தித்திராத ஒரு புன்னகை
ஒரு சந்தோசம் ஒரு திருப்தி நான் வாழ்ந்து
முடிந்து போகிறேன்,
உங்கள் விருப்பம்
நீங்கள் தற்கொலை செய்வதாயின்
செய்தியற்று
செத்தொழியுங்கள்.

பாதை மாறிய
ஆடுகளில்
ஒன்று
என்னைப் போல்தான்
இருந்திருக்கும்.

இறந்த பிறகான
கண்ணீருக்காக
நேசிக்க சொல்கிறது
உலகம்,
நானோ நீங்கள் இருக்கும் போதே அழுது கொண்டுதான்
இருந்தேன்
உங்களுக்காகவும்
உங்களால்
வடிவமைக்கபட்ட
எனக்காகவும். முடிந்தால்
என் மரணத்திற்கான
கண்ணீரை
இன்றே கொடுங்கள்
எனில் எனக்கு தெரியப் போவதில்லை
இறந்தபிறகு நீங்கள் எனை எத்தனை நேசித்தீர்களென்று.

கொஞ்சமும்
பெருந்தாத
முகமூடியது
எனக்கு
பிடிக்கவே
இல்லை.
இப்போதெல்லாம்
அவர்களால் நிறையவே
சிரிக்கிறேன் பயமாக
இருக்கிறதெனக்கு
அந்த மிருகம்
இறந்து விடுமோயென்று


ஆடையில்
திருத்தமில்லை அழுக்கோடு
நிர்வாணத்தின்
எல்லையில் நின்று
யாரின் புன்னகையையோ
அழகு பார்த்து
சிரிக்கிறான்
அத்தனை அன்பு அவன் கண்களில். எல்லாத் திருத்தங்களுடன் கண்டும் காணததுமாய் மெளனித்திருக்கிறேன்
நான்,
எனக்கு வாழக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறான்
அவனை நீங்கள் பைத்தியமெனச் சொல்லாதீர்கள் அவன்தான் கடவுளாயிருக்கிறான் எனக்கு.

எனக்கு பயமாக
இருக்கிறது
நீங்கள் என்னை
கொன்று விடுவீர்களோவென்று !
உங்களிடமிருந்து
தப்பித்து உயிர்வாழவே
உங்களை நேசிக்கிறேன்.

தான் சரியென்பதெல்லாம்
சரிதான்.
அது இங்கு
யாருக்கும்
தெரியாதென்பதே சரி.

இறக்கும் போது
யாருக்கும்
வலியாய்
விழியில்
ஈரமாய்
இருக்க விரும்பாத
சாத்தான்தான்
நான்,
தேடாதிர்கள் என்னை கடந்து செல்லுங்கள்
தேட தேட புறக்கணியுங்கள்
தனிமையில்
வாழப் பழக வேண்டும் நான்
நீங்கள் இறக்கும் முன்பே.ஆமென்..

1 comment:

ஹேமா said...

மனதை அழுத்தும் ஆழமான வாழ்வியல் சிந்தனை.கடக்கும் நொடியைச் சும்மா விடாமல் பிடித்து வைத்து ஏன்,எப்படி என்று கேட்பதால்தான் இத்தனை வரிகளும் வந்து கொட்டிக்கிடக்கின்றன.வாழ்த்துகள் ஜோ !

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...