Thursday 3 January 2013

மிருகம் ஈன்றிடும் தெய்வம்.



முகவரியற்ற துக்கம் நிகழந்த
வீட்டிற்கு
முகவரி சொல்லிட
சென்றார்கள் அவர்கள்,
அவள் இன்னும் 
உயிரோடுதான் 
இருந்தாள் ஆயிரமாயிரம்
கேள்விக்குறி வளைவுகளோடு !

சமுதாயத்தையே
மூடுமளவிற்கான
போர்வை போர்த்திருந்தார்கள்
அவள்
எச்சிலில் மிஞ்சிய மிருகத்தின்
உன்மை முகம் மறைத்திடவும்
சக மிருகத்தின் அடையாளம் தேடும் மிருகங்களும் வருமென்று !

அரசன் அனுப்பினானென்று
பாதுகாக்க தவறிய கல்லப் பருந்துகள்
ஆராய்ச்சிகளை தொடங்கின
மிருகத்தின் அடையாளம் தேடி
சலணமின்றி கேட்டுக் கொண்டே இருந்தார்கள்
அழுகை தீரும்வரை ஊர் வேடிக்கை பார்த்திருக்க
உளறிக்கொண்டிருந்தால் கண்ணீரில்
காகிதம் நிறம்பியதும்
விடை சொல்லியாக வேண்டிய
தனக்கான கேள்விகளுக்கான கேள்விகளை கேட்டு
கிளம்பிச் சென்றான் விடை கிடைத்தனவென்று

கூடியிருந்த கூட்டத்தில் புடவைகள் சரி செய்தவன்னம்
சாபமிட்டார்கள்
அவளைப் போன்றவர்கள்
வேறு வழியின்றி
மீசைகள் முறுக்கி நாங்கள் பாரதி வழிவந்தவர்கள்
பெண்ணியம் போற்றி பாதுகாக்க பிறந்தவர்களென்றது
கோசமிட்டது ஒரு பெருங்கூட்டம்

எட்டிப் பார்க்கவில்லையென்ற பழியை துடைக்க வந்து சென்றனர்
கரைக்கு காரணமான அனைத்து கரைவேட்டிகளும்
ஒவ்வொரு போராட்ட குழுக்களும்
தனித்தனி பத்திரிக்கை வைத்து
அவளை இன்னும் நடைபிணமாக்க
காத்திருப்பதாய் சொல்லாமல் சொல்லி சென்றார்கள்

எல்லாம் முடிந்தது மாலை வீடு திரும்பியவர்கள்
மனம் நொந்து பழித்து நாளையை எண்ணி பயந்து
உணவற்று உணர்வில் உறக்கமற்று கிடந்தனர் ஒரு சிலர்,
ஏனையோர் உண்டார்கள் உறங்கினார்கள்
நாளைகளைப் பற்றிய கவலையின்றி
எனில் ஏற்கனவே
நடந்திருந்தது பல சதை திண்ணும்
மிருகங்களுக்கான பாராட்டு விழாக்கள் பாதுகாப்பாய்

விடிந்ததும் தேநீர் கடை தொடங்கி தொலை தொடர்புகடை வரை
அவள் விற்பனை பொருளானால்
சில தினங்கள் விற்றபின்
அவள் வாழ்க்கையை வேடிக்கை பார்க்க தொடங்கியது
உலகம் வாடிக்கையான ஒன்றென

மீசை முறுக்கிய பாரதிகளை காணவில்லை
என் வீட்டில்தான் தேடியவன்னம் இருக்கிறாள்
ஆசைகளற்று அழுகையோடு உயிரற்ற உணர்வற்ற
சுதந்திரமற்ற சதையாய்
மிருகம் ஈன்றிடும் தெய்வமாய்.





1 comment:

ஹேமா said...

யாருக்கானால் என்ன உலகம் இதுதான்.இயல்போடு உருண்டோடி அடுத்த இடுக்கில் முட்டி மோதி பின்னும் ஓடும்.பாவப்பட்டவகளுக்கு மட்டுமே தண்டனையென சட்டம்.ஆனால் தண்டனை தரப்படாதவர்கள்தான் சமூகத்தைக் கட்டியிழுப்பதாகச் சொல்கிறார்கள்.அருமையாய் ஓடி விழுகிறது கவிதை ஜோ !

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...